சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'பயம்மா இருக்கும்மா'.. நீட் தேர்வு தோல்வி பீதி.. தீக்குளித்த மாணவி அனு உயிரிழப்பு.. சென்னை ஷாக்

29 நாட்கள் சிகிச்சை பலனின்றி மாணவி அனு உயிரிழந்தார்

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு பயத்தால் தீக்குளித்த சென்னை மாணவி 29 நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

நீட் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்றது... சுமார் 16 லட்சம் மாணவர்கள் நாடு முழுக்க இந்த தேர்வை எழுதினார்கள். நம் மாநிலத்திலும் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள்..

ஆனால், தேர்வு பயம் காரணமாக இதில் ஒருசிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடந்தது. அப்படி ஒரு மாணவிதான் அனு..

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு - கொரோனா தடுப்பூசி போட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு - கொரோனா தடுப்பூசி போட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

 செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் கமல்தாஸ்.. இவர் ஒரு ஆசிரியர்.. சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.. மனைவி பெயர் ஷீபா... இவரும் டீச்சர்.. கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.. இவர்களுக்கு ஒரே மகள் அனு.. 17 வயதாகிறது.

 பெற்றோர்

பெற்றோர்

சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்... சின்ன வயதில் இருந்தே அனுவுக்கு டாக்டராக வேண்டும் என்று ஆசை அதிகமாக இருந்தது.. அதனால், கடந்த மாதம் 12-ந்தேதி நீட் தேர்வு எழுதினார்...தேர்வுக்கு பிறகு பெற்றோரிடம் தேர்வு சரியாக எழுதவில்லை என்று கலங்கி சொல்லி உள்ளார்.. மேலும், பாஸ் ஆகிவிடுவேனா? பயமா இருக்கு? ரிசல்ட் எப்படி வருமோ தெரியலையே? பயமா இருக்கும்மா" என்று பெற்றோரிடம் புலம்பி கொண்டே இருந்துள்ளார்.

அதிருப்தி

அதிருப்தி

தேர்வு எழுதி 3 நாள் ஆகியும் மனசோர்வுடனும், வருத்தத்துடனும் இருந்துள்ளார்.. சரியாக சாப்பிடவுமில்லை.. இந்நிலையில், கடந்த மாதம் 16-ந்தேதி அனுவின் பெற்றோர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டனர்... அனு மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்... அப்போது நீட் தேர்வு தோல்வி பயம் காரணமாக அனு தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து, அனுவை மீட்டுக் கொண்டு போய் வந்தனர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

அப்போதே 40 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுவிட்டது.. முதலில் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்... பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுவை அனுமதித்தனர்.. அங்கு இத்தனை நாளும் தீவிரமாக சிகிச்சை நடந்து வந்தது.. 28 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலனின்றி அனு நேற்றிரவு உயிரிழந்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Fear of failing NEET exam and student Anu killed in fire near Chennai Fear of failing NEET exam and student Anu killed in fire near Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X