பட்டாசு வெடிக்கும் போது ஜாலிதான்..கண்ணில் பட்டால் காலிதான்.. டாக்டர்கள் சொல்லும் அறிவுரையை கேளுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. பல ஊர்களிலும் இப்போதே வெடிச்சத்தம் காதை பிளக்கிறது. பட்டாசு வெடிப்பதும் அதை வேடிக்கை பார்ப்பதும் ஜாலியான விசயம் என்றாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொஞ்சம் கவனம் சிதறினாலும் கண்கள் காலியாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்றுவது அவசியம்.

தீபாவளி நாளில் பட்டாசு வெடித்தால்தான் பண்டிகை கொண்டாடிய மன திருப்தி ஏற்படும். வித விதமாக ரகம் ரகமாக பட்டாசுகள் இப்போது பல வண்ணங்களில் வான வேடிக்கை காட்டுகின்றன. கம்பி மத்தாப்புகள் இப்போதெல்லாம் பல வண்ணங்களில் வருகின்றன.

கைகளில் பிடித்து வெடிக்கும் பென்சில் வெடிகள் சில நேரங்களில் பட்டென வெடித்து காயத்தை ஏற்படுத்துகின்றன. பூச்சட்டி கூட எதிர்பாராத நேரத்தில் வெடித்து பதம் பார்த்து விடும். பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் நேரத்தில் வெடியினால் காயம் ஏற்பட்டால் மொத்த சந்தோஷத்தையும் கெடுத்து விடும்.

பண்டிகை காயங்கள்

பண்டிகை காயங்கள்

தீபாவளி கொண்டாட்ட காலத்தின்போது பட்டாசுகளாலும், வாணவேடிக்கைகளாலும் நிகழ்கின்ற பெரும்பான்மையான காயங்கள், கண்கள் மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் மிகக் கடுமையான காயங்களும் ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகள் வெடிப்பதன் காரணமாக, பிரதானமாக கண்களில் காயங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுவதாக அறியப்படுகிறது. உண்மையில் கைகள் மற்றும் விரல்களுக்குப் பிறகு மிக அதிகமாக பாதிக்கப்படுகின்ற உடற்பகுதியாக இருப்பது கண்கள் தான்.

கண்ணில் காயங்கள்

கண்ணில் காயங்கள்

மத்தாப்புகள் மற்றும் சங்குச்சக்கரத்தோடு வெடி ஆகியவற்றால் ஏற்படுகின்றன. இவைகளை வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக கண்களில் காயங்கள் ஏற்படுகின்றன. அதை தவிர்ப்பது எப்படி? அப்படி கண்களில் காயம் ஏற்பட்டால் உடனடியாக நாம் என்ன செய்யவேண்டும் என்பன போன்ற பல விஷயங்கள் பற்றி கண் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆபத்தான வெடிகள்

ஆபத்தான வெடிகள்

கலர் கலர் மத்தாப்புகள் மிக ஆபத்தானவையாகும். மத்தாப்பு கொளுத்தும் போது வெளிவருகின்ற புகையானது, தொண்டை அழற்சியோடு, அதில் பிற தொற்றுகளையும் விளைவிக்கக்கூடும். எனவே, இத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகும்.

என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

பட்டாசு வெடிப்பதன் மூலம் காயங்கள் ஏற்படுவதை தடுக்க திறந்தநிலை இடங்களில் மட்டுமே பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். முடிந்த அளவிற்கு பாதுகாப்பாக கண்களுக்கு கவசங்களை அணிந்திருக்கவும். பட்டாசுகளை வெடித்தபிறகு சுத்தமான நீரைக்கொண்டு கைகளைக் கழுவவும். எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் தயார்நிலையில் நீர் மற்றும் மணலை வாளிகளில் வைத்திருக்கவும். பட்டாசுகள், மத்தாப்புகள் மற்றும் வாணவேடிக்கைகளை குழந்தைகள் கைகளுக்கு எட்டாதவாறு தள்ளி ஒரு பாதுகாப்பான இடத்தில் மூடிய பெட்டிக்குள் வைத்திருக்கவும். பட்டாசுகளை வெடிக்கும்போது முகம், தலைமுடி மற்றும் ஆடைகளில் படாதவாறு தள்ளி நின்று வெடிக்கவும்.

கண்களுக்கு பாதுகாப்பு

கண்களுக்கு பாதுகாப்பு

பட்டாசுகளை கொளுத்தும்போது கையளவு தூரத்தை பராமரிக்கவும். அருகில் நின்று கவனித்தீர்களென்றால் குறைந்தது 5 மீட்டர் தூரம் தள்ளி நிற்கவும். பட்டாசுகளை வெடிக்கச் செல்வதற்கு முன்பு உங்களது கான்டாக்ட் லென்சுகளை கண்களிலிருந்து அகற்றிவிடவும். உங்களது கண்களை ஒரு சிறப்பான வழியில் பாதுகாக்கக்கூடிய கண் கண்ணாடிகளை அதற்குப் பதிலாக பயன்படுத்தவும். வெடிக்காத பட்டாசுகளை தூக்கியெறிவதற்கு முன்பு தண்ணீர் உள்ள வாளிக்குள் அவைகளை முக்கி எடுத்து வீசி எரியவும்.

 கண்காணிப்பு அவசியம்

கண்காணிப்பு அவசியம்

எரிந்து கொண்டிருக்கின்ற பட்டாசுகள் மீது கவனக்குறைவாக கால்களை வைத்து விடுவதிலிருந்து தவிர்க்க நல்ல காலணிகளை தவறாது அணிந்திருக்கவும். பண்டிகை நாளில் பட்டாசுகளை குழந்தைகள் வெடிக்கும் போது பெரியவர்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டும். எந்தவொரு காயத்தையும் லேசானதாக கருதாதீர்கள். மருத்துவரை சந்தித்து உரிய சிகிச்சை உதவியைப் பெறுங்கள்.

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

பட்டாசு வெடித்து கண்களில் காயம் ஏற்பட்டால் முதலில் சுத்தமான துணியை நீரில் நனைத்து கண்களை துடைக்க வேண்டும். அதன் பிறகு கண்கள் மீது பருத்தி துணியை வைத்து மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும் என்று கண் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பட்டாசுகளோடு விளையாட குழந்தைகளை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். பட்டாசு மத்தாப்பினால் கண்களில் காயம் ஏற்பட்டால் உடனடியாக கண்களை தேய்க்கவோ அல்லது கண்களை சொறியவோ கூடாது. பாதிக்கப்பட்ட கண்ணை தேய்த்தால் அது இரத்தக் கசிவை மேலும் அதிகரிக்கக்கூடும் அல்லது காயத்தை மோசமாக்கக்கூடும்.

தண்ணீர் கொண்டு கழுவுங்கள்

தண்ணீர் கொண்டு கழுவுங்கள்

வெடி விபத்தினால் காயம் ஏற்பட்டால் உங்கள் கண்களையும், முகத்தையும் உடனடியாக கழுவுங்கள் கண்ணில் எரிச்சல் அல்லது அந்நியப் பொருள் இருக்குமானால், கண் இமைகளை நன்கு திறந்து வைத்து, தொடர்ச்சியாக நீரைக்கொண்டு கண்களை அலச வேண்டும். கண்களுக்குள் ஏதாவது வேதிப்பொருள் நுழைந்திருக்குமானால், 30 நிமிடங்களுக்கு நீரைக்கொண்டு உடனடியாக கண்களையும் மற்றும் கண் இமைகளுக்கு கீழேயும் நன்கு அலசவும். ஒரு கண் மருத்துவரிடம் உடனடியாக சிகிச்சைக்கு செல்லவும். கண்ணில் துகள் எதுவும் சிக்கியிருக்குமானால் அல்லது பெரிதாக இருக்குமானால் அதை நீங்களே அகற்ற முயற்சிக்காதீர்கள். கண்களை மூடிய நிலையில் வைத்து உடனடியாக கண் மருத்துவரிடம் செல்லவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+