மாவட்டங்களிடையே பயணிக்க தடை.. பாஸ் கட்டாயம்.. தமிழ்நாடு லாக்டவுன் எப்படி இருந்து தெரியும்ல? ரீவைண்ட்
சென்னை: சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் போடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது போல் லாக்டவுன் போட்ட போது மக்கள் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார்கள் என்பது குறித்து பார்ப்போம்.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் வுகான் மாகாணத்தில் கொரோனா எனும் வைரஸ் நோய் வேகமாக பரவியது. இந்த வைரஸ் சீனாவிலிருந்து 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது. இது மனிதர்கள் தும்மும் போதும் இருமும் போது பரவுவதால் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி கேரளாவில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அன்று முதல் இந்தியாவில் கொரோனா வேகமாக பரவியது. பல இடங்களில் உயிரிழப்புகளையும் கொரோனா ஏற்படுத்தியதால் இந்த தொற்று பரவுவதை தடுக்க மருத்துவர்கள் குழுவினர் ஊரடங்கு உத்தரவிற்கு அறிவுறுத்தினர்.
அதன்படி தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இரு வாரங்கள், இரு வாரங்களாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தன. தமிழகத்திலும் இந்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தனியார், அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் ஐடி நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் ஆப்ஷனை ஊழியர்களுக்கு கொடுத்தனர்.

காய்கறி, மளிகை கடைகள்
பொதுமக்கள் காய்கறி, மளிகை பொருட்களை போதுமான முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதனால் தமிழக அரசு சார்பில் சின்ன யானை எனப்படும் டாட்டர் ஏசர் வண்டிகளில் காய்கறிகள், பழங்கள் தம் இருப்பிடத்திற்கே வந்தன. வீட்டிலிருக்கும் போதும் மாஸ்க் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

காவல் துறை
மருத்துவம், மின்சாரம், காவல் துறை உள்ளிட்ட அத்தியாவசிய பணி செய்வோர் தவிர்த்து மற்றவர்கள் போதிய காரணமின்றி வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா தலங்கள், திருப்பதி, பழனி, திருச்செந்தூர், தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற கோயில்கள் மூடப்பட்டன. கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அது போல் கொடைக்கானல், நீலகிரி, ஏலகிரி, ஏற்காடு, கடற்கரைகள், புதுவை உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.

சுற்றுலா தலங்கள்
உள்ளூர் கடற்கரைகளில் பொழுதை கழிக்கக் கூட மக்களுக்கு அனுமதி இல்லை. அது போல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டது. லாக்டவுனை முன்னிட்டு கூலித் தொழிலாளர்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களை விட்டு சொந்த ஊர்களுக்கு பயணிக்கத் தொடங்கினர். பேருந்துகள், ரயில்கள் இல்லாததால் மக்கள் நடந்தே சென்றனர். விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஒவ்வொரு முறையும் கொரோனாவின் தாக்கத்தை வைத்து ஊடரங்கில் தளர்வுகளும் கட்டுப்பாடுகளையும் விதித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்பை கணக்கில் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகளையும் ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளையும் அறிவித்தது. இதனால் பொது இடங்களில் பின்பற்ற கூடிய அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

மாவட்டங்கள்
அதன்படி தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. இரு சக்கர வாகனம், கார் உள்ளிட்டவை மாவட்டம் டூ மாவட்டங்களுக்கு இயக்க அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டு அதை செக் போஸ்ட்டில் போலீஸாரிடம் காட்டிவிட்டு பிறகு செல்ல வேண்டும். அவ்வாறு அனுமதி சீட்டு இல்லாதோர் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த லாக்டவுனால் ஏராளமானோர் வேலையை இழந்தனர். ஏழை எளிய மக்கள் ஒரு வேலை சாப்பிடவே கஷ்டப்பட்டனர். தன்னார்வலர்கள் பலர் ஏழை எளிய மக்கள், சாலையோர மக்களுக்கு உணவுகளை வழங்கி உதவினர். ரத்த உறவுகளின் திருமணங்கள், இறப்பு சம்பவங்களில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

திருமண மண்டபங்கள் மூடல்
திருமண மண்டபங்களும் கோயில்களும் மூடப்பட்டதால் மூடியிருந்த கோயில் வாசல்களில் திருமணங்கள் நடந்தன. இந்த காலகட்டத்தில் குழந்தை திருமணங்கள் நிறைய நடந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கே பூட்டு போட்டது போல் இந்த லாக்டவுன் இருந்தது. படிப்படியாக கடைகள் இத்தனை மணி நேரம் திறந்திருக்கலாம், மக்கள் பொருட்களை இத்தனை மணிக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் என தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட நகரங்களில் நிறைய வீடுகள் காலி செய்யப்பட்டு பூட்டியே கிடந்தன. கொரோனா காலகட்டத்தில் நிறைய பேருக்கு வேலை இழப்பும் ஊதிய குறைப்பும் நிகழ்ந்தது. பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தன. அது போல் பாட்டு, நடனம், இசை உள்ளிட்ட வகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.

ஆன்லைன் வகுப்புகள்
பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளால் செல்போன் வாங்க முடியாமல் ஏழை எளிய மாணவர்கள் கடும் அவதிப்பட்டனர். அது போல் ஏராளமான தமிழர்கள் உள்பட இந்தியர்கள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் சிக்கி அவர்களை மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மீட்டு கொண்டு வந்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் தங்கள் ரத்த உறவினர்களின் இறப்பை கூட சிலர் வீடியோ கால் மூலம் பார்த்து வேதனை அடைந்தனர். கொரோனாவால் யாராவது உயிரிழந்தால் அவர்களுடைய உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசாங்கமே நல்லடக்கம் செய்த நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் தடுப்பூசி என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இரு தவணைகளாக மக்கள் செலுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியால் கொரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து ஊரடங்கு உத்தரவுகளும் கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்வுகள் செய்யப்பட்டு தற்போது கடந்த சில மாதங்களாக முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் லாக்டவுன் போடப்படுமா என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications