நீட் தேர்வு.. 200 கேள்விகளில் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் 162 வினாக்கள்.. பள்ளி கல்வித்துறை தகவல்
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவு படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
நாடு முழுவதும் 497 நகரங்களில் தேர்வு நடந்தன. மொத்தம் 18 லட்சத்து 70 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் தமிழகத்தில் மட்டும்1.40 லட்சம் பேர் எழுதினர். மொத்தம் 59 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.

தமிழக பாடத்திட்டத்தில் அதிக கேள்வி
இந்த நீட் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல், ஆகிய 4 பாடங்களில் இருந்து தலா 50 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இதில் 180 கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளிக்க வேண்டும். 20 கேள்விகளை சாய்ஸ் முறையில் விட்டு விடலாம். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து அதிகளவில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

162 கேள்விகள்
அதன்படி தமிழக பாடத்திட்டத்தில் இருந்து மொத்தம் 162 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. மீதமுள்ள 38 கேள்விகள் என்சிஇஆர்டி பாடப்புத்தகத்திலிருந்து இடம்பெற்றிருந்தது. மேலும் பாடவாரியாக கேட்கப்பட்ட 50 கேள்விகளில் வேதியியல் பாடத்தின் 40 கேள்விகள், இயற்பியல் பாடத்தில் 48 கேள்விகள், தாவரவியல், விலங்கியல் பாடத்தில் மொத்தம் 74 கேள்விகள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து இடம்பெற்றுள்ளன.

சமஅளவில் கேள்விகள்
மேலும் 11, 12ம் வகுப்பில் இருந்து சமஅளவில் கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. இதனால் 11, 12 ஆம் வகுப்பின் மாநில பாடத்திட்டத்தை நன்றாக படித்த மாணவர்கள் நீட் தேர்வை சிறப்பாக எழுதி இருக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் சிரமப்படுவதாக பல்வேறு தரப்பினர் கூறினர். மேலும் கடந்த 2018ல் தமிழ்நாட்டில் புதியதாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது மொத்தமுள்ள 200 கேள்விகளில் 162 கேள்விகள் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.
Recommended Video

நீட் விலக்கு மசோதா நிலவரம் என்ன?
இதற்கிடையே தான் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, ஆயுஷ் அமைச்சகத்தின் கருத்துகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு அளிக்கும் பதிலின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications