நான் “சீனியர்”.. சீனுக்கு வந்த முன்னாள் சபாநாயகர்! ஜெ சொன்ன “100 ஆண்டு” - லிஸ்டு போட்ட தனபால்
சென்னை: அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவடைந்து 51 வது ஆண்டு தொடங்கும் நிலையில் வாழ்த்து தெரிவித்த சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் தனபால், அதிமுகவில் தான் இணைந்தது தொடங்கி வகித்த பதவிகள் வரை அனைத்தையும் பட்டியலிட்டு இருக்கிறார்.
அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவடைந்து 51 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் சபாநாயகர் தனபாலும் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவடைந்து 51வது ஆண்டு தொடங்குவதை அடுத்து இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் விழாவிற்கு நடைபெற்றது.

பொன்விழா
காலை 9 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமைக் அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, கட்சி கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்.

அதிமுக கொண்டாட்டம்
இதனை முன்னிட்டு, அதிமுகவின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களில் உள்ள கிளை, வார்டு, வட்ட அளவில் உள்ள அதிமுக கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும், கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கழகக் கொடியினை ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டது.

தனபால் ட்வீட்
இந்த நிலையில் இதுகுறித்து அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் தனபால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "அதிமுக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கபட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று பொன் விழாவை நிறைவு செய்து 51வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது, அதன் ஆரம்ப கால உறுப்பினர் என்ற முறையில் எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஜெயலலிதா சொன்னது
இப்படிப்பட்ட பிரம்மாண்டமான மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும், அமைச்சராகவும், பேரவை துணை தலைவராகவும், அதிக காலம் பேரவைத் தலைவராகவும் பணியாற்றியதையும், தற்போதும் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருவதையும் என் வாழ்நாளில் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாக கருதுகிறேன். அம்மா அவர்கள் சட்டமன்றத்திலே சூழுரைத்தது போல இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டு காலம் இருந்து, ஆட்சி செய்து, மக்களுக்கு சேவை அளிக்கும்." என்றார்.
-
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
தவெகவில் இணையப் போகிறீர்களா?.. 25 எம்.எல்.ஏக்களில் இப்போது 17 பேர் தான்.. டென்ஷனாகிய சி.வி.சண்முகம் -
“Deep Silent Mode”ல் தலைவர்கள்?.. உதயநிதி - எடப்பாடிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications