சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கஜா புயலுக்கு எதிராக களமிறங்கும் டெக்னாலஜி.. மக்களுக்கு கரம் கொடுக்கும் கூகுளின் சிறப்பு பக்கம்!

கஜா புயல் பற்றி அனைத்து விவரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ள வசதியாக கூகுள் சிறப்பு பக்கம் ஒன்றை உருவாக்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜா புயலுக்காக கூகுள் உருவாக்கி இருக்கும் சிறப்பு பக்கம்- வீடியோ

    சென்னை: கஜா புயல் பற்றி அனைத்து விவரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ள வசதியாக கூகுள் சிறப்பு பக்கம் ஒன்றை உருவாக்கி உள்ளது.

    கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளது. கடலூர் பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்.

    கஜா புயலால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னை,கடலூர், நாகை, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக கூகுள் களமிறங்கி உள்ளது.

    [கஜா புயலால் மோசமான வானிலை.. சென்னை, தூத்துக்குடியில் விமான சேவை பாதிப்பு]

    கஜா புயல்

    கஜா புயல்

    கஜா புயல் பற்றி அனைத்து விவரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ள வசதியாக கூகுள் சிறப்பு பக்கம் ஒன்றை உருவாக்கி உள்ளது. gaja storm என்று கூகுளில் சர்ச் செய்தால் முதல் பதிலாக கூகுள் பக்கம்தான் திறக்கும். அதே சமயம் மக்கள் '' https://bit.ly/2DziHab '' என்ற பக்கத்திற்கு சென்றும் அந்த தகவல்களை பெறலாம். இதில் கஜா புயல் குறித்து புதிய தகவல்கள் அனைத்தும் கிடைக்கும்.

    என்ன உதவி

    என்ன உதவி


    இதில் கூகுள் பக்கம் நிறைய முக்கியமான தகவல்களை நமக்கு வழங்குகிறது.

    1.கஜா புயல் எப்போது கரையை கடக்கும்.

    2. கஜா புயல் தற்போது எங்கே உள்ளது.

    3. கஜா புயல் தற்போது எவ்வளவு வேகத்தில் உள்ளது.

    4. கஜா புயல் எந்த பகுதியில் கரையை கடக்கும் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை கூகுள் இந்த பக்கம் மூலம் நமக்கு தெரிவிக்கிறது.

    கூகுள் படங்கள்

    கூகுள் படங்கள்

    அதேபோல் இந்த பக்கம் ஒரு கூகுள் மேப்ஸ் பக்கத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். அந்த மேப்பை அழுத்தும் போது புயல் எங்கே தாக்கும் என்று படத்தை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். எங்கு எல்லாம் புயல் பாதிப்பு இருக்குமோ அங்கு எல்லாம் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டு இருக்கும். இது மக்களுக்கு புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.

    உலகம் முழுக்க

    உலகம் முழுக்க

    அது மட்டுமில்லாமல் உலகம் முழுக்க உள்ள பிற வானிலை ஆய்வு மையங்கள் இந்த புயலை குறித்து என்ன சொல்கிறது என்றும் அறிவிப்புகளை வெளியிடும். நாசா, நார்வே, கனடா உள்ளிட்ட நாடுகளில் வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது. இதைப்பற்றி என்ன செய்திகள் வருகிறது என்று தகவல்களும் இதில் அடங்கி உள்ளது.

    English summary
    Gaja Storm: Google creates a special page to help people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X