நீ தமிழக மகன்.. நான் தமிழ்நாட்டு மகள்! அண்ணாமலைக்கு இடைத்தேர்தலில் காயத்ரி சவால் - ஒருமையில் ட்வீட்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டால் அவரை எதிர்த்து தான் போட்டியிடுவதாக காயத்ரி ரகுராம் சவால் விடுத்து இருக்கிறார். அண்ணாமலையை தமிழகத்தின் மகன் என்றும், தன்னை தமிழ்நாட்டின் மகள் என்றும் அவர் ட்விட்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்.
சூர்யா சிவா - டெய்சி ஆடியோ தொடர்பாக விமர்சனம் செய்த காய்த்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார் அண்ணாமலை.
இதனை அடுத்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தமிழ்நாடு பாஜக நிர்வாகம் மீதும் அண்ணாமலை மீதும் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை அவர் முன்வைத்து வந்தார்.

காயத்ரி குற்றச்சாட்டு
150 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் அண்ணாமலை தன்னை பற்றி பேசி அவமானப்படுத்தியதாக காய்த்ரி ரகுராம் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு பாஜகவில் இருந்தே தான் விலகுவதாக அறிவித்தார் காய்த்ரி ரகுராம். அதன் பிறகு காய்த்ரி ரகுராமின் அண்ணாமலை மீதான விமர்சனமும் அதிகரித்து இருக்கிறது.

ட்விட்டரில் கருத்து
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் காய்த்ரி ரகுராம் பரபரப்பு கருத்தை முன்வைத்து இருக்கிறார். அதில், "வாரிசு அரசியலை ஏற்றுக் கொள்கிறோம். எந்த உழைப்பும் இல்லாமல் நேரடியா தலைவர் எப்படி? வளர்ப்பு மகன் அரசியலும் வாரிசு அரசியல் தான். ஒருவரைக் காப்பாற்ற, அனைவரும் ஹனிட்ராப்பில் சிக்கிக் கொள்கிறார்கள்.

புகழ் கர்நாடகாவில் மட்டுமே
அனுபவம் இல்லாததால் சாவடியில் மற்றும் களத்தில் எந்த பலத்தையும் காட்டவில்லை ஆனால் மண்டல தலைவர் மற்றும் மாவட்ட தலைவராக அனைவரையும் "உன்னை பதவியை விட்டு தூக்கிடுவேன்" மிரட்டல் விடு.. வேலையும் புகழும் கர்நாடகாவில் மட்டுமே. ஒருவருக்கு கட்சியில் சேர்ந்தவுடன் எம்எல்ஏ சீட்டு, கட்சியில் சேர்ந்தவுடன் மாநில துணைத்தலைவர், கட்சியில் சேர்ந்தவுடன் சீட் பங்கீடு / கூட்டணி என்று பேச பதவி கொடுக்கப்பட்ட தத்தெடுக்கப்பட்ட மகன் மட்டுமே இவ்வளவு சுயநலவாதி இருக்க முடியும்.

ஹனிடிராப் மூலம் தீங்கு
அப்படியானால், கட்சியில் அனைவரும் அர்ப்பணிப்புடன் வேலை செய்யும் கடின உழைப்பாளிகள். சுய விளம்பரத்திற்காக இவ்வளவு பணம் கொடுத்துவிட்டு, ஹனிட்ராப் மூலம் மற்றவர்களுக்கு தீங்கு செய்த, தவறான செய்திகளைப் பரப்புவதற்கும் மற்றவர்களைப் பற்றி மோசமாகப் பேசுவதற்கும் உறவினர்களுக்கு அதிக அதிகாரம் கொடுத்த பிறகு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வார் ரூம் சர்ச்சை
இன்னும் வார்ரூம் சுயவிளம்பரம் நடக்கிறது. சாதாரண விவசாயிக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது? வளர்ப்பு மகனுக்கு மட்டுமே இவ்வளவு ஆதரவு உள்ளது. மற்ற குழந்தைகள் அனாதையா? தமிழ்நாட்டில் எந்த அனுபவமும் இல்லை, தமிழ்நாட்டின் மீது அன்பும் இல்லை, தமிழன் என்ற பெருமையும் இல்லை. இந்த பெருமைக்குரிய கனடிகாவிற்கு. அவர் வளர்ப்பு மகன் என்பதால் எல்லாம் எளிதாக இருந்தது. நான் நீதிக்காக குரல் கொடுத்தது.

கர்நாடகா சிங்கம்
அனைத்து பெண்களுக்கும் பாதிக்கப்பட்ட தலைவர்களுக்கும் நீதி. ஏனெனில் இது இப்போது வளர்ப்பு மகன் வாரிசு அரசியலைப் பற்றி பேசுகிறார். அது நகைச்சுவை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிஜேபி ஆரோக்கியமான அரசியல் ஆரோக்கியமான மோடி ஜி திட்டங்கள் மோடிஜியின் சாதனைகள் மூலம் வளர்ச்சி. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மோடிஜியின் திட்டங்கள் சாதனைகளைப் புறக்கணித்து ஒரு கர்நாடகா சிங்கம் ஹீரோ போல வார்ரூமில் அட்டூழியங்கள் சுய விளம்பரம் மட்டுமே." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அண்ணாமலைக்கு சவால்
இந்த நிலையில் இன்று ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருக்கும் காயத்ரி ரகுராம், "ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீங்க தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடு ஆ என்று பார்ப்போம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications