அதிரடி! கோகுல்ராஜ் கொலை வழக்கில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசிட்..ஏன்?
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி மீது இன்று சென்னை உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்த நிலையில் வழக்கு விசாரணை ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு ‛ஸ்பாட் விசிட்' செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் கோகுல்ராஜ் கொலை வழக்கில் நேரடியாக நீதிபதிகள் களமிறங்கும் நிலையில் பரபரப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். இவரும் சுவாதி என்பவரும் காதலித்தனர். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் கடந்த 2015ல் ஜூன் மாதம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு கோகுல் ராஜ், சுவாதி மற்றும் சுவாதியின் தோழி ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது கோகுல்ராஜ் கோவிலில் இருந்து கடத்தி கொலை செய்யப்பட்டார். கிழக்கு தொட்டிபாளையம் தண்டவாளம் அருகே அவரது உடல் கிடந்தது.

10 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். யுவராஜ் உள்பட 10 பேருக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் வழக்கில் 5 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

பிறழ் சாட்சியாக சுவாதி
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது சுவாதி ஆஜரானார். பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது, ‛‛புத்தகம் மற்றும் குழந்தை மீது சத்தியம் செய்து உண்மையை கூறுங்கள்'' என நீதிபதிகள் கூறினர். இருப்பினும் சுவாதி சரியாக பதில் அளிக்கவில்லை. பெரும்பலான கேள்விகளுக்கு தெரியாது என அவர் கூறினார்.

குற்றச்சாட்டு பதிவு
மேலும் சிசிடிவி உள்ள பெண் அவராக இருந்தும் கூட அதனை சுவாதி மறுத்தார். இது புது தலைவலியை ஏற்படுத்தியது. உண்மையை சொல்ல சுவாதி மறுப்பதாக நீதிமன்றம் கருதியது. மேலும் சுவாதி மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தான் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கோகுல் ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சி சுவாதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு வழக்கு விசாரணை ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவிலுக்கு செல்லும் நீதிபதிகள்
மேலும் கோகுல்ராஜ் கொலை வழக்கில் நேரில் சென்று ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்தனர். அதன்படி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். கோவில் உள்ளே வரும் வழி, வெளியே வரும் வழி பற்றி புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதால் இந்த முடிவை நீதிபதிகள் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு ஜனவரி 22ல் நீதிபதிகள் நேரில் சென்று பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீதிபதிகள் பெரும்பாலும் வழக்கு தொடர்பான ஸ்பாட் விசிட் செய்யமாட்டார்கள். ஆனால் இந்த வழக்கில் நீதிபதிகள் நேரடியாக களமிறங்க முடிவு செய்துள்ளனர். இது வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications