வாடகைக்கு போறீங்களா? சென்னையில் லீஸூக்கு வீடு தேடறீங்களா? கோடி கோடியாய் பணம் அள்ளிய புள்ளி தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வாடகைக்கு வீடு தேடுபவர்களும் சரி, குத்தகைக்கு வீடு தேடுபவர்களும் சரி, பெரும்பாலும் டுபாக்கூர் தரகர்களால் ஏமாந்துவிடும் பரிதாபத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள்.. அதிலும், வீடு வாடகைக்கு இருப்பவர்கள், அந்த வீட்டை உள்வாடகைக்கு விட்டும் மோசடி செய்கிறார்கள்.. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளில் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்தவாறே உள்ளது.. இப்போதும் ஒருவர் சிக்கியிருக்கிறார்.

எப்போதுமே ஒரு வீட்டுக்கு வாடகைக்கு குடியிருக்க சென்றால், அந்த வீட்டை குடியிருக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை குடோனா பயன்படுத்துவதோ? அல்லது சட்டவிரோத பொருட்களை கொண்டுவந்து வைத்துக் கொள்வதோ சட்டப்படி தவறாகும். குட்கா, வெடிகுண்டு இதெல்லாம் குடியிருக்கும் வீட்டில் வைக்ககூடாது.

Chennai House Rentals Lease

அதேபோல ஒரு வீட்டில் எத்தனை பேர் குடியிருக்க போகிறார்கள்? குடும்பமா? பேச்சிலரா? வாடகை தேதி என்ன? என்பதெல்லாம் முன்கூட்டியே ஹவுஸ் ஓனரிடம் பேசிக்கொள்ள வேண்டும்.

வாடகைதாரர்கள் - புரோக்கர்கள்

அதேபோல, வீட்டை காலி செய்ய வேண்டும் என்று வாடகைதாரர்கள் சொன்னாரோ, அல்லது வீட்டை காலி செய்ய சொல்லி, ஹவுஸ்ஓனர்கள் சொன்னாலோ, 3 மாத நோட்டீஸ் தரவேண்டும். சட்டப்பூர்வமாக இதனை சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

ஹவுஸ் ஓனர்களைவிட, வாடகைதாரர்களுக்கு மட்டுமே அதிக அதிகாரம் உள்ளது என்பதால் அவர்களை திடீரென வெளியே அனுப்ப முடியாது.. அப்படி அனுப்பினால் அது சட்டவிரோதமாகும். அதனால் இரு தரப்பிலுமே கவனமாக இருக்க வேண்டும்.

லீசுக்கு வீடு

காரணம், ஹவுஸ்ஓனர்கள் வெளியூர்களில் இருக்கும்பட்சத்தில், போலி ஆவணத்தை தயாரித்து, வீட்டையே விற்கும் முயற்சியும் ஆங்காங்கே நடக்கிறது.. அதாவது வீட்டுக்கான பவர் தங்களிடம்தான் உள்ளது என்பது போன்ற போலியான ஆவணத்தை இவர்களே தயாரித்து கொள்வதால், விழிப்புணர்வு அவசியமாகிறது.

வீடு புரோக்கருக்கு கமிஷன் தரவேண்டியிருக்கிறதே என்று ஆன்லைனிலேயே பலரும் வீடு தேடுகிறார்கள். இதற்கெனவே உள்ள செயலிகளில், வீடியோக்களுடன் போட்டோக்களை பார்த்து முடிவு செய்கிறார்கள்..

வீடு பிடித்துவிட்டால், அட்வான்ஸ் முதல் அக்ரிமென்ட் வரை எல்லாமே ஆன்லைனிலேயே நடக்கிறது. பல இடங்களில் ஹவுஸ் ஓனர்கள் வெளிநாடுகளில் இருப்பதால், ஆன்லைனையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இதெல்லாம்தான் ஏமாறுவதற்கு காரணமாகி விடுகின்றன..

சென்னை வளசரவாக்கம்

இதோ, சென்னை வளசரவாக்கத்தில், குத்தகைக்கு வீடு தேடுபவர்களை குறி வைத்து கும்பல் ஒன்று ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கிறதாம்..

ஸ்ரீதேவிகுப்பம் மெயின் ரோட்டில் பிரேம்குமார், ஹெலன் ரோஸ் என்பவர்களை பொறுப்பாளர்களாக கொண்டு, இமயம் ஹோம்ஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது..

இந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள், சென்னையில் வீட்டு உரிமையாளர்களை தொடர்பு கொண்டு வாடகை மற்றும் குத்தகைக்கு ஆட்களை பிடித்து தருவதாக சொல்லி அட்வான்ஸ் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்களாம்.. பிறகு, லீஸ் மற்றும் வாடகைக்கு வீடு தேடுபவர்களிடம், தங்கள் நிறுவனத்தின் சார்பில் வீடுகள் பெற்றுத்தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.

தூண்டப்படும் ஆசைகள்

பின்னர், அந்த வீடுகளை போட்டோ எடுத்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி அழகான வீடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன என்று ஆசையை தூண்டி 5 முதல் 15 லட்சம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு லீசுக்கும் விட்டுள்ளனர். இதில் பல ஆயிரம் ரூபாய்களை பெற்றுக்கொண்டு உள் வாடகைக்கும் விட்டு சம்பாதித்திருக்கிறார்கள்.

இதற்கு நடுவில், ஹவுஸ் ஓனர்கள் கேட்ட வாடகை பணத்தையும் சரியாக அனுப்பி வைத்துள்ளனர்.. இதனால் இவர்கள் மீது எந்த சந்தேகமும் ஹவுஸ் ஓனர்கள் வரவே இல்லை..

2 அட்வான்ஸ், 2 வாடகை

ஆனால், வாடகைதாரர்கள், குத்தகைதாரர்கள் வீட்டை காலி செய்வதாக சொன்னால், அவர்கள் தந்த பணத்தை திருப்பி தருவதில்லையாம். அடுத்த நபர்கள் யாராவது குடிவந்தால், அவர்களது அட்வான்ஸ் பணத்தை வாங்கி தருகிறோம் என்று ஏமாற்றி வந்துள்ளனர். அப்படியே வேறு நபர்கள் வந்தாலும்கூட, பணத்தை திருப்பி தருவதில்லையாம்.

இப்படியே ஒரு வீட்டுக்கு 2 லீஸ், 2 வாடகை, 2 அட்வான்ஸ், என்று பணத்தை கோடிக்கணக்கில் கறந்துள்ளனர்.. ஆனால் இது எதுவுமே உண்மையான ஹவுஸ் ஓனர்களுக்கு தெரியாமலேயே இருந்துள்ளது.

ஒரே நாளில் 9 புகார்கள்

இந்நிலையில்தான், திடீரென வளசரவாக்கம் நிறுவனம் மூடப்பட்டதுமே, பணம் தந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போன் செய்தாலும் பதில் இல்லாததால், உடனே வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்துள்ளனர்.. நேற்று ஒரே நாளில் இமயம் ஹோம்ஸ் நிறுவனத்தின் மீது 9 புகார்கள் தரப்பட்டுள்ளன.

மொத்தம் 1 கோடியே 14 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.. தற்போது 9 புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை துவக்கியிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+