ராஜராஜ சோழன் ஆட்சியால் தமிழகத்தில் ஆன்மீக எழுச்சி.. ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்தை கவனித்தீர்களா!
சென்னை: பேரரசர் ராஜராஜ சோழனின் ஆட்சிகாலத்தில்தான் தமிழ்நாடு ஆன்மீக மற்றும் பண்பாட்டு எழுச்சி பெற்றதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
தஞ்சாவூர் பெரியக் கோவிலை கட்டி எழுப்பிய சோழ பேரரசர் ராஜராஜ சோழன் எனப்படும் அருண்மொழி வர்மனின் பிறந்தநாள் விழா சதயவிழாவாக கொண்டாடப்படுகிறது.
அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ராஜராஜ சோழனின் சதயவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆர்.என்.ரவி வாழ்த்து
ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது போர்த்திறன், கட்டிடக்கலை, ஆட்சி முறை ஆகியவற்றை போற்றிப் புகழ்ந்து பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் ட்விட்டரில் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ராஜராஜ சோழனின் நிர்வாகத்திறன்
இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் பதிவில், "பேரரசர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், நிர்வாகத்திறன் ஆகியவற்றுக்கு அவர் எப்போதும் உத்வேகமாக இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் ஆன்மீக எழுச்சி
மேலும், அவரது ஆட்சியில் 'தமிழகம்' ஆழ்ந்த ஆன்மீக பண்பாட்டு எழுச்சி பெற்றது என்பதை மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் நினைவு கூர்ந்தார்." என்று பதிவிடப்பட்டு உள்ளது. இப்பதிவு பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சருக்கும் டேக் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் தமிழகம் என்ற வார்த்தை கோடிட்டு காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜராஜ சோழன் பிறந்தநாள்
உலகின் மிகப்பெரும் பேரரசாக திகழ்ந்த, தஞ்சாவூர் முதல் மலேசியா, இந்தோனேசியா வரை தன்னுடைய ஆட்சியை பிடித்த சோழ பேரரசின், தவிர்க்க முடியாத முக்கிய மன்னனாக இருப்பவர் ராஜராஜ சோழன். தஞ்சை பெரிய கோயிலை கட்டி தமிழர்களின் கட்டிடக் கலையை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் ராஜராஜ சோழன். தஞ்சாவூரை ஆண்ட சோழ பேரரசன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார்.

விழாக்கோலம்
ஆண்டு தோறும் அவரது பிறந்த தினம் அரசு சார்பாக சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டு நாட்கள் நடைபெறும் 1037 ஆம் ஆண்டு சதய விழா மங்கள இசை, திருமுறை அரங்கத்துடன் இன்று தொடங்கியது. இதனால் தஞ்சாவூர் நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. தொடர்ந்து ராஜராஜ சோழன் புகழை போற்றும் வகையில் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், பரதநாட்டிய நிகழ்வு நடைபெறுகிறது.

ராஜராஜ சோழன் சிலை
சதய விழாவை ஒட்டி ராஜராஜ சோழன் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. இராஜராஜனின் குருவான கருவூர் சித்தர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பெருவுடையாருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான மாமன்னன் இராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நாளை நடைபெறுகிறது.

அரசு விடுமுறை
அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். சதயவிழாவை ஒட்டி நாளை தஞ்சைக்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications