சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தலித் கல்வி.. ஆளுநர் ரவி சொன்ன தகவல் தப்பு.. ஆதாரத்தோடு வந்த திமுக எம்.பி. செந்தில்குமார்!

Google Oneindia Tamil News

சென்னை: ஹரிஜன் சேவா சங்கத்தின் 90 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் கல்வி விகிதத்தை அவர் உண்மைக்கு புறம்பாக கூறவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் உள்ள எஸ்ஆர்எஸ் சர்வோதயா பள்ளியின் மகளிர் விடுதியில் நாட்டின் 75 வது சுதந்திர தின விழா மற்றும் ஹரிஜன் சேவா சங்கத்தின் 90 வது ஆண்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "ஆங்கிலேயர்கள் நம் நாட்டை மதம், இனம், மொழி என பிரித்தார்கள். அவர்களை எதிர்த்துப் போராடிய மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது தான் ஹரிஜன சங்கம்.

விவாதப்பொருளான ஆளுநர் ரவி பேச்சு.. தமிழகத்தில் தலித் கல்வி மோசமா? மத்திய அரசின் “உண்மை” டேட்டா இதான் விவாதப்பொருளான ஆளுநர் ரவி பேச்சு.. தமிழகத்தில் தலித் கல்வி மோசமா? மத்திய அரசின் “உண்மை” டேட்டா இதான்

கல்வி

கல்வி

தமிழகத்தில் 51 சதவிகிதம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். இதை எண்ணி நாம் பெருமை அடைய வேண்டும். தமிழ்நாட்டில் 24 சதவிகிதம் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், பட்டியலின குழந்தைகளில் வெறும் 13 முதல் 14 சதவீத குழந்தைகளே பள்ளிக்கு செல்கின்றனர். சில சமூகத்தினரால் மட்டுமே 70 முதல் 75 சதவீதம் அளவிற்கு கல்வியில் வளர்ச்சி அடைய முடிகிறது." என்றார்.

மத்திய அரசு அறிக்கை

மத்திய அரசு அறிக்கை

இதற்கிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த விகிதம் இந்திய அரசு வெளியிட்டுள்ள கல்வி விகிதத்திற்கு குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட GER எனப்படும் உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தில், தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர்களின் விகிதம் 39.6 ஆகவும், பழங்குடியின மக்களின் விகிதம் 40.7 ஆகவும் உள்ளது. இது இந்தியாவின் மொத்த சராசரியை விட இருமடங்கு அதிகம்.

இந்திய அளவில் பெஸ்ட்

இந்திய அளவில் பெஸ்ட்

வடகிழக்கில் உள்ள சிறிய மாநிலங்களை தவிர்த்து அதிக மக்கல் தொகை கொண்ட பெரிய மாநிலங்களில் தமிழ்நாடே இதில் முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டின் மொத்த ஜி.இ.ஆர். விகிதத்தை எடுத்துக் கொண்டால் 51.4% ஆக உள்ளது. இதிலும் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடே முதலிடம் வகிக்கிறது. இந்தியாவின் மொத்த சராசரி 27.1 ஆக உள்ள நிலையில் தமிழ்நாடு பன்மடங்கு உயரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

செந்தில்குமார் ட்வீட்

செந்தில்குமார் ட்வீட்

இதுகுறித்து ட்விட்டரில் திமுக எம்பி செந்தில்குமார் கருத்திட்டுள்ளார். அதில், "ஆளுநர் ஆர்.என்.ரவி தவறான தரவுகளை மேற்கோள் காட்டியுள்ளார். தமிழகத்தில் உள்ள பட்டியல் சமூகத்தினர்-SC GER-Gross Enrolment Ratio ஆளுநர் மேற்கோள் காட்டியபடி 13% முதல் 14% இல்லை. ஆனால் தமிழகத்தில் பட்டியலிட மக்களின் GER 39.6%. தேசிய அளவில் 23.4%." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
DMK MP Senthilkumar accused that Tamil Nadu Governor RN Ravi Speech at the 90th anniversary of the Harijan Seva Sangh about education rate of Scheduled Castes in Tamil Nadu is false
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X