பத்திரப்பதிவு கட்டண விவகாரத்தில் நல்ல உத்தரவு.. இனி சிரமம் இருக்காது.. ஐஜி சிவன் அருள் அதிரடி
சென்னை: ஒரு சொத்து பதிவு செய்யப்படும்போது, அந்த பகுதிகளில் உள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் தான் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் பத்திரப்பதிவுக்கு உயர்மதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது என்றும் தமிழக பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் நிலங்களின் மதிப்பை உயர்த்தி கடந்த 2012ல் புதிய வழிகாட்டி மதிப்பு அமல்படுத்தப்பட்டது. இந்த மதிப்பின் அடிப்படையில் தான் நிலங்களின் மதிப்பை நிர்ணயம் செய்து கட்டணம் வசூலிக்க வேண்டும்.
ஆனால் வழிகாட்டி மதிப்பில் ஒரே தெருவுக்கு பல மதிப்பு, வணிகப்பகுதி, குடியிருப்பு பகுதி,, விவசாய பகுதி என பல குளறுபடிகள் உள்ளன. இதனால் பதிவுக்கு வரும் ஆவணங்கள் குளறுபடி காரணமாக வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை டிஐஜி, மாவட்ட பதிவாளர்களை அணுகி வருவது அதிகரித்துள்ளது.

மறு நிர்ணயம்
இந்த மாதிரியான நேரங்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் வழிகாட்டி மதிப்பு மறு நிர்யணம் செய்து உத்தரவிடப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக இணையதளங்களில் அப்டேட் செய்யப்படுவது இல்லை. இதனால் வழிகாட்டி மதிப்பு கட்டணம் வசூலிப்பதில் பல்வேறு பிரச்சனை ஏற்படுகிறது.

பதிவுத்துறை இணையதளம்
இந்நிலையில் டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்களால் நிர்ணயம் செய்யப்பட்ட மதிப்பானது இத்துறையின் இணையதள வழிகாட்டி மதிப்பில் (மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்ட புலங்களின் உட்பிரிவுகள்) உடனடியாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று பத்திரப்பதிவு துறை ஐஜி சிவன் அருள், உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு புதன்கிழமையும் இது தொடர்பாக மாவட்ட பதிவாளர்கள் உடன் கூட்டம் நடைபெறும். அக்கூட்டத்தில் நடைபெறும் போது விவரங்களை மாவட்ட பதிவாளர்கள் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் கவலை
ஒரு சொத்து பதிவு செய்யப்படும் போது, அந்த பகுதிகளில் உள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் தான் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் சில நேரங்களில் பத்திரப்பதிவுக்கு சந்தை மதிப்பு கவனத்தில் கொள்ளப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு பதிவு துறை அனுமதி வழங்குகிறது. இதனால் பல சர்பதிவாளர் அலுவலகங்களில் உயர் மதிப்பை வைத்து தான் பத்திரப்பதிவு செய்து வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவது தொடர்கதையானது.

வழிகாட்டி மதிப்பு
இந்த நிலையில தற்போது வழிகாட்டி மதிப்பு மட்டுமே பின்பற்றப்பட வேண்டும். உயர் மதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் சார்பதிவாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications