சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினி தேர்தலில் நின்றால் எதிர்த்து போட்டியிடுவேன்- கவுதமன் அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி தேர்தலில் நின்றால் எதிர்த்து போட்டியிடுவேன் என இயக்குநர் கவுதமன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இயக்குநர் கவுதமன் இன்று அரசியல் கட்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பண்பாட்டை வென்றெடுத்த இளைஞர்கள், அரசியலையும் வென்றெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் அரசியல் அமைப்பை தொடங்குகிறோம். கட்சியின் பெயர் மற்றும் கொடி, பொங்கலுக்கு பின்னர் நடைபெறும் மாநில மாநாட்டில் அறிவிக்கப்படும்.

தமிழ் மொழியை, தமிழர் பண்பாட்டை அழிக்க எவர் வந்தாலும் அவர்கள்தான் எங்கள் எதிரிகள். எங்களை பிறர் ஆண்டதெல்லாம் போதும் என்ற நிலைக்கு நாங்கள் வந்துவிட்டோம்.

[புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் இயக்குநர் கவுதமன்.. கட்சியின் பெயர், கொடி என்ன? ]

மதிக்கிறோம்

மதிக்கிறோம்

தமிழர்தம் கல்வி, மொழி, வளம், மானம், உயிர், கலாசாரம், உரிமைகள், வாழ்வியல் உள்ளிட்டவை தொலைக்கப்பட்டதால்தான் நாங்கள் அரசியலுக்கு வருகிறோம்.
ரஜினியையும், கமலையும் திரைக் கலைஞர்களாக மிகப்பெரிய அளவில் மதிக்கிறோம்.

செல்ல முடியுமா

செல்ல முடியுமா

ஆனால் அரசியல் களத்தில் அவர்களை எதிர்ப்போம். எங்களைப் போன்று தமிழர்களுக்காக, தமிழர் நலனுக்கு ஆதரவாக காவல்துறை அடக்குமுறையை எதிர்த்து அவர்களால் சிறைக்குச் செல்ல முடியுமா?

இயக்கம் தொடக்கம்

இயக்கம் தொடக்கம்

நடிகர் ரஜினிகாந்த் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். எங்கள் இனத்தை, மொழியை காக்கவும், எங்கள் உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் அரசியல் இயக்கம் தொடங்குகிறோம் என்றார் கௌதமன்.

முதல் அரசியல்வாதி

முதல் அரசியல்வாதி

இதுவரை கட்சி தொடங்கிய யாரும் அல்லது ஏற்கெனவே அரசியிலில் இருக்கும் யாரும் ரஜினியை எதிர்த்து போட்டியிடுவேன் என அறிவித்ததாக தெரியவில்லை. அந்த வகையில் ரஜினியை எதிர்த்து போட்டியிடுவேன் என அறிவித்த முதல் அரசியல்வாதி கவுதமன்தான்.

English summary
Director Gowthaman says that he will complete against Rajinikanth wherever he constests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X