நத்தம் புறம்போக்கு நிலத்துக்கு பட்டா கிடைக்குமா? ஆக்கிரமிப்பை அகற்ற வழி? நத்தத்தில் இத்தனை இருக்கா?
சென்னை: பட்டா இல்லாத புறம்போக்கு நிலத்துக்கு பட்டா வாங்கலாமா? ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம், ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலம் என்றால் என்ன? அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் இதுகுறித்து யாரிடம் புகார் அளிக்கலாம்? பட்டா பெறுவதற்கான நடவடிக்கைகள் என்னென்ன? யார் யாருக்கெல்லாம் பட்டா கிடைக்காது? இவைகளை பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
புறம்போக்கு நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை.. இவை அனைவரும் உபயோகிக்கும் இடமாக இருக்கும்.. உதாரணத்துக்கு தரிசு நிலங்கள், ஆறு, ஓடை, வாய்க்கால், சாலை, இடுகாடு என அனைத்துமே பொதுப்பயன்பாட்டின் கீழ் வருபவயைகும்.. இவைகளுக்குதான் புறம்போக்கு நிலம் என்கிறோம்..

புறம்போக்கு - நத்தம் நிலங்கள்
புறம்போக்கு இடங்களை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாது. ஆனால், புறம்போக்கு நிலங்களில் நத்தம் என்பதில் மட்டும், பொதுமக்களை வீடுகளை கட்டிக் கொள்ளலாம்.. 5 வருடங்களாக குடியிருந்து வருவோருக்கு அவர்களுடைய ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டு மனை பட்டா வழங்கப்படும். 5 ஆண்டுகளுக்கு மேலாக புறம்போக்கு நிலத்தை வைத்திருந்து, அந்த நிலம் அரசுக்கு தேவையில்லை என்று கருதப்பட்டால், அந்த நிலத்தை உரிமை, பட்டா பெறமுடியும்.
2 வகைகள் என்னென்ன
ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம், ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலம் என்ற 2 வகைகளில் வரைமுறை செய்து இவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுகிறது.. .
ஆட்சேபனையற்ற புறம்போக்கு (Un objectionable Poramboke) என்பது, ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம் என்பது ஊரில் உள்ள கிராம நத்தம் நஞ்சை, தரிசு, புஞ்சை போன்றவை தான். இதில் கிராம நத்தம் என்பது மக்கள் வசிக்கின்ற அளவிற்கு மேடான பகுதியை தான் கிராம நத்தம் என்று கூறுவார்கள். இந்த நிலங்களில் பட்டாவை பெறுவதற்கு அரசிடம் விண்ணப்பிக்கலாம். பட்டா கொடுப்பது அரசின் முடிவு. அரசு பயன்பாட்டிற்கு என்று கருதினால் பட்டா தரமாட்டார்கள்.
ஆட்சேபனையுள்ள புறம்போக்கு (Objectionable Promboke) என்றால்,
ஆட்சேபனையுள்ள புறம்போக்கு (Objectionable Promboke):
ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலம் என்பது குளம், குட்டை, வாய்க்கால், ஏரி, கண்மாய் போன்ற நீர்வழி நிலங்களை தான் ஆட்சேபனையுள்ள புறம்போக்கு என்று கூறுகிறோம். பொதுமக்கள் நீர்நிலை புறம்போக்கு, மயானம், சாலை , காடுகள், வாய்க்கால், தோப்பு, களம், பவுண்டு போன்ற ஆட்சேபனை உள்ள நிலங்களை வாங்கவோ அல்லது பட்டா கோரவோ இயலாது. தங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.
அப்படி அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால், அதுகுறித்து வட்டாட்சியரிடம் மனு தந்து, ஆக்கிரமிப்பை நீக்க வேண்டும்.
வட்டாட்சியரிடம் தரப்பட்ட மனு தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.. பிறகு ஆக்கிரமிப்பு நடந்துள்ளதா? என்று அளவீடு செய்து விஏஓ அறிக்கை தாக்கல் செய்வார்.. அப்படி அக்கிரமிப்பு நடந்திருந்தால், அவை அகற்றப்படும்.. வட்டாட்சியாளர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியருக்கு இந்த அதிகாரம் உள்ளது.
பட்டா வாங்குவது எப்படி?
- சம்பந்தப்பட்ட நிலம், புறம்போக்கு நிலமா? என்பதை சரி பார்க்க வேண்டும்.
- வருவாய் துறை அலுவலகம் அல்லது தாலுகா அலுவலகத்தில் பட்டா பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை வாங்க வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், அடையாள அட்டை, வசிப்பு சான்று, வருமானச் சான்று, நிலத்தின் மீதான கட்டண ரசீதுகள் (மின்கட்டண பில், வீட்டுவரி ரசீது) போன்ற ஆதாரங்கள் தேவையாக இருக்கும்.
- விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, அதிகாரிகள் நிலத்தை நேரில் ஆய்வு செய்து, உங்கள் தகுதிகளை மதிப்பீடு செய்வர்.. இறுதியாக, அனைத்து சரிபார்ப்புகளும் நிறைவு பெற்ற பிறகு, பட்டா உங்கள் பெயரில் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications