Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர்னு முத்தம் தந்த மாப்பிள்ளை.. திக்குமுக்காடிய கல்யாண பெண்.. மணமேடையில் பூரித்த நண்பர்கள்

மாப்பிள்ளைக்கு மணப்பெண் மணமேடையில் முத்தம் தந்த வீடியோ வைரலாகிறது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை மணமேடையிலேயே முத்தம் தந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. என்ன காரணம்?

ஆணும், பெண்ணும் இணைந்து தங்களின் உறவை அதிகார பூர்வமாக தொடங்க கூடிய நிகழ்வு தான் திருமணம்... வாழ்வில் ஒருமுறை நிகழக்கூடியது என்பதால், எல்லோரின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாக எப்போதும் இருக்கும்.

இதற்காக, தங்கள் திருமணத்தை மறக்க முடியாத அளவுக்கு சிறப்பாக நடத்துபவர்கள் உண்டு.. அதில் பல நெகிழ்வுகள் கலந்திருக்கும்.. பல சமயம் சுவாரஸ்யங்கள் கலந்திருக்கும்.. சில சமயம் விநோதங்களும், கலந்திருக்கும்.

 சுவாரஸ்ய விளையாட்டு

சுவாரஸ்ய விளையாட்டு

கேரளாவில் ஒரு அதிகாரி, தன்னுடைய திருமணத்தை சுவாரஸ்யமாக்கி உள்ளார்.. அவர் ஒரு கடற்படை அதிகாரி... இவருக்கு கேரளாவில் திருமணம் நடந்துள்ளது... அந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. திருமணத்தில் யூனிபார்முடன்தான் காணப்படுகிறார்.. திருமணம் முடியும்வரை யூனிபார்முடனேயே மணப்பெண் பக்கத்தில் நின்றுள்ளார்.. இவர் மட்டுமில்லை, இவருடன் வேலை பார்க்கும் சக கடற்படை நண்பர்களும், யூனிபார்மிலேயே வந்திருந்தனர்..

 முத்தம் தந்த மாப்பிள்ளை

முத்தம் தந்த மாப்பிள்ளை

இவர் அதிகாரி என்பதால், பாதுகாப்பாக வாள் ஒன்று தரப்பட்டிருக்கும்.. அந்த வாளையும் இவர்கள் எடுத்து வந்திருந்தனர்.. அவரவர் தங்கள் கைகளில் மிகப்பெரிய வாளை வைத்துள்ளனர். அதை கொண்டு ஒரு தடுப்பையும் உருவாக்கியுள்ளனர்.. மணமக்கள் இருவரும் நடந்து வரும்போது, நண்பர்கள் வரிசையாக 2, 2 நபர்களாக நின்று கொண்டு வாளால் மணமகன் மற்றும் மணமகளை தடுக்கின்றனர்... இப்போது அவர்கள் சொல்வதை, மணமகன் திரும்ப செய்தால்தான், தங்கள் வாளை விலக்கி அவர்களுக்கு வழிவிடுவார்கள்..

 பெரிய வாள்

பெரிய வாள்

இல்லாவிட்டால் வாளை வைத்தே அவர்களை தடுத்து மறித்து நின்று கொண்டிருப்பார்கள்.. இதுதான் அந்த விளையாட்டின் விதிமுறை.. முதலில் மாப்பிள்ளையை, புஷ்-அப்ஸ் உடற்பயிற்சி செய்யுமாறு நண்பர்கள் சொல்ல, மாப்பிள்ளையும் அப்படியே செய்கிறார்.. உடனே வாளை விலக்கி வழி விடுகின்றனர்.. அடுத்து நின்றிருந்த 2 பேர், மறுபடியும் வாளால் மறித்து நின்று கொண்டு, மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும்படி சொல்கிறார்கள்..

மாப்பிள்ளை

மாப்பிள்ளை

அதே போல, மாப்பிள்ளையும் பெண்ணுக்கு முத்தம் தருகிறார்.. பெண்ணும், மாப்பிள்ளைக்கு முத்தம் தருகிறார்.. இப்படி பல சுவாரஸ்யங்கள் அந்த திருமணத்தில் நடந்துள்ளது.. இந்த வீடியோவை இணையத்திலும் ஷேர் செய்ய, அது தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த திருமணத்தை எங்கள் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாது என்று மணமக்கள் பூரித்து சொல்கிறார்கள்.. இவர்களுக்கு இணையவாசிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+