Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் சிறையில் சிக்கிய ஹரி நாடார்.. போலீஸ் டார்ச்சர்.. நடமாடும் நகைக்கடைக்கே இந்த சோதனையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : மோசடி வழக்கில் கைதாகி கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தன்னை போலீசார் நிர்வாணமாக வீடியோ எடுத்து கேலி செய்வதாகும், ஜாமீன் வழங்காமல் தன்னை சித்திரவதை செய்வதாக பனங்காட்டுப்படை கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருமான ஹரி நாடார் தனது மனைவிக்கு எழுதியுள்ள 64 பக்க கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Hari Nadar-ன் கண்ணீர் கடிதம்..Bengaluru Jail-வில் சித்ரவதை செய்றாங்க *TamilNadu

    நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஹரி நாடார். ஹரி நாடார் என்றவுடன் பலருக்கும் நினைவு வருவது அவர் கழுத்தில் அணிந்திருக்கும் கிலோ கணக்கிலான நகைகள் தான். நடமாடும் நகைக்கடை என அழைக்கப்படும் அவரை தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்க முடியாது.

    கழுத்து மட்டும் அல்லாமல் கைகளிலும் கிலோ கணக்கில் நகைகளுடன் வளம் வந்த அவர் கடந்த சில வருடங்களாகவே பேசுபொருளாக உள்ளார். மேலும் பனங்காட்டுப்படை கட்சியின் சார்பில் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார்.

    ஹரி நாடார்

    ஹரி நாடார்

    அந்தத் தேர்தலில் போட்டியிட்டபோது அவர் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில் தனது மொத்த சொத்து மதிப்பு 12 1/2 கோடி ரூபாய் என்றும் அதில் அவரது வீடு மற்றும் நிலத்தின் மதிப்பு வெறும் பதினோரு லட்சம் எனக் குறிப்பிட்டிருந்தார் தங்க நகைகள் அணிவது தனக்கு மிகவும் பிடிக்கும் என பல பேட்டிகளை கூறிவரும் அவர் தன்னிடம் 11200 கிராம் தங்க நகைகள் உள்ளது எனக் கூறியிருந்தார் அந்த நகைகளின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்ச்சை

    சர்ச்சை

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சீமான், ஃபிரண்ட்ஸ் பட நடிகை விஜயலட்சுமி ஆகியோருக்கு இதையேயான பிரச்சனையில் தலையிட்டு பேசிய ஹரி நாடார் நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. முன்னதாக பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாரை பெங்களூரைச் சேர்ந்த, கட்டுமான நிறுவனர் வெங்கட் ரமணி என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு அணுகியுள்ளார். அப்போது தொழில் வளர்ச்சிக்காக ரூ. 360 கோடி ரூபாய் கடன் தேவைப்படுகிறது என கேட்டுள்ளார்.

    மோசடி புகார்

    மோசடி புகார்

    கடன் தொகையை பெற்றுத்தருவதற்காக கூறி ஹரி நாடார் கமிஷனாக 7 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் வெங்கட் ரமணி, ஹரி நாடாரை தொடர்பு கொண்டபோது அவர் முறையாக பதில் கூறவில்லை எனத் சொல்லப்படுகிறது. ஹரி நாடார் வட்டிக்கு பணம் வாங்கி தருவதற்காக தம்மிடம் ஏழு கோடி ரூபாய் கமிஷன் பெற்றுக்கொண்டு, உத்தரவாதம் அளித்தப்படி ரூ.360 கோடி ரூபாய் பணம் பெற்று தரவில்லை என பெங்களூரு சிட்டி குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார் வெங்கட் ரமணி.

    அதிரடி கைது

    அதிரடி கைது

    புகாரை பெற்றுக்கொண்ட பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஹரி நாடாரை கைது செய்தனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஹரி நாடார் தமது முதல் மனைவி ஷாலினியிடம் விவாகரத்து கோரி, அனுப்பிய கடிதத்தில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் தமக்கு ஷாலினியுடன் வாழ பிடிக்கவில்லை என்றும், இரண்டாவது மனைவி மஞ்சுவுடன் இணைந்து வாழவே தாம் விரும்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ராக்கெட் ராஜா

    ராக்கெட் ராஜா

    மேலும், தாம் கைது செய்யப்பட்ட பின்னர் பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் வெங்கட் ரமணியிடம் கமிஷனாக பெற்றத்தொகையை திருப்பி கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும்போது, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்த, பிரமாண பத்திரத்தில் ஆறு கார்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்ததை அறிந்த போலீசார், அந்த கார்களை உடனடியாக சரண்டர் செய்யும்படி கூறியுள்ளனர். அந்த கார்கள் தற்போது ராக்கெட் ராஜாவிடம் உள்ளதாக கூறியதாக தெரிகிறது.

    பனங்காட்டுப்படை கட்சி

    பனங்காட்டுப்படை கட்சி

    ராக்கெட் ராஜா யார் ? அவருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு எனக் போலீசார் கேட்டுள்ளனர். தாங்கள் இருவரும் இணைந்து பனங்காட்டுப்படை என்ற கட்சியை நடத்தி வருவதாக தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ராக்கெட் ராஜா தரப்பினரிடம் 6 கார்களையும், காவல்துறையினரிடம் ஒப்படைக்கும்படி ஹரி நாடார் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் ராக்கெட் ராஜா தரப்பில் எவ்வித பதிலும் வராமல் இருந்துள்ளது.

    நிர்வாணப்படுத்தி தாக்குதல்

    நிர்வாணப்படுத்தி தாக்குதல்

    இதனால் ஆத்திரம் அடைந்த பெங்களூரு, குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஜெகன்நாத் ராய், மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் ஹரி நாடாரை, அரை நிர்வாணப்படுத்தி அடித்துள்ளனர். பின்னர் பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, முழு நிர்வாணமாக நிற்க வைத்து அடித்து கொடுமைபடுத்தியதாக கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் தம்மை முழு நிர்வாணப்படுத்தி அடித்ததோடு மட்டுமில்லாமல், அதனை துணை ஆணையர் தமது மொபைல்போனில் வீடியோ, போட்டோ எடுத்தது தொடர்பாக பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக மாநில டிஜிபிக்கும் ஹரி நாடார் புகார் அனுப்பியுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+