எடப்பாடியின் "மாஸ்டர் ஸ்டிரோக்".. டிவியை பார்த்ததும் உற்சாகம் ஆன ஆர்.பி உதயகுமார்! பெரிய டாஸ்க்?
சென்னை: அதிமுகவில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்பி உதயகுமாரை எடப்பாடி தேர்வு செய்தது மிகப்பெரிய மாஸ்டர் ஸ்டிரோக்காக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் கட்சியில் ஆர்பி உதயகுமாருக்கு வேறு ஒரு முக்கிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் பொதுக்குழுவிற்கு பின்பாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கட்சியில் பல பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக துணைப்பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் ஆர்பி உதயகுமாரை எடப்பாடி தேர்வு செய்தது மிகப்பெரிய மாஸ்டர் ஸ்டிரோக்காக பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி வளர்த்துவிடுவதாக ஏற்கனவே தமிழ்நாடு அரசியலில் ஒரு விவாதம் இருந்தது. இரண்டு பேருமே முக்குலத்தோர் பிரிவை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் முக்குலத்தோர் ஆதரவை பெரும் வகையில் எடப்பாடி இப்படி செய்ததாக கூறப்பட்டது.

முக்குலத்தோர்
அதேபோல் முக்குலத்தோர் ஓ பன்னீர்செல்வம் பக்கம் சாயாமல் இருக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி ஆர் பி உதயகுமாரை வளர்த்துவிட்டதாக விவாதங்கள் எழுந்தன. அதை உறுதி செய்யும் வகையில் தற்போது உதயகுமாருக்கு எடப்பாடி பழனிசாமி துணை எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொடுத்துள்ளார். ஜெயக்குமார், வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் போன்றவர்கள் ரேஸில் இருந்தும், ஆர்பி உதயகுமாரை எடப்பாடி தேர்வு செய்ய இதுவே காரணம் என்கிறார்கள்.

டிவி பார்த்தார்
ஆர்பி உதயகுமாரே இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார். நான் இதை டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன் அவர் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், இது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு.. தாய் உள்ளதோடு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். உங்களோடு பார்க்கும் போதுதான் எனக்கு அந்த விஷயமே தெரிந்தது. உங்களோடு டிவி பார்த்துதான் நான் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டேன்.

நன்றி
இதற்கு நன்றி. மற்ற விஷயங்களை கட்சி பார்த்துக்கொள்ளும். சபாநாயகர் இதில் எடுக்க போகும் முடிவு பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. சட்டப்படி முடிவுகள் எடுக்கட்டும். நான் இதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை. என்னை இந்த பொறுப்பிற்கு தேர்வு செய்ததற்கு நன்றி என்று ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆர்பி உதயகுமாருக்கு வேறு ஒரு முக்கிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டாஸ்க்
அதன்படி தென் மண்டலத்தில் இருக்கும் முக்குலத்தோர் சொந்தங்களை மொத்தமாக ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதன்படி, ஓபிஎஸ் இப்போது இல்லை என்றாலும் முக்குலத்தோர் வாக்குகளை வைத்து தேர்தல் நேரத்தில், நமக்கு குடைச்சல் கொடுப்பார். அப்போது வாக்குகளை பிரிக்க பார்ப்பார். இதனால் இப்போது முக்குலத்தோர் பிரிவை அவரிடம் இருந்து பிரிக்கும் டாஸ்க் ஆர்பி உதயகுமார் தரப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சி துணை தலைவர் ஆகும் சூட்டோடு அந்த பணியையும் அவர் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
-
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications