சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை - தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்
சென்னை: சென்னையில் பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இன்று அதிகாலை சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணாசாலை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் பெய்த மழையால் பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

தமிழகத்தில் சற்றே ஓய்வெடுத்த தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. நாமக்கல் நகரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை 6 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலையோரங்களிலும், பள்ளமான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், நேற்றிரவும் கனமழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கம், தி.நகர், அண்ணா சாலை, மைலாப்பூர் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தஞ்சாவூரில் இடி மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் காணப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் குழிகள் இருப்பது தெரியாமல் வாகனங்களை ஓட்டி வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications