காரில் செல்ல வசதியில்லை.. கோவை டூ சென்னை.. பஸ்ஸில் பயணம் செய்து முதல்வரை சந்தித்த கல்பனா! யார் இவர்?
சென்னை: திமுக சார்பில் மேயராக அறிவிக்கப்பட்ட 20 மாநகராட்சிகளின் வேட்பாளர்களில் பலர் பெண்கள், பட்டதாரிகள் என்பதை எல்லாம் தாண்டி எளிமையான பின்னணியை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் 200 வார்டுகளில் திமுக 153 வார்டுகளிலும் அதிமுக 15 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 4 வார்டுகளிலும் மதிமுக இரு வார்டுகளிலும் இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பாஜக, அமமுக தலா ஒரு வார்டிலும் வென்றுள்ளது.

சென்னை மாநகராட்சி
மேலும் சென்னை மாநகராட்சியில் 5 சுயேச்சைகள் வென்றனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

21 மேயர்கள்
இந்த 21 மேயர்களில் ஒரே ஒரு மேயர் பதவியை காங்கிரஸுக்கு ஒதுக்கியது திமுக. மற்ற 20 மாநகராட்சிகளிலும் திமுகவைச் சேர்ந்தவர்களை மேயர் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. இந்த 20 பேரில் 11 பேர் பெண்களாவர். 20 மாநகராட்சிகளுக்கு பெரும்பாலும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே மேயர் வேட்பாளராக திமுக அரிவித்துள்ளது.

திண்டுக்கல் இளமதி
இதில் திண்டுக்கல் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக இளமதி அறிவிக்கப்பட்டுள்ளார். போட்டியிட்டு வெற்றி பெற்ற இளமதி கட்சிக்காக உழைத்து வருபவர். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவரான இளமதி எளிமையான முறையில் அணுகக் கூடியவர். இதற்கு முன்பு பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. இவர் கவுன்சிலராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தனது வட்டத்தில் செய்துள்ளார்.

கோவை மேயர்
அது போல் கோவை மேயர் வேட்பாளராக கல்பனா ஆனந்தகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். மிக எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். கோவை மாநகராட்சியில் 19 ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 1971 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க வசதியின்மை காரணமாக பேருந்திலேயே சென்னை சென்று வந்தவர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications