சிவகாசியிலும் இந்தி பெயர்ப்பலகை! “நோய்த்தொற்றைப் போல பரவும் இந்த இந்தித் திணிப்பு!” - கனிமொழி சாடல்
சென்னை: ரயில் நிலையங்களில் இந்தி திணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஏற்கனவே சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இந்தி திணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், சிவகாசி ரயில் நிலையத்திலும் இந்தி திணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், நோய் தொற்றை போல இது பரவுவதாகவும் திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "நோய்த்தொற்றைப் போல ஊரெங்கும் பரவிடும் இந்த இந்தித் திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். சென்னை பூங்கா ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் இந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்திருக்கிறார்.

அதேபோல அமைச்சர் தங்கம் தென்னரசு, "சிவகாசி ரயில் நிலையப் பெயர்ப்பலகையில், தமிழைப் பின்னுக்குத் தள்ளி இந்திக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களின் மொழி உணர்வுகளை மதிக்காமல், தென்னக ரயில்வே மேற்கொள்ளும் இத்தகைய மறைமுக இந்தித் திணிப்பு முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழே முன்னவள் ! மூத்தவள்! முதன்மையானவள்" என்று கூறியிருக்கிறார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications