264 பவுன் நகை பெட்டிகளை கொள்ளையடித்தது எப்படி?.. உரிமையாளர்கள் "கொடுத்த" முக்கிய க்ளூ என்ன?
சென்னை: உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் ஓடும் டெம்போ டிராவலரில் 264 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் சேசிங் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைதானது எப்படி என்பதை போலீஸார் விளக்கியுள்ளனர்.
Recommended Video
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வரும் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் நாகலாபுரத்தில் சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேனில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது லக்கேஜ் நிறைய என்பதால் வேனில் உள்ளே வைத்தது போக மீதமிருந்த 6 சூட்கேஸ்களை வேனில் மேல் கட்டி வைத்திருந்தனர். இந்த நிலையில் சிறிது தூரம் கழித்து மேலே கட்டி வைத்திருந்த லக்கேஜ்களை பார்த்தனர்.

6 பெட்டிகள்
அப்போது 6 பெட்டிகளில் இரு பெட்டிகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த இரு பெட்டிகளில் 264 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டையில் திருநாவலூர் காவல் நிலையத்தில் பெரியசாமி புகார் கொடுத்தார். இதையடுத்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். புகார் கொடுத்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் வாகனத்தில் சென்றவர்கள் தேனீர் அருந்தி செல்ல வாகனத்தை விக்கிரவாண்டி அருகே உள்ள, பனையபுரம் பகுதியில் நிறுத்தியிருந்ததும் அதிகாலையில் வாகனத்திலிருந்து பெட்டிகள் மாயமானது தெரியவந்தது.

உளுந்தூர்பேட்டை
இதையடுத்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி வரை உள்ள சாலையோர கடைகள் மற்றும் உணவகங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது டெம்போ டிராவலரில் முதலில் நின்று தேநீர் அருந்திய பனையபுரம் உணவு விடுதியின் சிசிடிவி காட்சிகளில் ஒரு டாட்டா ஏஸ் வாகனமும் பதிவு எண் இல்லாத ஸ்கார்பியோ வாகனமும் இருந்தது தெரியவந்தது.

டெம்போ டிராவலர்
இரு வாகனங்களும் டெம்போ டிராவலர் வாகனத்துடன் பின் தொடர்ந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் டாட்டா ஏஸ் வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு அதன் உரிமையாளரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து மதுரை மாவட்டத்திற்கு விரைந்து சென்ற 3 தனிப்படை போலீஸார் வாடிப்பட்டி தாலுக்கா சோழவந்தான் அருகே உள்ள குருவித் துறை என்ற இடத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டிருந்தனர்.

தப்பியோட்டம்
காவல் துறையினரை அடையாளம் கண்டு கொண்டு 4 பேர் தப்பி ஓடிய நிலையில் குருவி துறையைச் சேர்ந்த வினோத் என்கிற ஜஸ்டிஸ் வினோத் என்ற குற்றவாளியும் உசிலம்பட்டி தாலுக்கா கொடிக்குளம் அருகே உள்ள கொசவபட்டி கிராமத்தைச் சேர்ந்த முட்டி கணேசன் என்ற டாட்டா ஏஸ் வாகன ஓட்டுநரும் போலீஸாரிடம் சிக்கினர்.

9 பேர் கொண்ட கும்பல்
அவர்கள் இருவரும் திருநாவலூர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் விசாரணை நடத்தியதில் மதுரை சேர்ந்த உசிலம்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 9 பேர் கொண்ட கும்பல் வெளிநாடுகள் சென்று வரும் வசதி படைத்தவர்கள் மற்றும் விமான பயணிகள் செல்லும் வாகனங்களை விமான நிலையத்திலிருந்து பின் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் துரத்தி சென்று சினிமா பாணியில் நகைகள், விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது.

இரு சூட்கேஸ்கள்
வெளிநாடு சென்று திரும்பிய பயணிகளின் வாகனங்கள் எதுவும் கண்ணில் படாததால் பனையபுரம் அருகே தேநீர் குடித்து கொண்டிருந்ததாகவும் அப்போது அதே கடையில் டெம்போ டிராவலரில் வந்தவர்களின் வாகனத்தில் மேலே இருந்த ஆறு சூட்கேஸ்களில் இரு சூட்கேஸ்கள் மட்டும் பூட்டு போட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இரு பெட்டிகள்
இதனால் அந்த இரு பெட்டிகளில் ஏதோ நகைகள் இருக்கிறது என்பதை இவர்கள் அறிந்து கொண்டனர். இதையடுத்து வாகனத்தை பின் தொடர்ந்து வேனின் முன்பு ஸ்கார்பியோ கார் முந்திச் செல்வது போல் பாவலா காட்டி வண்டியின் வேகத்தை குறைத்த போது டாட்டா ஏஸ் வாகனத்தில் வந்த மற்றவர்கள் வாகனத்தின் மீது ஏறி சரியாக அந்த இரு பெட்டிகளை மட்டும் எடுத்து டாட்டா ஏசில் போட்டுவிட்டு மீண்டும் ஒரு முறை உளுந்தூர்பேட்டை கெடிலம் அருகே மீண்டும் ஸ்கார்பியோ கார் மூலம் முந்திச் சென்று வேகத்தை கட்டுப்படுத்தி மேலே இருந்த கொள்ளையர்கள் கீழே இறங்கி பண்ருட்டி வழியாக தப்பி சென்றுள்ளனர்.

264 பவுன் நகைகள்
இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த 264 பவுன் நகைகளையும் கொள்ளையடிக்க பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடியவர்களை தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications