விவாகரத்தானவர்களை திருமணம் செய்ய சொல்வதை போல உள்ளது உச்சநீதிமன்ற கருத்து- இபிஎஸ் ஆதரவாளர் செம்மலை
விவாகரத்தாகி பிரிந்து சென்றவர்களை கட்டாயப்படுத்தி மீண்டும் திருமணம் செய்து வைப்பது போல உச்சநீதிமன்றத்தின் கருத்து உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் செம்மலை கூறியுள்ளார்.
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம் என அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து கருத்து கூறியுள்ள இபிஎஸ் தரப்பு ஆதரவாளர் செம்மலை, விவாகரத்தானவர்களை மீண்டும் சேர்த்து வைத்து கட்டாய கல்யாணம் செய்வது போல உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியில் வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிட கடந்த 31ம் தேதி முதல் வருகிற 7ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இரட்டை இலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வில் இடையீட்டு மனு விசாரிக்கப்பட்டு வருகிறது.
பழனிசாமியின் இடையீட்டு மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று பதில் மனுவை தாக்கல் செய்தது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.
தேர்தல் ஆணையம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணையை நாங்கள் ஏற்கிறோம். அதிமுக வழக்குகள் நிலுவையில் உள்ளதால் எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்க முடியாத நிலை உள்ளது. தேர்தல் விதிகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிட்டன என தெரிவித்தது. தேர்தல் ஆணையம் கூறுவதை பொறுத்தே உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் வாதிட்ட போது, தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க மறுக்கிறது. ஆனால், கடந்த முறை இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது, மாறுபட்ட நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம் எடுத்திருந்தது. இரட்டை இலை சின்னத்துக்காக எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட முன்வந்தால், எங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப் பெற தயார் என வாதிடப்பட்டது.
சமாதானம் என்ற பேச்சுக்கு தற்போது இடமில்லை என கூறுகிறீர்கள். நாங்கள் கூறும் பரிந்துரையை ஏற்காவிட்டால் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இரு தரப்பும் கையெழுத்திடாமல் பொதுவான ஒருத்தரை, பொதுக்குழுவின் சார்பாக, அவைத் தலைவர் கையெழுத்திட்டால் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
வேட்பாளரை இறுதி செய்ய மட்டும், ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூவரும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என கருத வேண்டும். பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படும் வேட்பாளரை, அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அந்த பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவைத் தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள அனுமதிக்க முடிவு எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவு குறித்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர்கள் தங்களின் கருத்துக்களை முன் வைத்தனர். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் செம்மலை, சென்னை ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பு செல்லுமா செல்லாதா என்றுதான் உச்சநீதிமன்றம் சொல்ல வேண்டும் அதற்காகத்தான் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லுமா, செல்லாதா என்றுதான் சொல்ல வேண்டும் அதை விட்டு விட்டு உச்சநீதிமன்றம் இப்படி உத்தரவிட்டுள்ளது.
இதனை நான் தீர்ப்பாக கருதவில்லை. இன்றைக்கு கூறியுள்ளது ஆலோசனை போலதான் உள்ளது. கீழமை நீதிமன்றங்களில்தான் இரு தரப்பினரையும் பஞ்சாயத்து செய்வார்கள். உச்சநீதிமன்றம், சட்ட திட்ட அடிப்படையை மட்டுமே பார்த்திருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் இன்றைய தினம் பிறப்பித்துள்ள உத்தரவை பார்த்தால், பிடிக்காத இருவரை சேர்த்து வைத்து கட்டாய கல்யாணம் செய்ய சொல்வதை போலதான் உள்ளது. விவாகரத்தானவர்களை மீண்டும் திரும்ப திருமணம் செய்ய வைப்பதை போல உள்ளது. இந்தியாவில் எந்த ஒரு கட்சியிலும் பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை அறிவிக்கும் சிஸ்டம் இல்லையே, எதற்காக அதிமுகவிற்கு மட்டும் இப்படி ஒரு உத்தரவு. இவ்வாறு செம்மலை கூறினார்.
-
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
"ஓபிஎஸ் என்னை கைவிட்டுவிட்டார்!" ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் முக்கிய தகவலை சொன்ன உசிலம்பட்டி ஐயப்பன்? -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
விடிய விடிய அதிகாரிகள் சிறைபிடிப்பு! "இது கிரிமினல் தோல்வி" மேற்கு வங்க அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்












Click it and Unblock the Notifications