காணாமல் போன 300 ஆண்டுகள் பழைய தமிழின் முதல் பைபிள்! திடீரென கண்டுபிடித்த சிஐடி! "அங்கே" போனது எப்படி
சென்னை: 2005ல் காணாமல் போன 300 ஆண்டுகள் பழமையான தமிழின் முதல் பைபிளை தமிழ்நாடு சிபிசிஐடி பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பதுதான் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிற்கு கிறிஸ்துவம் வந்த 1700ம் ஆண்டுகளில் பைபிள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. பைபிள் படிக்க வேண்டும் என்றால் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற நிலையும் இருந்தது.
இதனால் இந்தியாவில் கிறிஸ்துவத்தை பரப்பும் நோக்கத்தோடு வந்த கிறித்துவ துறவிகளுக்கு அது பெரிய சிக்கலான விஷயமாக மாறியது. அப்போதுதான் 1714ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி இந்தியாவில் முதல் பைபிள் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மொழி பெயர்ப்பு
இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் மொழி பெயர்க்காமல் உலகின் பழமையான மொழியான தமிழில் அந்த பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது. அதன்பின்பே மற்ற மொழிகளுக்கு பைபிள் சென்றது. ஜெர்மனியில் இருந்து பார்தோலோமாஸ் செய்ங்கெங்பால்க்தான் இந்தியாவிற்கு கிறித்துவத்தை பரப்ப வந்த முதல் கிறிஸ்துவ துறவி ஆவார். 1706ம் ஆண்டு வாட்ச் இவர் தரங்கேபார் என்று தமிழ்நாட்டு பகுதிக்கு வந்தார். அதுதான் தமிழ்நாட்டின் தரங்கம்பாடி ஆகும். இங்கு வந்தவருக்கு பெரிதாக வரவேற்பு அளிக்கப்படவில்லை.

இந்துக்கள் அச்சம்
இந்துக்கள் இடையே இவரின் வருகை கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. அதுவும் இவரின் ஆங்கில மொழி, இவர் பைபிளை ஆங்கிலத்திலும், ஜெர்மனியிலும் படித்து பரப்ப நினைத்தது பெரும் விமர்சனங்களை சந்தித்து. இதன் காரணமாக உடனே இவர் தமிழ் படிக்கும் முடிவை எடுத்தார். சில ஆண்டுகள் தமிழ் படித்தவர், அதில் புலமையும் பெற்று, ஜான் எர்னஸ்ட் என்பவர் உதவியுடன் புதிய ஏற்பாடு பைபிளை அவர் மொழி பெயர்த்தார்.

எப்படி செய்தார்?
பனை ஓலையில், ஆணிகள் மூலம் இந்த பைபிள் எழுதப்பட்டது. அதன்பின் பிரிண்ட் முறை மூலம் இது பிரிண்ட் புத்தமாக வெளியிடப்பட்டது. இதற்காக ஜெர்மனியில் இருந்து இவர் பிரிண்டர்களை தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்ததும் குறிப்பிடத்தக்கது. பல ஆண்டு போராட்டத்திற்கு பின் 1711ல் பைபிள் முழுமையாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் மூலம் இந்திய மொழியில் பெயர்க்கப்பட்ட முதல் பைபிளாக தமிழ் புதிய ஏற்பாடு பைபிள் மாறியது.

எங்கு இருந்தது?
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பல ஆண்டுகளாக இந்த பைபிள் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் கடந்த 2005ம் ஆண்டு சரஸ்வதி நூலகத்தில் இருந்து பைபிள் காணாமல் போனது. அந்த பைபிள் எங்கே போனது என்ற கேள்வி மக்கள் இடையே எழுந்தது. போலீசாரும் இதை பற்றி விசாரித்து வந்தனர். ஆனால் எந்த க்ளுவும் கிடைக்கவில்லை. அதன்பின் அப்படியே இந்த பைபிள் குறித்த செய்தி எதுவும் கிடைக்காமல்.. தேடலும் நின்று போனது. இந்த நிலையில்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது இந்த பைபிள் புத்தகம் கிடைத்துள்ளது.

லண்டன் போனது
தமிழ்நாடு சிஐடி போலீசின் சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு வந்த தகவலின் அடிப்படையில் இந்த பைபிள் லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லண்டலில் இருக்கும் மன்னர் குடும்ப சொத்துக்களில் இந்த பைபிள் உள்ளது. இதை விரைவில் மீட்க சிஐடி பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த பைபிள் லண்டன் சென்றது எப்படி? இதை திருடி சென்றது யார்? என்று சிஐடி பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications