Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை உணவு திருவிழா.. இரவு முழுக்க போன "மெசேஜ்".. பீப் பிரியாணிக்கு அனுமதி கிடைத்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கார சென்னையின் உணவு திருவிழா 2022 சென்னையில் நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடக்க கூடிய உணவு திருவிழா ஆகும் இது.

Recommended Video

    சென்னை உணவுத் திருவிழாவில் BEEF சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு

    நேற்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்த உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார். நேற்று நடைபெற்ற அரங்கில் பீப் பிரியாணி இந்த திருவிழாவில் இடம்பெறவில்லை.

    இது பெரிய சர்ச்சையானது. இந்த நிலையில் பீப் பிரியாணிக்கு தற்போது உணவு திருவிழாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இதற்கு பின் நடந்தது என்ன? இந்த அனுமதி கிடைத்தது எப்படி என்று பார்க்கலாம்.

    சர்ச்சை

    சர்ச்சை

    உணவு திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறவில்லை என்றதும் நெட்டிசன்கள் பலர் கோபம் அடைந்தனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது என்ன உத்தர பிரதேசமா? பீப் பிரியாணிக்கு அனுமதி கொடுக்காமல் இருப்பது தவறு என்று பலரும் விமர்சனங்களை வைத்தனர். சில திமுகவை சேர்ந்த நிர்வாகிகளும், திமுக அனுதாபிகளும் கூட இது தொடர்பாக விமர்சனங்களை வைத்தனர். இது பெரிய சர்ச்சையானது.

    பதில்

    பதில்

    இதையடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியம் அளித்த விளக்கத்தில் நாங்கள் பீப் பிரியாணியை தடை செய்யவில்லை. இங்கே நிறைய ஸ்டால்கள் உள்ளன. இதில் பீப் பிரியாணி வைக்க வேண்டும் என்று யாரும் விண்ணப்பம் கொடுக்கவில்லை. விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறோம். மற்றபடி பீப் பிரியாணியை வேண்டும் என்றே தடை செய்யவில்லை என்று கூறினார். உணவுத்துறை அதிகாரிகளும் இதைத்தான் தெரிவித்தனர்.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    ஆனால் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத சிலர் கடுமையான விமர்சனங்களை அரசுக்கு எதிராக வைத்தனர். அங்கே 180 ஸ்டால் உள்ளது. ஒன்றில் கூடவா பீப் பிரியாணி இடம்பெறாது. இது என்ன கொடுமை. இதுதான் திராவிட ஆட்சியா? முன்பே ஆம்பூர் உணவு திருவிழாவில் பீப் பிரியாணிக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் அந்த திருவிழாவை தடையும் செய்தீர்கள். இது எப்படி நியாயம் ஆகும் என்று கேள்வி எழுப்பினர்.

    விமர்சனம்

    விமர்சனம்

    அதோடு இந்த விவகாரத்தை அமைச்சர்களுக்கு டேக் செய்து திமுகவினர் பலர் நேற்று இரவு முழுக்க சமூக வலைத்தளங்களில் மெசேஜ்களாக அனுப்பி வந்தனர். இந்த நிலையில் தற்போது பீப் பிரியாணியும் உணவு திருவிழாவில் இன்றும், நாளையும் இடம்பெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக மூன்று ஸ்டால்கள் போடப்பட்டு உள்ளன. இன்று முதல் அங்கு சுக்குபாய் நிறுவன பீப் உள்ளிட்ட பல்வேறு பீப் விற்பனை செய்யப்படும்.

    அனுமதி காரணம்

    அனுமதி காரணம்

    ஆனால் இந்த அனுமதிக்கு பின் வேறு காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பீஸ் ஸ்டால் போட யாருமே அனுமதி கேட்கவில்லை. 180 ஸ்டால்களுக்கு முன்பே அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. பின்னர் நேற்று சர்ச்சைக்கு பின்பே சில நிறுவனங்கள் பீப் ஸ்டால் போட அனுமதி கேட்டனர். அதன்பின்பே அனுமதி கொடுக்கப்பட்டது. இதுதான் உண்மை. இதற்கு பின் வேறு அழுத்தங்கள் எதுவும் இல்லை என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+