Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஷா போஸ்லே உடல்நிலை எப்படி இருக்கிறது? பேத்தியின் புதிய தகவல் - மும்பையில் ரசிகர்கள் கவலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய திரையுலகின் ஈடு இணையற்ற இசை மேதைகளில் ஒருவரான ஆஷா போஸ்லே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 92 வயதாகும் இந்தப் புகழ்பெற்ற பாடகிக்கு ஏற்பட்ட திடீர் பாதிப்பு, இந்திய இசை ரசிகர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.. ஆஷாஜிக்கு என்ன நடந்தது?

கடந்த சில நாட்களாகவே அவருக்கு லேசான உடல்நல பாதிப்புகள் இருந்த நிலையில், நேற்று அவரது நிலைமை சற்று மோசமடைந்துள்ளது.. உடனடியாக மும்பையில் உள்ள ஒரு உயர்தர தனியார் மருத்துவமனையில் ஆஷா போஸ்லே அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Asha Bhosle Mumbai News Asha Bhosle Health Update Janai Bhosle Bollywood News Singer Health Hospital Update Breaking News Music Legend


ஆஷா போஸ்லே பேத்தி

இது குறித்து ஆஷா போஸ்லேவின் பேத்தி விளக்கம் தந்துள்ளார்.. அதில், ஆஷாவுக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று (Chest Infection) காரணமாகவே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், தற்சமயம் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதுமை காரணமாக அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர் குழுவால் அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஒருபுறம் தகவல்கள் வெளியானாலும், அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து வரும் தகவல்கள் மார்புத் தொற்று தொடர்பான சிகிச்சையை உறுதிப்படுத்தி உள்ளன.

ஆஷா போஸ்லேவின் இசைப் பயணம் என்பது ஒரு சகாப்தம். மறைந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் தங்கை என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது தனித்துவமான குரலால் ஏழு தசாப்தங்களாகத் திரையுலகை ஆட்சி செய்தவர்.

விருதுகளை பெற்ற ஆஷா

1943-ல் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய அவர், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மராத்தி என பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தமிழில் இளையராஜா இசையில் இவர் பாடிய 'செண்பகமே செண்பகமே' (எங்க ஊரு பாட்டுக்காரன்), ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய 'வாடி வாடி கைப்படா கத்திரி' (அல்லி அர்ஜுனா) மற்றும் 'செப்டம்பர் மாதம்' (அலைபாயுதே) போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளன.

2000-ம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் மிக உயரிய 'தாதாசாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது. மேலும், 2008-ல் 'பத்ம விபூஷன்' விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இப்போது ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, சமூக வலைதளங்களில் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டிப் பதிவிட்டு வருகின்றனர்.

மும்பையில் ரசிகர்கள் பிரார்த்தனை

குறிப்பாக, மும்பையில் அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ரசிகர்கள் மற்றும் இசைப் பிரியர்கள் அவர் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் அவரது உடல்நிலை குறித்து அடுத்த சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இசை உலகின் ஒரு மாபெரும் அடையாளமாகத் திகழும் ஆஷா போஸ்லே, விரைவில் முழு உடல் நலத்துடன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் ஒட்டுமொத்த தேசமும் காத்திருக்கிறது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+