சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஓவர் ஓவர்".. மின் இணைப்புடன் ஆதாரை இணைச்சிட்டீங்களா?.. 4 நாள்தான் இருக்கு.. அவகாசம் நீட்டிக்கப்படுமா

மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் நம்பரையும் இணைக்க காலஅவகாசம் நீட்டிக்கப்படும் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு காலஅவகாசம் முடியும் நிலையில், அதற்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் விவசாயம், குடிசை வீடுகள், விசைத்தறிகள், வீடுகளுக்கு மின் வாரியம் சார்பில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.. அதேபோல மானியம் விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு "தனிப்பிரிவில்" மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.. இவைகளை எல்லாம் ஒழுங்குப்படுத்தி சீரமைப்பதற்காக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் சேர்ப்பு: வரும் 31ம் தேதிக்குள் இணைத்திடுங்கள்.. அமைச்சர் செந்தில் பாலாஜி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் சேர்ப்பு: வரும் 31ம் தேதிக்குள் இணைத்திடுங்கள்.. அமைச்சர் செந்தில் பாலாஜி

 ஆதார் நம்பர்

ஆதார் நம்பர்

தமிழ்நாட்டில் 2.67 கோடி இணைப்புகள் மூலம் மின் நுகர்வோர் பயனடைந்து வரும் நிலையில், இவர்கள் அனைவருமே கடந்த அக்டோபர் 6-ம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது... அதற்கான பணிகள் நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.. ஆரம்பத்தில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பெரும்பாலானவர்கள் தயக்கம் காட்டினார்கள்.. சிலருக்கு எப்படி இணைப்பது என்றும் தெரியவில்லை.. இதையடுத்து தமிழக அரசே அதற்கான இதற்கான அதிரடியில் இறங்கியது.

 ஸ்பெஷல் கேம்ப்

ஸ்பெஷல் கேம்ப்

இதுதொடர்பான உரிய விளக்கங்களை அளித்தது.. அத்துடன், ஆதார் நம்பரை இணைப்பதற்காக சிறப்பு முகாம்களையும் நடத்த துவங்கின.. முக்கியமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், அந்த சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு பிறகுதான், தமிழகம் முழுவதும் 2811 மின் அலுவலகங்களில் ஆதார் நம்பரை இணைக்கும் பணிகள் துரிதமாகின.. மேலும், சர்வர் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுவதால், ஆன்லைன் மூலம் ஆதாரை இணைக்க முடியாமல் நுகர்வோர் சிரமப்பட்டதைத் தொடர்ந்து, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரியை வெளியிட்டது.

 அவகாசம் ஓவர்

அவகாசம் ஓவர்

ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 31-ந்தேதி வரை சுமார் 50 சதவீதம் பேர்தான் ஆதார் எண்ணை இணைத்திருந்தனர்.. அதனால், ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக அதற்கான கால அவகாசம் ஜனவரி 31- ந் தேதி வரை நீடிக்கப்பட்டது... மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அப்போதும் பலர் இணைக்கப்படாமல் உள்ளனர்..

 கெடு ஓவர்

கெடு ஓவர்

நேற்று வரை 2 கோடியே 11 லட்சம் பேரின் ஆதார் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.. அதனால், ஆதார் இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் நேரடியாகவே அறிவுறுத்தி வருகின்றனர்... மின் வாரியம் வழங்கிய அவகாசம் முடிய 4 நாட்கள் மட்டுமே உள்ளது... ஆனால், இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டியுள்ளது. அதனால் மேலும் அவகாசம் கொடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.. அநேகமாக இதற்கான அறிவிப்பை மின்துறை அமைச்சர் 30-ந் வெளியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள்..!

English summary
Huge possibility to extend more time to link aadhaar with electricity connection
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X