‛‛சீமானுக்கு பிறந்த நம்பிக்கை’’.. லோக்சபா தேர்தலில் உறுதியாக பெரிய மாறுதல் இருக்காம்
சென்னை: மக்கள் பேரார்வத்தோடு அதிகாலையில் இருந்தே வாக்கு செலுத்துவதை பார்க்கும்போது உறுதியாக பெரிய மாறுதல் ஏற்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழத்தில் நான்கு முனை போட்டி உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே மக்கள் ஓட்டுச்சாவடிக்கு சென்று வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இன்றைய தினம் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் உள்பட 13 வகையான ஆவணங்களை காண்பித்து பொதுமக்கள் வாக்களிக்கலாம். இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி கயல்விழியுடன் வந்து ஓட்டளித்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மக்கள் பேரார்வத்தோடு வந்து அதிகாலையில் இருந்து வாக்கு செலுத்துவதை பார்க்கும்போது உறுதியாக பெரிய மாறுதல் ஏற்படும் என்ற நம்பிக்கை வருகிறது. காலையில் இருந்து தன்னெழுச்சியாக பெரும் கூட்டமாக மக்கள் வாக்கு செலுத்துகிறார்கள். உறுதியாக மாறுதல் வரும் என நம்புகிறேன்.
என் அன்பு மக்களே அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்றுங்கள். எல்லோரும் வந்து வாக்கு செலுத்த வேண்டும். வாக்கு செலுத்துவது நமது கடமை என்று உணர வேண்டும். நாம் வாக்கு செலுத்துவதால் என்ன ஆகிறப்போகிறது? வாக்கு செலுத்தாவிட்டால் என்ன ஆகப்போகிறது? என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். ஏனென்றால் நாம் வாழும் நாட்டுக்கு செய்ய வேண்டிய ஜனநாயக கடமை இதுதான். அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும்'' என்றார்.
இந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களமிறங்கி உள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 ஆண்கள், 20 பெண்கள் என ஆண்-பெண்களுக்கு சமமாக போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளார். கடந்த 2019 தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3.89 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் யாரும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான் மீண்டும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வெற்றியை எட்டிப்பிடிக்கும் முனைப்பில் 40 தொகுதிகளிலும் களமிறங்கி உள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications