உதய்பூர் பிரகடனம்..ரப்பர் ஸ்டாம்ப் தலைவரா?..பாஜக ஆட்சியை அகற்றுவேன்..மல்லிகார்ஜுன கார்கே அதிரடி
சென்னை: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டு பிரகடனமே எனது தேர்தல் வாக்குறுதி என்று காங்கிரஸ்கட்சித் தலைவர் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். நான் தலைவரானால் பாஜக ஆட்சியை அகற்றுவேன் என்றும் கூறியுள்ளார் மல்லிகார்ஜுன கார்கே.
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, கேரள மாநிலத்தைச் சேர்ந்த சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வரும் 17ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 9 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் 700 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழக காங்கிரஸாரின் ஆதரவு கோரி சசிதரூர் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவரைத் தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே நேற்று சென்னை சத்தியமூர்த்திபவனுக்கு வந்தார். அவரை கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்றார். தொடர்ந்து, அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று, கட்சியினர் மத்தியில் மல்லிகார்ஜுன கார்கே பேசி ஆதரவு திரட்டினார்.

மல்லிகார்ஜுன கார்கே
உங்களிடம் ஆசீர்வாதமும், வாக்குகளையும் பெற வந்தேன். கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். மற்றவர்கள் போல என்னிடம் எந்த வாக்குறுதியும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளே எனது வாக்குறுதி. கடந்த 4 மாதங்களுக்கு முன் உதய்ப்பூர் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை செயல்படுத்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவேன். கட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கு உடனடியாக ஆட்களை நியமிப்பேன்.

ஒற்றுமை யாத்திரை
ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஆனால், மோடியும், அமித்ஷாவும் இந்தியாவின் ஒற்றுமையை பிரிக்க பார்க்கிறார்கள். எனவே, மோடி, அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவேன்.

தொண்டர்கள் அழைப்பு
செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, தொண்டர்கள் அழைத்ததால் இப்பதவிக்கு நான் போட்டியிடுகிறேன். நான் 1969-ம் ஆண்டு இந்திராகாந்தி முன்னிலையில் கர்நாடக மாநிலம் குல்பர்கா ஒன்றிய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றேன். நான் ஏணியின் அடிப்பகுதியில் இருந்து படிப்படியாக மேலே ஏறி வந்தவன். சிலர் நேராக மேலே இருந்துவிட்டு இப்போது கீழே பார்க்கிறார்கள். அவர்களுக்கு பெரிய பள்ளமாக தெரிகிறது.

தேர்தல் வாக்குறுதிகள்
கட்சிக்காக கடுமையாக உழைத்ததால் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறேன். நான் எந்ததேர்தல் வாக்குறுதியும் தயாரிக்கவில்லை. கடந்த மே மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டு பிரகடனமே எனது தேர்தல் வாக்குறுதி. அதில் கட்சி நிர்வாகிகளில் 50 சதவீதம் பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

உதய்பூர் பிரகடனம்
குடும்பத்தில் ஒருவருக்கே தேர்தலில் போட்டியிட அனுமதி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பவர் குறைந்தது 5 ஆண்டுகள் கட்சியில் இருந்திருக்க வேண்டும். பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என இடம்பெற்றுள்ளது. நான் வெற்றி பெற்றால் இவற்றைச் செயல்படுத்துவேன் என்று அவர் கூறினார்.

ரப்பர் ஸ்டாம்ப்
நான் செல்கிற இடங்களில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதே நேரத்தில் நான் செல்கிற இடங்களில் எல்லாம் பத்திரிகையாளர்கள் என்னிடம் நீங்கள் ரிமோட் கண்ட்ரோலாக செயல்படுவீர்களா? ரப்பர் ஸ்டாம்பாக செயல்படுவீர்களா? என்று கேட்கிறார்கள். நான் அப்படி ஒன்றும் செயல்பட மாட்டேன். நான் கட்சியின் கீழ் மட்டத்தில் இருந்து வந்தவன். நான் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை செயல்படுத்துவேன். அதுவும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுவேன்.

தென்னிந்திய காங்கிரஸ் தலைவர்கள்
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மாநிலத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், புதுச்சேரி யூனியன் பிரதேச முன்னாள் முதல்வர்கள் வி.நாராயணசாமி, வி.வைத்திலிங்கம், கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, கட்சியின் மாநிலப் பொருளாளர் ரூபி மனோகர், துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா, பொதுச் செயலாளர்கள் எஸ்.காண்டீபன், எஸ்.ஏ.வாசு, மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், டில்லிபாபு, எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications