பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு
சென்னை: இந்தியாவின் மூன்றாவது முறையாகப் பிரதமரான மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? எனக்குத் தெரிந்த அமெரிக்கர்கள், மோடி சமரசம் செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த தகவல்களை தற்போது வரைக்கும் நான் வெளிப்படுத்த வில்லை, நான் அவ்வாறு செய்தால் அது மோடியின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பொருளாதார நிபுணர் ஆவார், மத்திய அமைச்சராகவும் ஒரு முறை இருந்துள்ளார். இவர் ஜனதா கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தவர் ஆவார். மாநிலங்களவை எம்பியாகவும் இருந்துள்ளார். ஜெயலலிதாவிற்கு எதிராக ஊழல் வழக்குகளை போட்டதும் இவர் தான். தற்போது பாஜகவில் இருந்தாலும், அவ்வப்போது கட்சியின் நிலைப்பாடுகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

மோடி சமரசம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அதேபோல் பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவ்வப்போது கடுமையாக கருத்துக்களையும் கூறி வருகிறார். அந்த வகையில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் சமரசம் செய்து கொண்டதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டி வருகிறார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் இந்தியா போரை நான் தான் நிறுத்தினேன் என்று கூறினார். அதேபோல் ரஷ்யா உடன் எண்ணெய் வாங்கக்கூடாது என்று இந்தியாவை நேரடியாக மிரட்டினார்.. அதன்பிறகு தற்போது கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக, ரஷ்யாவிடம் இந்தியா ஒரு மாதத்திற்கு அனுமதி அளிப்பதாக கூறுகிறார்.
டிரம்ப் பேச்சால் கோபம்
பிரதமர் மோடியை சில நேரங்களில் நேரடியாக மிரட்டுகிறார் டிரம்ப்.. அவ்வப்போது பொதுவெளியில் இந்தியா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் டிரம்ப் பேசும் பேச்சுக்களை இந்தியர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதுபற்றி இந்தியா சார்பில் நேரடியாக எதிர்ப்புகளோ, கண்டனங்களோ தெரிவிக்கப்படவில்லை.. அதேநேரம் இந்தியா அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் போட்டு, வரியை ஓரளவு குறைத்துள்ளது. ராஜதந்திர ரீதியாக பல்வேறு விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறது.
தர்ம சங்கடமான நிலை
எனினும் அண்மையில் இந்தியாவிற்கு விருந்தாளியாக வந்த ஈரான் கப்பல் மீது அமெரிக்கா, இலங்கை அருகே குண்டு வைத்து காலி செய்தது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதற்குமே பெரிய கண்டனங்களை மத்திய அரசு வெளிப்படுத்தவில்லை.. எந்த பக்கம் சாய்ந்தாலும், சிக்கல் என்பதால் அரசு மௌனமாக இருக்கிறது. எனினும் ஈரானுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி, அமெரிக்கா இஸ்ரேல் வளைகுடா நாடுகளை பாதிக்கும். அந்த பக்கம் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசினால் அது ஈரான் உடனான உறவை சிக்கலாக்கும்.. எனவே தான் அரசு தர்ம சங்கடத்தில் உள்ளது. அமெரிக்கா போரை நிறுத்தினால் தான் உலக நாடுகளில் நிலவும் குழப்பம் தீரும் என்கிற நிலை உள்ளது.
சுப்பிரமணியன் சுவாமி பதிவு
இந்நிலையில் பிரதமர் மோடியை விமர்சித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி இன்று வெளியிட்டிருக்கும் பதிவில் கூறுகையில், "நாட்டின் மூன்றாவது முறையாகப் பிரதமராகி இருக்கும் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்?எனக்குத் தெரிந்த அமெரிக்கர்கள், மோடி சமரசம் செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள். அந்த தகவல்களை வெளியிட்டால் பிரதமர் பதவியை மோடி ராஜிநாமா செய்ய வழிவகுக்கும்" என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி சமரசம் செய்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், தன்னிடம் அதற்கான தகவல்கள் இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications