திருமாவளவன் களமிறங்கும் காட்டுமன்னார்கோவில்! 8 விசிக வேட்பாளர்களும் இன்றே வேட்புமனுத் தாக்கல்?
சென்னை: திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் இன்று ஏப்ரல் 4-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுடன் இணைந்து கட்சியின் மற்ற 7 வேட்பாளர்களும் இன்றைய நாளிலேயே மனுத் தாக்கல் செய்ய உள்ளதால் தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சித் தலைமையின் முடிவை ஏற்று நிர்வாகிகள் ஒற்றுமையுடன் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் தேர்வில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் தந்திருந்தார்..

கடந்த முறை சிறப்பாகப் பணியாற்றிய ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ். பாலாஜி உள்ளிட்டோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காதது குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் நிர்வாக ரீதியான முடிவுகளே இதற்குக் காரணம் என்றும் கூறியிருந்தார்.
திருமாவளவன் காட்டுமன்னார்கோவில்
குறிப்பாக, நாகை தொகுதி மனிதநேய மக்கள் கட்சிக்குச் சென்றது மற்றும் விருப்பப்பட்ட தொகுதிகள் கிடைக்காத சூழலிலேயே ஆளூர் ஷாநவாஸால் போட்டியிட முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய திருமாவளவன், இது அவரைத் தடுக்கும் முயற்சி அல்ல என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.
அதுமட்டுமல்ல, அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் தலைமையின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் இது குறித்துத் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் திருமாவளவன், வேண்டுகோள் விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.
8 விசிக வேட்பாளர்கள்
இந்நிலையில் தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் இன்று ஒரே நாளில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று ஏப்ரல் 4ம் தேதி அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களும் அந்தந்த தொகுதிகளில் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர்.
இதில் குறிப்பாக, விசிக தலைவர் தொல். திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அவர் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை முறையாகச் சமர்ப்பிக்க உள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து மற்ற 7 தொகுதிகளின் வேட்பாளர்களும் இன்றைய தினமே மனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் நேரடியாகக் களமிறங்குவது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசிக போட்டியிடும் தொகுதிகளில் பலமான வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள திருமாவளவன், விருப்ப மனுக்கள் மூலம் திரட்டப்பட்ட நிதியை வேட்பாளர்களின் முதற்கட்ட தேர்தல் செலவுகளுக்காக ஏற்கெனவே பிரித்து வழங்கியுள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.
தேமுதிக எப்போது மனு தாக்கல்?
புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதன் மூலம் கட்சியில் புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளதாகவும், இந்தத் தேர்தல் முடிவு தமிழக அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஒருபுறம் வேட்புமனுத் தாக்கல் பணிகள் வேகமெடுக்க, மறுபுறம் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணங்களைத் தீவிரப்படுத்தவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.
அதேபோல், கூட்டணி கட்சியான தேமுதிகவின் வேட்பாளர்கள் நாளை மறுநாள் அதாவது வரும் ஏப்ரல் 6ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
தமிழக அரசியலுக்கு திருமாவளவன் திரும்பியது ஏன்? உளவுத்துறை எடுத்த நோட்ஸ்.. கசிந்த சீக்ரெட்? -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
இவங்க ஜெயிச்சா அவங்கதான் CM.. வேடசந்தூர் டூ ராமநாதபுரம்! இந்த 4 இடத்தை மட்டும் கவனிங்க! ஏன் தெரியுமா -
Election-லிருந்து Escape சரி! 3000000 ரூபாயை எப்போ திருப்பி தருவீங்க கமல்? எதிர்ப்பார்ப்பில் மநீம -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்!












Click it and Unblock the Notifications