11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது.. மாவட்ட நிலவரம்
சென்னை: தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு 100க்கும் கீழாகவே உள்ளது. அதேநேரம் இன்று சென்னை, செங்கல்பட்டு கோவை, கடலூர், சேலம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு திருப்பூர், காஞ்சிபுரம் , தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் நேற்று 46,341 பேர் கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதைவிட குறைவாக 46,306 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று மட்டும் 5,554 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் செப்டம்பர் 28ம் தேதி மாலை நிலவரப்படி எந்த மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகம், எந்த மாவட்டத்தில் நோயாளிகள், எங்கு இன்றைக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது என்ற விவரங்களை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் நோயாளிகள்
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 11043 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 5117 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலத்தில் 2768 பேரும், செங்கல்பட்டில் 2189 பேரும், திருப்பூரில் 1633 பேரும், திருவள்ளூரில் 1589 பேரும், கடலூரில் 1492 பேரும், ஈரோட்டில் 1120 பேரும் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்ட நிலவரம்
தமிழகத்தில் செப்டம்பர் 28 ம் தேதி நிலவரப்படி மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் இன்று 1283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 587 பேரும், சேலத்தில் 256 பேரும், செங்கல்பட்டில் 249 பேரும், திருவள்ளூரில் 249 பேரும், திருப்பூரில் 198 பேரும், கடலூரில் 162 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சையில் 180 பேர்
திருவண்ணாமலையில் 151 பேரும், வேலூரில் 135 பேரும், திருவாரூரில் 128 பேரும், திருச்சியில் 96 பேரும், திருநெல்வேலியில் 63 பேரும், விழுப்புரத்தில் 131 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் 146 பேரும், தஞ்சாவூரில் 180 பேரும், புதுக்கோட்டையில் 97 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரியில் 137 பேர்
கள்ளக்குறிச்சியில் 58 பேரும், காஞ்சிபுரத்தில் 147 பேரும், கன்னியாகுமரியில் 98 பேரும் ராணிப்பேட்டையில் 52 பேரும், தேனியில் 74 பேரும், நீலகிரியில் 137 பேரும், திருப்பத்தூரில் 69 பேரும் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கையில் 38 பேரும், அரியலூரில் 36 பேரும், தென்காசியில் 53 பேரும், நாகப்பட்டினத்தில் 61 பேரும், மதுரையில் 86 பேரும், கரூரில் 51 பேரும், கிருஷ்ணகிரியில் 94 பேரும் , பெரம்பலூரில் 26 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications