3 நாள் விடுமுறை.. சென்னையில் இருந்து 610 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம்! போக்குவரத்து துறை அறிவிப்பு
சென்னை: நாளை முதல் தொடர்ந்து 3 நாள் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ந்து 3 நாள் விடுமுறையாகும்.
இதனால் சென்னை, கோவை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தங்கி வேலை செய்யும் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல முடிவு செய்துள்ளனர்.

உயர்ந்த கட்டணம்
குறிப்பாக சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர் புறப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் தனியார் ஆம்னி பஸ்களின் கட்டணம் 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சொந்த ஊர் செல்ல வேண்டும் என்ற ஆவலில் வேறு வழியின்றி மக்கள் பயணம் செய்ய உள்ளனர்.

அமைச்சர் எச்சரிக்கை
இதற்கிடையே தான் மக்களிடம் அதிக கட்டணம் வாங்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அதுபற்றி வட்டார போக்கவரத்து அலுவலகத்தில் புகார் அளி்க்கலாம் என அவர் கூறியுள்ளார். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பை கண்காணிக்க இணை போக்குவரத்து ஆணையர், துணை போக்கவரத்து ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

610 பேருந்துகள் இயக்கம்
இந்நிலையில் தான் 3 நாள் தொடர் விடுமுறையால் தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து 610 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவிப்பு செய்துள்ளது.

திங்கட்கிழமையும் ரிட்டன் பஸ்
மேலும் விடுமுறை முடிந்து வெளியூரில் இருந்து மக்கள் சென்னை திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் திங்கட்கிழமை தமிழ்நாட்டின் பிற இடங்களில் இருந்து சென்னையை நோக்கி பயணிக்க உள்ளது.
-
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் தமிழன் பார்த்திபனை கேள்விகளால் துளைத்த மக்கள் -
நீ நல்லா 'சாப்பிட்டிருக்க'.. நான் இன்னும் சாப்பிடல.. கிளாம்பாக்கத்தில் அமைச்சர் பேசியது ஏன்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications