அரண்டு போன இந்தியன் ஆயில்.. கேஸ் முன்பதிவில் மீண்டும் தமிழ்! மக்களிடம் வருத்தம் தெரிவித்த அதிகாரி
சென்னை: இன்டேஸ் கேஸ் முன்பதிவு செய்யும் அலைபேசி IVRS சிஸ்டத்தில் மாநில மொழியை தேர்ந்தெடுக்கும் வசதியில் தமிழ் மொழி நீக்கப்பட்டதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்து உள்ளது.
மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு வெங்கடேசன் நேற்று எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், "இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் நிறுத்தம். இந்தி மட்டுமே இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியாதா? விதிகளை மீற உத்தரவிட்டது யார்? உடனடியாக தமிழ் சேவையை உறுதிப்படுத்துங்கள்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று இந்தியன் ஆயில் தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "இந்தியாவின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனமான நாங்கள் நவம்பர் 1, 2023 முதல் ஏர்டெல்லிலிருந்து ஜியோவிற்கு மாறியதால் எங்கள் IVRS (இன்டர்ஆக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்) - 7718955555 சிஸ்டத்தில் மாநில மொழி தேர்வு வசதியில் சிறு தடங்கல் ஏற்பட்டது என்பதை எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
தற்காலிகமாக நிகழ்ந்த இந்த மாற்றத்தின்போது எங்களது சிஸ்டத்தில் உங்களுக்கு விருப்பமான மொழி விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் வரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தேர்வுகளை மட்டுமே நீங்கள் பெற முடிந்தது. இது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அறிகிறோம். நீங்கள் இதனை பொறுமையாக புரிந்துகொண்டு உள்ளதற்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டுவிட்டது என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதுடன், எங்களது IVRS சிஸ்டம் இப்போது தானாகவே மாநில மொழிகள் மற்றும் விருப்பமான மொழித்தேர்வு அமைப்புகளுடன் கூடிய வசதியை வாடிக்கையாளர்கள் தடையின்றி பெறலாம் என்பதையும் உறுதி செய்கிறோம்.
LPG சிலிண்டர் மின்பதிவு வசதியை தமிழ் மொழியிலும் பெறலாம் என்ற தகவலுடன், பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் வாடிக்கையாளர்களுக்கும் உதவும் வகையில் பல மாநில மொழித்தேர்வுகளுடன் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது என்பதையும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியன் ஆயிலில் உங்களுக்கு அனைத்து இயலக்கூடிய வழிகளிலும் சேவையளிப்பதில் முனைந்து செயல்படுகிறோம் என்பதுடன் எங்கள் சேவைகள் உங்களுக்கு வசதியாகவும் சௌகரியமாகவும் இருப்பதையும் உறுதி செய்கிறோம்.

இந்த சேவை மாற்றத்தின் செயலாக்கத்தினால் உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்வதுடன் எங்கள் சேவைகளின் மீது நீங்கள் வைத்துள்ள இடைவிடாத நம்பிக்கைக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியன் ஆயில் முன்னேறத்திற்கு சக்தியளிக்கிறோம். வாழ்விற்கு புத்துயிரூட்டுகிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications