சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்க பாஸ்வேர்ட் என்ன? ’பாஸ்வேர்ட்’ தான்! வீக்காக வைத்திருக்கும் இந்தியர்கள்! இதைவிட கொடுமை தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை : உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் பாஸ்வோர்ட் எனப்படும் கடவுச்சொற்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதனை ஈசியாக ஹேக் செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? முடியும்.. காரணம் பெரும்பாலான மக்கள் ஒரே மாதிரியான பாஸ்வேர்டை பயன்படுத்துகின்றனர்.

இமெயில் , பேஸ்புக், ட்விட்டர் என எந்த சமூக வலைதளங்களையும் அல்லது வங்கி கணக்கு உள்ளிட்ட அதிரகசிய தகவல்களை பாதுகாக்க பாஸ்வேர்டு எனப்படும் கடவுச் சொற்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட நபரை தவிர வேறு யாரும் அந்த தகவலை திறக்கவோ அல்லது மாற்றம் செய்யவோ முடியாது.

எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும் பாஸ்வேர்டைகளை திருடி அல்லது லேப்டாப் செல்போன்களை ஹேக் செய்து தகவல்களை திருட முடியும். அதனால் தான் பாஸ்வேர்ட்களை உருவாக்கும் போது கடினமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள்.

பாஸ்வேர்ட்

பாஸ்வேர்ட்

ஆனால் பாஸ்வேர்ட் வைப்பதையே பெரிய வேலையாக கருதும் பெரும்பாலானோர் மிக எளிமையான பாஸ்வேர்டுகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதேபோல் அனைத்திற்கும் ஒரே பாஸ்வேர்ட் வைப்பதும் வழக்கமாக இருக்கிறது இதனால் சைபர் குற்றங்களும் அதிகரிக்கிறது. நமது கணக்கை எல்லாம் யார் ஹேக் செய்யப் போகிறார்கள் என மக்களிடையே ஒரு அலட்சியப் போக்கும் இருக்கிறது. இதனால் தான் லட்சக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு வருகின்றன.

 எளிதாக திருட முடியும்

எளிதாக திருட முடியும்

இந்த நிலையில் நோர்டு பாஸ் என்ற நிறுவனம் உலகில் உள்ள பெரும்பாலான மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாஸ்வோர்ட்களை எளிதாக திருட முடியும் என அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு இருக்கிறது. பாஸ்வேர்ட் மேனேஜிங் நிறுவனமான இது உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் ஒரே மாதிரியான பாஸ்வோர்ட்களை பயன்படுத்துகின்றனர் எனக் கூறுகிறது.

ஷாக் தகவல்

ஷாக் தகவல்

அதன்படி சுமார் 34 லட்சம் இந்தியர்கள் "password" என்ற வார்த்தையை தங்களது பாஸ்வேர்டாக வைத்திருக்கின்றனர் இது மட்டுமல்லாமல் சுமார் ஒன்றரை லட்சம் பேர் '123456' என்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் '12345678' என பாஸ்வேர்டாக வைத்திருக்கின்றனர். இது மட்டும் அல்லாமல் இதே போல 200 எளிமையான பாஸ்வேர்டுகள் இந்த பட்டியலில் இருக்கின்றன.

என்னென்ன?

என்னென்ன?

'qwerty', பிறந்தநாள், தந்தை மகனின் பெயர், இருசக்கர நான்கு சக்கர வாகனங்களின் பதிவு எண்கள், செல்லப் பிராணிகளின் பெயர்கள், பள்ளிக்கூடங்களின் பெயர்கள் உள்ளிட்டவையும் பாஸ்வேர்டுகளாக பயன்படுத்தப்படுகிறது, இது மட்டுமில்லாமல் பெரும்பாலானோர் தங்கள் பெயர்களையே பாஸ்வேர்டாக பயன்படுத்தி வருவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டாக '1 2 3 4 5 6' இருக்கிறது. இதனால் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் பலரது தனிப்பட்ட தகவல்களை திருட முடியும் என்கிறது அந்த நிறுவனம். எல்லாம் சரி உங்க பாஸ்வேர்ட் என்ன?

English summary
As the whole world has gone digital, passwords called passwords are used to protect their personal information. But did you know that it can be easily hacked? Can.. because most people use same password.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X