சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார் கொடுத்த அட்வைஸ் அது? சிஎஸ்கே செய்த பெரிய தப்பு.. இப்போ பாருங்க விடாமல் துரத்துகிறது.. பரிதாபம்!

Google Oneindia Tamil News

சென்னை: 2022 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக எடுத்த முடிவு ஒன்று சிஎஸ்கே அணியை மிக மோசமாக துரத்திக்கொண்டு இருக்கிறது. இதில் இருந்து சிஎஸ்கே அணி எப்படி தப்பிக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

2022 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியும், மும்பை அணியும் மிக மோசமாக ஆடி வருகிறது. இந்த தொடரில் மும்பை அணி வரிசையாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்துவிட்டது.

சிஎஸ்கே அணி 6 போட்டிகளில் ஆடி 5 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது. புதிய கேப்டன் ஜடேஜாவின் கேப்டன்சி நன்றாக இருந்தும் கூட பவுலிங் சிஎஸ்கே அணியில் மோசமாக சொதப்பிவிட்டது.

ஐபிஎல் பார்க்க எல்லை தாண்டிய ரசிகர்... வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்தார்... பரபர பின்னணி ஐபிஎல் பார்க்க எல்லை தாண்டிய ரசிகர்... வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்தார்... பரபர பின்னணி

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே அணியின் தொடர் சொதப்பலுக்கு மோசமான பவுலிங்தான் காரணம். சிஎஸ்கேவில் ஸ்பின் பவுலர்கள் நன்றாகவே பவுலிங் செய்கிறார்கள். முக்கியமாக தீக்சனா சிஎஸ்கே அணியில் டாப் ஸ்பின் பவுலராக உருவெடுத்து உள்ளார். இது போக ஜடேஜா, மொயின் அலி ஆகியோரும் நன்றாகவே பவுலிங் செய்து வருகிறார்கள். பிராவோவும் டெத் ஓவர்களில் நன்றாகவே பவுலிங் செய்கிறார்.

பாஸ்ட் பவுலிங்

பாஸ்ட் பவுலிங்

ஆனால் சிஎஸ்கே அணியில் பாஸ்ட் பவுலிங்தான் மிக மோசமாக அமைந்துள்ளது. கடந்த போட்டியில் சிஎஸ்கே அணி குஜராத் அணிக்கு எதிராக தோல்வி அடைய மோசமான பாஸ்ட் பவுலிங்தான் காரணம். அதிலும் 18வது ஓவர் வீசிய ஜோர்டான் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இது போக இளம் பவுலர் முகேஷும் அவ்வளவு சிறப்பாக பவுலிங் செய்வது இல்லை. ஆடம் மில்னே இப்போதுதான் காயத்தில் இருந்து குணமடைந்து உள்ளார்.

சாகர்

சாகர்

இதனால் அவரும் இல்லை. இது போக இன்னொரு முக்கியமான வீரர் சாகரும் இந்த சீசனில் காயம் காரணமாக ஆடவில்லை. மொத்தத்தில் சிஎஸ்கே அணியில் நல்ல பாஸ்ட் பவுலர்கள் இல்லாமல் அணி நிர்வாகம் சொதப்பி வருகிறது. சிஎஸ்கே அணி ஏலத்திற்கு முன்பாக எடுத்த முடிவு ஒன்றுதான் அணியை சிக்கலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. சிஎஸ்கே அணி ஏலத்திற்கு முன்பாக பாஸ்ட் பவுலர்களை தக்க வைக்கவில்லை.

ஏலம்

ஏலம்

அதேபோல் ஏலத்தின் போதும் கூட ஹஸல்வுட் போன்ற வீரர்களை எடுக்க பெரிதாக முயற்சி செய்யவில்லை. இதுவே தற்போது சிஎஸ்கே அணியை துரத்த தொடங்கி உள்ளது. அதிலும் பெங்களூர் அணியால் எடுக்கப்பட்ட ஹஸல்வுட்தான் தற்போது ஆர்சிபி அணியில் மேட்ச் வின்னராக இருக்கிறார். ஆர்சிபி அணியில் அவர்தான் தற்போது டாப் பவுலர். நேற்று போட்டியில் வெறும் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து அவர் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

Recommended Video

    Virat Kohli என் பக்கத்தில் வந்தபோது நான் பயந்துட்டேன்.. Suryakumar Yadav வெளியிட்ட தகவல்
    எத்தனை ரன்கள்

    எத்தனை ரன்கள்

    இந்த சீசனில் ஹஸல்வுட் எடுத்த விக்கெட்டுகள் விவரம்,

    4-0-33-1
    4-0-28-3
    4-0-25-4

    3 போட்டிகளில் 8 விக்கெட் எடுத்து அசத்தி இருக்கிறார். இவரை போன்ற ஒரு முக்கியமான வீரரை எடுக்க வேண்டாம் என்ற முடிவை சிஎஸ்கே அணியில் யார் எடுத்தது. இது போன்ற ஆலோசனைகளை அணிக்கு யார் வழங்கியது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    IPL 2022: CSK ex-player Hazelwood playing well for RCB amid Chennai struggles with bowling. 2022 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக எடுத்த முடிவு ஒன்று சிஎஸ்கே அணியை மிக மோசமாக துரத்திக்கொண்டு இருக்கிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X