சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைதி.. அமித் ஷா சொன்னதை நோட் பண்ணீங்களா? தமிழ்நாட்டிற்கு டெல்லியிலிருந்து வந்த "மறைமுக" மெசேஜ்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அரசை விமர்சிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி இருக்கும் விஷயம் ஒன்றும் அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் மற்றும் பல்கலைக்கழக விவகாரங்களில் முடிவு எடுப்பது தொடர்பாக பல்வேறு மோதல்கள் நிலவி வருகிறது. கடந்த ஆட்சியின் போது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சுரப்பா நியமிக்கப்பட்ட போதே அதை திமுக கடுமையாக எதிர்த்தது.

அதன்பின் ஆளும் கட்சியாக திமுக வைத்த பின் துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தை நீக்க வேண்டும் என்று நினைத்தது.

அவரு அமித் ஷா இல்லங்க பொய்களின் பாட்ஷா! பேர மாத்திக்க சொல்லுங்க..! வெளுத்து வாங்கிய கேசிஆர் வாரிசு! அவரு அமித் ஷா இல்லங்க பொய்களின் பாட்ஷா! பேர மாத்திக்க சொல்லுங்க..! வெளுத்து வாங்கிய கேசிஆர் வாரிசு!

ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

இந்த நிலையில்தான் ஆளுநர் ரவி ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தினர். தற்போது பல்கலைக்கழகங்களில் ஆளுநர்தான் வேந்தர். இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவர் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தினார். ஆனால் இது தமிழ்நாடு அரசு கொடுத்த அதிகாரம் ஆகும். ஆளுநரின் இந்த மாநாடு கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. அரசுக்கு எதிரான அவரின் மூவ் போல பார்க்கப்பட்டது.

 துணை வேந்தர்

துணை வேந்தர்

இந்த நிலையில்தான் ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உடனடியாக தமிழ்நாடு அரசு அதே நாளில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது. ஆளுநர் நியமனங்களை தமிழ்நாடு முதல்வரே நியமிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி இனி தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் வேந்தராக ஆளுநர் இருக்க மாட்டார். முதல்வரே நீடிப்பார் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு மசோதா

தமிழ்நாடு அரசு மசோதா

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும் ஆளுநர் இன்னும் இதை டெல்லிக்கு அனுப்பவில்லை. ஆளுநர் ரவி இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே நிலுவையில் இருக்கும் 11 மசோதாவுடன் சேர்த்து இந்த மசோதாவையும் ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு இருக்கிறார். அதோடு இது concurrent லிஸ்டில் வரும் விஷயம் என்பதால் இதை பற்றி ஆளுநர் ரவிக்கு டெல்லியிலும் பேசி இருக்கிறாராம்.

டெல்லி பயணம்

டெல்லி பயணம்

அதாவது ஆளுநர் ரவியின் டெல்லி பயணத்தின் போது அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்த பல்கலைக்கழக விவகாரம் குறித்து அமித் ஷா மறைமுகமாக தமிழ்நாடு அரசுக்கு எதிராக விமர்சனங்களை வைத்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பேசிய அமித் ஷா, பல்கலைக்கழகங்களை, கருத்தியல் மோதலுக்கான இடமாக மாறக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 கருத்து பரிமாற்றம்

கருத்து பரிமாற்றம்

அவர் தனது பேச்சில்.. பல்கலைக்கழகங்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கான களமாக இருக்க வேண்டும்.. அதற்கான களமாக மாற வேண்டுமே தவிர, அரசியல் மோதலுக்கு, கருத்தியல் மோதலுக்கு காரணமாக இருக்க கூடாது. நாம் அமைதியை விரும்ப வேண்டும். அமைதியை வணங்க வேண்டும், என்று மறைமுக விமர்சனம் செய்துள்ளார். ஆளுநர் ரவி டெல்லிக்கு சென்றுவிட்டு வந்த நிலையில் முதல்முறை பல்கலைக்கழக விவகாரங்கள் பற்றி அமித் ஷா வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

English summary
Is Amit Shah indirectly taking a dig at Tamil Nadu Government in University row? தமிழ்நாடு அரசை விமர்சிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி இருக்கும் விஷயம் ஒன்றும் அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X