என்னென்ன சொல்றாங்க பாருங்க.. கல்விக்காக கட்டிய கட்டிடமா?.. கோவை ஈஷா மையம் பற்றி திமுக எம்பி கேள்வி
சென்னை: கல்வி நோக்கத்திற்காக கட்டடங்களை கட்டியுள்ளதால் சுற்றுச்சூழல் அனுமதி பெறும் விதியில் கோவை ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியதால் திமுக எம்பி செந்தில்குமார் ஆச்சரியமடைந்து கேள்விகள் எழுப்பி உள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. சத்குரு ஜக்கி வாசுதேவால் நிறுவப்பட்ட இந்த மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதி யோகி சிலை உள்ளது.
ஆதியோகி சிலையை பிரதமர் மோடி கடந்த 2017 ம் ஆண்டில் மகாசிவராத்திரியில் திறந்து வைத்தார். அதன்பிறகு ஆண்டுதோறும் மகாசிவராத்திரி தினத்தில் ஈஷா யோகா மையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் தான் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு தடை விதிக்க கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஈஷா யோகா மையம் மீது நோட்டீஸ் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்தது.

மத்திய அரசு வாதம்
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி ராஜா, நீதிபதி டி கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், ‛‛கல்வி நோக்கத்துக்காகவும், மாணவர் விடுதிக்காகவும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே, சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டது.

விலக்கு எப்படி?
இதற்கு நீதிபதிகள், "சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பது ஏன்?" என கேள்வி எழுப்பினர். அதோடு ஈஷா அறக்கட்டளையின் கட்டடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

திமுக எம்பி கேள்வி
இந்நிலையில் தான் மத்திய அரசின் பதிலை கண்டு திமுகவின் தர்மபுரி எம்பி செந்தில்குமார் ஆச்சரியமடைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛கல்வி நோக்கத்திற்காக கட்டிய கட்டிடமா? எங்கே.. என்ன கல்வி...'' என வினா எழுப்பியுள்ளார்.
-
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications