சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1996-ல் முதல்வர் பதவி தேடி வந்ததாம்.. அண்டப் புளுகு ஆகாசப் புளுகு அடித்து விடும் ரஜினி!

Google Oneindia Tamil News

சென்னை: 1996-ல் தம்மை தேடி முதல்வர் பதவி வந்ததாகவும் அப்போதே தாம் அதை நிராகரித்துவிட்டதாகவும் ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறி உண்மை என நிரூபிக்க முயற்சிக்கிறார் ரஜினிகாந்த் என்பது மூத்த பத்திரிகையாளர்களின் குற்றச்சாட்டு.

Recommended Video

    Rajinikanth press meet| Full Speech|ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு... முழு வீடியோ

    அரசியலுக்கு வந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்து எம்ஜிஆரை போல நல்லாட்சி தருவேன் என கூறினார் ரஜினிகாந்த். ஆனால் இப்போது திடீரென ஞானோதயம் ஏற்பட்டு, தமிழகத்தில் புரட்சி, எழுச்சி போன்றவை உருவானால் நான் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார் ரஜினிகாந்த்.

    அதென்ன எழுச்சி வரணும்.. ரஜினி பேசுவதெல்லாம் சும்மா ஏமாற்று வேலை.. அரசியல் நிபுணர்கள் கருத்து அதென்ன எழுச்சி வரணும்.. ரஜினி பேசுவதெல்லாம் சும்மா ஏமாற்று வேலை.. அரசியல் நிபுணர்கள் கருத்து

    முதல்வர் பதவி தேடிவந்ததாம்

    முதல்வர் பதவி தேடிவந்ததாம்

    இப்படி பேசுகிற ரஜினிகாந்த் மறக்காமல் எங்கே சென்றாலும் இன்னொன்றையும் கூறி தமது இமேஜை பில்டப் செய்ய முயற்சிக்கிறார். 1996-ல் முதல்வர் பதவி தம்மை தேடி வந்த போது அதை நிராகரித்தேன் என்பதுதான். சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதும் கூட இது தொடர்பான வீடியோ ஒன்றை ரஜினிகாந்த் ஒளிபரப்ப செய்தார்.

    அன்று களம் திமுக கையில்

    அன்று களம் திமுக கையில்

    ஆனால் ரஜினிகாந்த் இப்படி சொல்வது பச்சை பொய் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளரான ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர். உண்மையும் அதுதான்.. 1996-ல் ஜெயலலிதா ஆட்சி மீது இருந்த படுபயங்கரமான கோபத்தால் இயல்பாகவே திமுக வெல்லும் சூழ்நிலை இருந்தது. அதனாலேயே காங்கிரஸை உடைத்துக் கொண்டு மூப்பனாரும் வெளியே வந்தார்.

    அடிச்சு விடும் ரஜினி

    அடிச்சு விடும் ரஜினி

    காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக வெற்றி பெற இருக்கிற கூட்டணி ஆதரவு தெரிவித்தவர் ரஜினிகாந்த். அதனாலேயே திமுக- தமாகா கூட்டணி வென்றது என ரஜினிகாந்த் சொகுசாக கனவு கண்டு கொண்டிருக்கிறார். அந்த கனவில்தான் அவருக்கு முதல்வர் பதவி வந்து போனதுபோல் இருந்திருக்கலாம். ஆனால் யதார்த்தத்தில் தமிழக ஊடகங்களில் அப்படி ஒரு செய்தி வந்ததே கிடையாது.

    பச்சை பொய் பேசும் ரஜினி

    பச்சை பொய் பேசும் ரஜினி

    அப்படி ஒரு பேச்சும் இருந்ததே கிடையாது. திமுக தலைவர் கருணாநிதி ஆரோக்கியமாகத்தான் இருந்தார். அப்படியான நிலையில் முதல்வர் பதவி தம்மை தேடி வந்தது என ரஜினிகாந்த் சொல்லி வருவதெல்லாம் அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதற்கு இன்றளவும் 1996 வரலாற்றின் சாட்சியங்களாக ஏராளமான சீனியர் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை ரஜினிகாந்த் மறந்துவிடக் கூடாது.

    English summary
    Senior Journos said that Rajinikanth wrongly said that he was denied CM Post in 1996.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X