சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது.. சிம்லா முத்துச்சோழன் திமுகவிலிருந்து விலகுகிறாரா?.. ஆனால் மேட்டர் வேறயாம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Simla Muthuchozhan: சிம்லா முத்துச்சோழன் திமுகவிலிருந்து விலகுகிறாரா?- வீடியோ

    சென்னை: மறைந்த திமுக முன்னணித் தலைவர் சற்குண பாண்டியனின் மருமகளும், ஆர்.கே நகரின் முன்னாள் வேட்பாளருமான சிம்லா முத்துச் சோழன் விரைவில் திமுகவில் இருந்து விலகுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் நிஜ மேட்டர் வேற என்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த திமுகவினர்.

    ஆர்கே நகரில் ஜெயலலிதா போட்டியிட்டபோது அவரை எதிர்த்து திமுக தரப்பில் போட்டியிட்டவர் சிம்லா முத்து சோழன். அப்போது அந்த தேர்தலில் ஜெயலலிதாவே வென்றார். இருந்தாலும் சிம்லா முத்துச் சோழன் வெறும் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ஒரு மாநில முதல்வரிடம் தோல்வியை தழுவினார்.

    சீட் இல்லை

    சீட் இல்லை

    அதன் பின்னர் ஜெயலலிதா இறந்த பின்னர் மீண்டும் நடைபெற்ற இடைதேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு பதிலாக பத்திரிகை நிருபராக இருந்த மருது கணேஷ் என்பவர் நிறுத்தப்பட்டார். அப்போது தேர்தலில் பணம் கொடுக்கப்பட்டது என்பதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தியது.

    மீண்டும் சீட் இல்லை

    மீண்டும் சீட் இல்லை

    அதன் பின்னர் மீண்டும் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போதும் சிம்லா முத்து சோழன் தனக்கு இம்முறை உறுதியாக சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனாலும் மருது கணேசுக்கே வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றார். திமுக டெபாசிட்டை பறிகொடுத்தது. சிம்லா முத்து சோழனை நிறுத்தியிருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார் என்ற பேச்சு நிலவியது. சிம்லா முத்து சோழன் கனிமொழியின் ஆதரவாளர் என்பதாலேயே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்ற பேச்சும் அப்போது திமுகவில் நிலவியது.

    பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேருவதற்கான காரணமே அத்வானியும், ஜோஷியும்தான்.. சத்ருகன் சின்ஹாபாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேருவதற்கான காரணமே அத்வானியும், ஜோஷியும்தான்.. சத்ருகன் சின்ஹா

    கலாநிதிக்கு வாய்ப்பு

    கலாநிதிக்கு வாய்ப்பு

    இதனை தொடர்ந்து தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் அவர் வட சென்னை தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்திருந்தார். கனிமொழியின் ஆதரவாளராக இருந்த சிம்லா இப்போது ஸ்டாலினின் ஆதரவாளராக மாறியதாக கூறப்படுகிறது. அப்படியிருந்தும் அவருக்கு வட சென்னையில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

    இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழா.. பங்கேற்க மறவாதீர்கள்

    பொறுப்பாளர் பதவியும் இல்லை

    பொறுப்பாளர் பதவியும் இல்லை

    இதில் சிம்லா முத்து சோழன் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் போட்டியிடத்தான் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருந்தாலும் தொகுதி பொறுப்பாளர் பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அதுவும் மருது கணேசுக்கு போய்விட விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ளார் சிம்லா முத்து சோழன் என்று கூறப்பட்டது.

    வெளியேறுவாரோ

    வெளியேறுவாரோ

    விரைவில் அவர் திமுகவில் இருந்து வெளியேறும் திட்டத்தில் உள்ளாராம். இதற்கிடையில் திமுக தலைமை அவரை அழைத்து சமாதானப் படுத்தினால் அவர் திமுகவில் தொடரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் திமுக பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவர் திமுகவில் இருந்து வெளியேறுவதாக வரும் தகவல் திமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . ஆனால் இதுகுறித்து விசாரித்துப் பார்த்தபோது நிஜமான மேட்டர் வேறு என்கிறார்கள்.

    தொடர்ந்து திமுகவில் சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் சிம்லா முத்துச்சோழன் கட்சியிலிருந்து விலகும் எண்ணத்தில் எல்லாம் இல்லையாம். மாறாக கட்சித் தலைமையின் கவனத்தை ஈர்க்க அவர் விரும்புகிறார் என்று விவரம் தெரிந்த கட்சியினர் காதில் கிசுகிசுத்தனர்.

    English summary
    Sources say that Simla Muthuchozhan is leaving DMK. But insiders say different story.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X