அவர்தான் அதிமுகவை உடைக்க போவதாம்.. தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே ரெடி? சீக்ரெட்டை போட்டுடைச்சிட்டாரே
சென்னை: அதிமுகவில் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகி வருகிறார், அவர் கட்சியை உடைப்பார் என்று பல ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அதிமுக - பாஜக மோதலை பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் வரவேற்று உள்ளனர். இவர்களின் கூட்டணி முறிவை பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் பாராட்டி வரவேற்று உள்ளனர். பெரும்பாலான தொண்டர்கள்.. பாஜகவுடன் கூட்டணி இருந்தது தவறான முடிவு. அதனால் நாம் தோல்வி அடைந்தோம். இனி பிரச்சனை இல்லை.

இனி அதிமுக பழைய நிலைமைக்கு வரும். மீண்டும் அதிமுக வெற்றிகளை பதிவு செய்யும். அதிமுக வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்று அதிமுக தொண்டர்கள் பலர் தெரிவிக்கின்றனர். தொண்டர்கள் பெரும்பாலும் இதை ஒரு மனதாக ஏற்று இருந்தாலும் கூட மேலே இருக்கும் அதிமுக தலைவர்கள் இதை ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக உடையுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்
அதில், அதிமுகவில் ஒருவர் தமிழ்நாட்டில் ஏக்நாத் ஷிண்டே ஆக வாய்ப்புள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஒருவர் பெயரை குறிப்பிடுகின்றனர். அவரை பற்றி இரண்டு விதமாக பார்க்கலாம். அவர் பாஜவின் ஆள்தான். பாஜகவிற்கு நெருக்கமானவர்தான். அவர் பாஜகவுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அப்போதுதான் அரசியல் செய்ய முடியும். பிஸ்னஸ் செய்ய முடியும். திமுகவை எதிர்க்க முடியும். பணிகளை செய்ய முடியும். அதிகாரத்தில் இருக்க முடியும் என்று நினைக்கிறார்.
திமுகவை எதிர்க்க முடியும். 2024 வரையாவது கூட்டணி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு பிறகு கூட கூட்டணி இருக்க வேண்டும் என்று நினைக்கலாம். கொங்கு மண்டலத்தில் அவர் ஜெயிக்க.. அவர் உழைக்க வேண்டும். அவருடன் இன்னொருவர் ஜெயிக்க வேண்டும். இங்கே பாஜகவும் பணிகளை செய்ய வேண்டும். பாஜகவும் உழைக்க வேண்டும் . அவர்கள் எல்லாம் சேர்ந்து இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.
மோதல்: இப்படி சேராமல் இருந்ததால் மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்தனர். கொங்கு மண்டலம் முழுக்க அவர்கள் தோல்வி அடைந்தனர். பாஜக - அதிமுக யாரும் இல்லை. ஆனால் வடக்கு மாவட்டத்தில் வெல்ல வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார். சிவி சண்முகம் அதைத்தான் நினைக்கிறார். தருமபுரி , கிருஷ்ணகிரியில் வன்னியர்கள் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். அங்கே பாஜக கூட்டணி இருக்க கூடாது. அப்போதுதான் வெற்றிபெற முடியும்.
அவர்கள் இல்லாமல் வெல்ல வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார். அப்படி இருக்க கொங்கு மண்டலத்தில் அதிமுக வெல்ல முடியாது. பாஜக இல்லாமல் அங்கே வெல்ல முடியாது. பாஜக இல்லை என்றால் கொங்கு மண்டலத்தில் ஒரு அரசியல் தலைவர் வெல்ல முடியாது. அவரே கூட தோல்வி அடையலாம். அதோடு அவர் தோல்வி அடைந்து 3ம் இடத்திற்கு கூட செல்லலாம். அப்படி செய்தால் அவரின் அரசியல் எதிர்காலம் பாதிக்கும். அவர் அரசியல் ரீதியாக பாதிப்படைவார்.

ஷிண்டே வருவார் ?: அந்த அரசியல் தலைவருக்கு எதிராக 4 முறை திமுக ரெய்டு விட்டது. அதேபோல் பல முக்கிய கேஸ்கள் உள்ளன. சொத்து குவிப்பு வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் நடவடிக்கை எடுக்கலாம். இதை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால் கூட அமலாக்கத்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். அமலாக்கத்துறை இவர் மீது ஆக்சன் எடுக்கலாம். இதனால்தான் அவர் பாஜகவுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். பாஜக இருந்தால் மட்டுமே இதை தடுக்க முடியும்.
பாஜக இல்லை என்றால் நமக்கு எதிராக எல்லாம் திரும்பும். முக்கியமாக விசாரணை ரீதியாக ஆக்சன் எடுக்கப்படலாம் என்று பயப்படுகிறார் . அதனால்தான் பாஜக கூட்டணியை அவர் எதிர்பார்க்கிறார். பாஜகவுடன் கூட்டணி வைப்போம். தேர்தலுக்கு முன் எடப்பாடி கூட்டணி வைக்கவில்லை என்றால் கொங்கு மண்டலத்தில் அதிமுகவை உடைப்போம் என்று அவர் நினைக்கிறார். தேர்தல் நேரத்தில் எடப்பாடி ஸ்டான்டை எடுக்கவில்லை என்றால் அவர் எடப்பாடிக்கு எதிராக திரும்புவார்.
பாஜகவை நாடவில்லை என்றால் எடப்பாடியை அவர் எதிர்க்க துணிவார். கொங்கு மண்டலத்தில் பாஜக வேண்டும் என்று அவர் நினைக்கிறார். பாஜக இல்லை என்றால் வாக்குகள் பிரியும் என்று அவர் நினைக்கிறார். அதில் இருந்து தப்பிக்க அவர் ஏக்நாத் ஷிண்டேவாக மாறுவாரா என்று சொல்ல முடியாது. ஆனால் அவர் ஆக்சன் எடுப்பார், என்றுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications