Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விபத்துக்கு சீதோஷ்ண நிலை காரணமா? ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, பாதுகாப்புத்துறை பேராசிரியர் கருத்து

Subscribe to Oneindia Tamil

ஹெலிகாப்டர் விபத்து நடந்த மலைப்பகுதியில் விபத்துக்கு முக்கிய காரணம் சீதோஷ்ண நிலை, டெக்னிக்கல் ஃபால்ட், விமானியின் தவறு என பலகாரணங்கள் கூறப்படுகிறது. உலகின் நம்பர் ஒன் ஹெலிகாப்டர் எவ்வாறு விபத்தை சந்தித்திருக்கும் என்பது குறித்து முன்னாள் ராணுவ வீரர், பாதுகாப்புத்துறை பேராசிரியர் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

பிபின் ராவத் பயணம் செய்த எம்.ஐ.17V-5 ரக ஹெலிகாப்டர்

பிபின் ராவத் பயணம் செய்த எம்.ஐ.17V-5 ரக ஹெலிகாப்டர்

பிபின் ராவத் பயணம் செய்த எம்.ஐ.17V-5 ரக ஹெலிகாப்டர் பாதுகாப்பு மிக்க ஹெலிகாப்டராக பார்க்கப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டராக இருந்தாலும் அது விவிஐபிக்கள் பயணம் செய்யும் முக்கியமான ஹெலிகாப்டர் ஆகும். இது ஒவ்வொருமுறையும் நவீனபடுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கிய ஹெலிகாப்டர். 60-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வகை ஹெலிகாப்டரை பயன்படுத்துகின்றன. உலகின் மிகவும் பாதுகாப்பான ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று.

ஹெலிகாப்டர் விபத்து முப்படை தளபதி மனைவியுடன் உயிரிழப்பு

ஹெலிகாப்டர் விபத்து முப்படை தளபதி மனைவியுடன் உயிரிழப்பு

நேற்று காலை முக்கிய நிகழ்ச்சிக்காக முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் என 14 பேர் கோவை சூலூரிலிருந்து வெலிங்டன் ராணுவதளத்துக்கு எம்.ஐ சீரிஸ் ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது விபத்து ஏற்பட்டு 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் என்பவர் காயங்களுடன் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

விபத்து நடந்ததற்கு முன்

விபத்து நடந்ததற்கு முன்

எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் விவிஐபிக்கள் பயன்பாட்டுக்கு பாதுகாப்பாக உள்ள ஹெலிகாப்டர் ஆகும். டெல்லியில் இந்த ஹெலிகாப்டர் புறப்படும் முன் கடுமையான சோதனைக்கு முன்னரே புறப்பட்டுள்ளது. மேண்டேட்ரி செக் எனப்படும் மெக்கானிக்கல் சோதனைகள் அனைத்தும் செய்யப்பட்டப்பின் புறப்பட்டுள்ளது. அனைத்து பரிசோதனைகள் செய்யப்பட்டதை மீறி விபத்து நடந்தது என்றால் அது மனித ஆற்றலை மீறி நடந்திருக்க வாய்ப்புள்ளது.

சூலூரிலிருந்து காலையில் புறப்பட்ட ஹெலிகாப்டர்

சூலூரிலிருந்து காலையில் புறப்பட்ட ஹெலிகாப்டர்

சூலுரிலிருந்து காலை 10-40 க்கு வெலிங்கடன் நோக்கி புறப்பட்ட ஹெலிகாப்டர் குன்னூருக்கு அருகே காட்டேரி என்கிற மலைப்பாதைக்கு அருகே செல்லும் முன் விபத்தில் சிக்கியது. விபத்துக்கு முன் ஹெலிகாப்டர் தடுமாறியதாகவும் மரத்தின் மீது மோதியதாகவும் நேரில் பார்த்த ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். விமானம் புறப்பட்ட 30 நிமிடங்கள் பறந்த நிலையில் இறங்கும் இடத்தை நெருங்க 5 நிமிடம் உள்ள நிலையில் விபத்தில் சிக்கியது.

சிக்னல் டிராப் ஆனதால் விபத்தா?

சிக்னல் டிராப் ஆனதால் விபத்தா?

சிக்னல் ட்ராப் ஆனதால் விபத்து என்பதை நிபுணர்கள் ஏற்க மறுக்கின்றனர். சிக்னல் இல்லாவிட்டாலும் எஸ்.ஓ.பி எனப்படும் ஸ்டாண்டர்ட் ஆபரேஷன் ப்ரொசீஜர் மூலம் திறமை வாய்ந்த விமானி குறிப்பிட்ட இடத்திற்கு எளிதாக செல்ல முடியும். அதுவுமல்லாமல் நூறு முறைக்கு மேல் இதே பகுதியில் இக்குறிப்பிட்ட ஹெலிகாப்டரை இயக்கியுள்ளார் பைலட் ஆகவே விபத்து குறித்து பல்வேறு ஹேஷ்யங்கள் வருகின்றன.ஹெலிகாப்டர் விபத்து முன்னாள் ராணுவ அதிகாரிகள் கூறுவது என்ன?

விபத்து குறித்து பாதுகாப்புத்துறை பேராசிரியர் ஜெகன்நாதன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

பாதுகாப்பு மிக்க ஹெலிகாப்டர்

பாதுகாப்பு மிக்க ஹெலிகாப்டர்

எம்.ஐ 17 நமக்கு புதிதான ஒன்றல்ல ஏற்கெனவே எம்.ஐ 8 என 1977 களிலிருந்து உள்ள ஹெலிகாப்டர்தான். அதன் அப்டேட் வர்ஷன் தான் இது. இது டூயல் பர்பஸுடன் கூடிய நவீனமான ஒரு ஹெலிகாப்டர் ஆகும். இது எவ்வித சீதோஷ்ண நிலையிலும் இயங்கும் வகையில் உள்ள ஹெலிகாப்டர் ஆகும். மிக அதிகமான குளிர்ந்த சூழ்நிலையில் உள்ள இடங்களிலும் வெற்றிகரமாக இயங்கக்கூடிய ஹெலிகாப்டர் ஆகும்.

 துப்பாக்கியால் சுடப்பட்டாலும் பாதிப்பில்லாத எரிபொருள் டாங்குகள்

துப்பாக்கியால் சுடப்பட்டாலும் பாதிப்பில்லாத எரிபொருள் டாங்குகள்

இதன் இரட்டை அடுக்குத்தன்மைக்கொண்ட எரிபொருள் டேங்குகள் மிகுந்த பாதுகாப்பு கொண்டவை . கீழே இருந்து துப்பாக்கியால் சுட்டாலும் அதன் எரிபொருள் டாங்க் வெடிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டது. இதை பேரிடர் காலங்களில் மீட்புப்பணியிலும் பயன்படுத்தலாம். எவ்வித சீதோஷ்ண நிலையிலும் இயங்கக்கூடியது. 60 நாடுகள் இவ்வகை ஹெலிகாப்டரை பயன்படுத்துகின்றனர்.

வதந்தி பரப்புகிறார்கள் உண்மையில்லை

வதந்தி பரப்புகிறார்கள் உண்மையில்லை

மற்ற நாடுகளில் இவ்வகை ஹெலிகாப்டர்கள் விபத்தை சந்தித்ததாக தகவல் இல்லை. இந்தியாவில் மட்டுமே விபத்தை சந்தித்துள்ளது. 5 முறை விபத்தை சந்தித்துள்ளது. அதற்கு டெக்னிக்கலான மந்தநிலை காரணமாக இருக்கலாம். கீழே இருந்து தாக்கியிருக்கலாம் என்றெல்லாம் வாட்ஸ் அப்களில், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள். அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. இந்தவகை ஹெலிகாப்டரை எளிதில் சுட்டு வீழ்த்த முடியாது. கீழே இருந்து சுட்டாலும் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

 ஸ்பேர்பார்ட்ஸ்கள் உள் நாட்டில் தயாரிப்பது நலம்

ஸ்பேர்பார்ட்ஸ்கள் உள் நாட்டில் தயாரிப்பது நலம்

ஹெலிகாப்டர் வாங்கும்போது அதற்கான ஸ்பேர்ஸ்களை அந்த நிறுவனத்திலிருந்தே வாங்கவேண்டும் என்கிற நிலை நமக்கு இடையூறாக உள்ளது. பிபின் ராவத் இதைத்தவிர்க்க உள்நாட்டிலேயே அத்தகைய ஸ்பேர்பார்ட்ஸ்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். ராணுவத்தளவாடங்களில் 70% உள்நாட்டில் தயாரிக்கப்படும் இலக்கை அடைந்துள்ளோம்.

இவ்வாறு உள்நாட்டில் உதிரிபாகங்கள் தயாரிக்கப்படும்போது இதுபோன்ற விபத்துகளை குறைக்கலாம். சீதோஷ்ண நிலைதான் விபத்துக்கு காரணம் என்பதை ஏற்க முடியாது. உத்தரகாண்டில் மோசமான வானிலையில் கூட இந்த ஹெலிகாப்டர் இயங்கியுள்ளது. அங்கும் விபத்தில் சிக்கியதற்கு காரணம் வெள்ளத்தில் சிக்கியவர்களை தொடர்ந்து மீட்பதற்காக 24 மணி நேரத்திற்கும் மேலாக இயக்கியதால் டெக்னிக்கல் பழுது ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது.
என்று தெரிவித்தார்.

விவிஐபிக்கள் ஹெலிகாப்டர் என்பதால் பாதுகாப்பில் சமரசம் இல்லை

விவிஐபிக்கள் ஹெலிகாப்டர் என்பதால் பாதுகாப்பில் சமரசம் இல்லை

விவிஐபிக்கள் பயணம் செய்யும் ஹெலிகாப்டர் இது இதில் ஜனாதிபதி, பிரதமர், முப்படை தளபதி என பலரும் பயணிக்கின்றனர். இது பாதுகாப்பு மிகுந்த ஹெலிகாப்டர். பயணத்துக்கு முன் அதன் ஸ்டேட்டஸ் பார்ப்பார்கள். அதுவுமல்லாமல் சூலூரிலிருந்து வெலிங்டன் நோக்கி முப்படை தளபதி செல்லும்முன் ட்ரை ரன் எனப்படும் முன்னரே ஒருமுறை பைலட் சென்று வந்திருப்பார்.

டூயல் பைலட் சிஸ்டம்

டூயல் பைலட் சிஸ்டம்

மேலும் முக்கிய விஐபிக்கள் பயணம் செய்யும் ஹெலிகாப்டர் என்பதால் ஒரு விமானி மட்டுமல்ல டூயல் பைலட் இருந்திருப்பார்கள். விமானியும் மிகுந்த அனுபவம் உள்ளவர் ஆவார். மேலும் ஹெலிகாப்டரின் ஜாதகம் போல் சார்ட் இருக்கும். அதில் எவ்வளவுக்கெவ்வளவு அந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இருக்கும். ஆனால் விவிஐபிக்களுக்கு அவ்வாறு பயன்பாடு குறைந்த ஹெலிகாப்டர்களே பயன்படுத்துவார்கள். அதனால் அந்தப்பிரச்சினையும் இல்லை. நம்மிடம் இவ்வகை ஏர்கிராஃப்டுகள் 150 உள்ளன.

 அவசர தரையிறக்கத்திலும் எரிபொருள் டாங்க் வெடிக்காது

அவசர தரையிறக்கத்திலும் எரிபொருள் டாங்க் வெடிக்காது

இந்த ஹெலிகாப்டரில் எரிபொருள் டாங்க் வெடிக்காத வகையிலும், விபத்து நேரங்களில் க்ராஷ் லேண்ட் (CRASH LAND) செய்யும்போது தீப்பிடிக்காத வகையிலும் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ஹெலிகாப்டர் ஆகும். சீதோஷ்ண நிலை காரணம் இல்லை, இந்த ஹெலிகாப்டர் அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் இயங்கக்கூடியது. அப்படியே சீதோஷ்ண பாதிப்பு ஏற்பட்டாலும் ஸ்டாண்டர்ட் எஸ்.ஓ.பி எனப்படும் (Standard operating procedure) முறை மூலம் கேப்டனால் இயக்கி பாதுகாப்பாக இறக்க முடியும்.

இதுதான் காரணமா?

இதுதான் காரணமா?

தொழில்நுட்பக்கோளாறு ஏதாவது ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. பிளேடு உடையவும் வாய்ப்பில்லை. இஞ்சின் பழுதாகி க்ராஷ் லேண்ட் (CRASH LAND) செய்தாலும் முழு பாதுகாப்புடன் விமானியால் இதை எவ்வகையிலாவது இடித்து இறக்க முடியும். அப்போது பெட்ரோல் டாங்க் வெடிக்காது. பயணிகள் இருக்கை அமரும் அறையும் பாதுகாப்பு மிகுந்தது. அவ்வாறு க்ராஷ் லேண்ட் (CRASH LAND) sஎய்தாலும் பெரிய உயிரிழப்பு இல்லாமல் காயங்களுடன் பலரும் தப்பிக்க வாய்ப்பிருந்திருக்கும்.

Recommended Video

    பயங்கர சத்தம்.. பதறிய மக்கள்.. Coonnoor-ல் நடந்தது என்ன?
    மலைப்பகுதி என்பதால் சிக்கலா?

    மலைப்பகுதி என்பதால் சிக்கலா?

    ஆனால் பழுது ஏற்பட்டு க்ராஷ் லேண்ட் (CRASH LAND) ஆகும் இடம் சமதளமாக இருந்தால் சாதாரண மைதானத்தில்கூட இறக்கிவிட முடியும். இங்கு க்ராஷ் லேண்ட் (CRASH LAND) ஆகும் இடம் ம்லைப்பகுதியாக இருந்ததால் விபத்து சேதம் அதிகமாகவும் எரிபொருள் டாங்க் வெடித்திருக்க வாய்ப்புள்ளது. என்று தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+