அதிமுகவில் ட்விஸ்ட்! "இந்த 2 பேருமே வேணாம்".. அந்த 2 பேர் தலைமையில் மேற்கு மண்டலத்தில் ரகசிய ஆலோசனை?
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியும் வேண்டாம், ஓபிஎஸ்ஸும் வேண்டாம், 3ஆவது நபரே பொதுச் செயலாளராக வர வேண்டும் என்பதால் மேற்கு மண்டலத்தில் ரகிசய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சுவார்த்தை சூடுபிடித்து வருகிறது. கடந்த இரு தினங்களாக அன்றாடம் புதிய புதிய தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வீடுகளில் தனித்தனியே ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தும் முயற்சி கூட நடந்ததாக சொல்லப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில் இன்னொரு தகவலும் தற்போது கசிந்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமியும் வேண்டாம் ஓபிஎஸ்ஸும் வேண்டாம் , இவர்களை தவிர்த்து 3ஆவதாக ஒரு நபர்தான் தலைவராக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதாம். இது தொடர்பாக மேற்கு மண்டலத்தில் ரகசிய கூட்டம் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருங்கிணைப்பாளர்
ஒருங்கிணைப்பாளர் பதவியையும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியையும் பொருளாளர் பதவியையும் ஓ பன்னீர் செல்வம் வைத்துள்ளார். அது போல் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் எடப்பாடி பழனிச்சாமி வைத்துள்ளார். மற்றவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை என்பதே இந்த மேற்கு மாவட்டத்தினரின் ஆதங்கமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரகசிய கூட்டம்
இந்த ரகசிய கூட்டத்தை வேலுமணியும் விஜயபாஸ்கரும் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. காரணம், வேலுமணியும் விஜயபாஸ்கரும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள். அவ்வாறிருக்கும் போது அவர்கள் எப்படி தனித்து கூட்டம் நடத்துவார்கள்?

எப்படி எதிர்ப்பு
டெல்லி தலைமை ஆதரவே எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கும் நிலையில் அவரை மற்ற நிர்வாகிகள் எப்படி பகைத்துக் கொள்வார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. தொண்டர்களில் கூட ஒரு சாரார் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இன்னொரு சாரார் ஓபிஎஸ்ஸுக்கும் ஆதரவாக உள்ளனர். நடுநிலையாக உள்ள தொண்டர்கள் இவர்கள் இருவரும் வேண்டாம், மூன்றாவது நபர் தலைவராக வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் நாம் பேசிய வரையில் எடப்பாடி பழனிச்சாமியே கட்சியை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். இதற்காக ஓபிஎஸ்ஸை எப்படியும் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்து விடுவார்கள் என்கிறார்கள். ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்களோ, இந்த முறை விட்டுக் கொடுக்கக் கூடாது என வரிந்து கட்டியுள்ளனர். என்னவாக போகிறதோ!
-
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்!












Click it and Unblock the Notifications