Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆன்மீகம், யோகாவில் முழு ஆர்வம்.. ஐஸ்வர்யா தனுஷ் பிரிவுக்கு காரணம் இதுதானா?

ஆன்மிகத்தில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஐஷ்வர்யாவுக்கு குடும்ப வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு மண முறிவு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஸ்வர்யா தனுஷ் விவகாரத்து இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு முடிவுமே ஒரே நாளில் எடுத்து விட முடியாது. திருமணம், விவாகரத்து போன்ற விசயங்களும் அப்படித்தான். 25 ஆண்டுகாலம் வாழ்ந்து வெள்ளி விழா கொண்டாடிய தம்பதியர் கூட விவாகரத்து செய்து பிரிந்திருக்கின்றனர். அப்படித்தான் 18 ஆண்டு காலம் குடும்பம் நடத்திய தனுஷ் ஐஸ்வர்யாவும் இப்போது பிரியப்போவதாக அறிவித்துள்ளனர். இதற்கான பின்னணியில் என்னவாக இருக்கும் என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.

Recommended Video

    Array

    நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். தனுஷை விட இரண்டு வயது மூத்தவர் ஐஸ்வர்யா. 22 வயதான தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

    சினிமாவில் நடிக்க வந்து சில ஆண்டுகளிலேயே பிரபலமான தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து கொண்டு பெரிய குடும்பத்து மருமகனானார். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    சர்ச்சையில் சிக்கிய தனுஷ்

    சர்ச்சையில் சிக்கிய தனுஷ்

    நடிகராக இருப்பதால் நடிகைகளுடன் பலமுறை கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார் தனுஷ். பல நடிகைகளின் மண முறிவுக்கும் காரணம் தனுஷ்தான் என்று பேசப்பட்டது. சர்ச்சைகள் எழுவதும் சமாதானம் ஆவதும் வாடிக்கையானது. 18 ஆண்டுகள் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதியர் திடீரென மனமொத்து பிரிவதாக அறிவித்து கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிக்கையை இருவருமே பதிவிட்டுள்ளனர்.

    நெருக்கமான காட்சிகள்

    நெருக்கமான காட்சிகள்

    தனுஷ் நடிக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து முத்தக் காட்சிகள் இடம்பெற்றதால் அவரது குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்படுத்துவதாக செய்திகள் வெளியானாலும் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இணைந்து பொது நிகழ்ச்சிகளில் தோன்றி தங்கள் உறவு சுமூகமாக இருப்பதை காட்டிக்கொண்டனர். சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் கோயிலுக்கு சென்று மாலையும் கழுத்துமாக நின்ற புகைப்படம் இணையத்தில் வெளியானது.

    ஐஸ்வர்யா தனுஷ்

    ஐஸ்வர்யா தனுஷ்

    தனுஷின் சினிமா வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. தமிழ் படங்கள் மட்டுமல்லாது, பாலிவுட், ஹாலிவுட் என பயணப்பட்டார் தனுஷ். ஐஷ்வர்யாவும் சினிமாவில் கவனம் செலுத்தினாலும் ஆன்மீகத்தின் பக்கம் பார்வையை திருப்பினார். கடந்த ஆண்டு அப்பா ரஜினிகாந்த் உடன் இமயமலைக்கு பயணப்பட்டார். பத்ரிநாத், கேதார்நாத் சென்று வந்தது முதலே நிறைய மாற்றங்கள் ஐஸ்வர்யாவின் வாழ்க்கையில் தென்பட ஆரம்பித்தது.

    ஆன்மீக பயணம்

    ஆன்மீக பயணம்

    ஆன்மீகத்தின் பக்கம் கவனத்தை திரும்பிய ஐஸ்வர்யா, யோகாவில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். பெண்களுக்காக திவா யோகா மையத்தை தொடங்கினார். யோகாவில் முழுவதுமாக அர்ப்பணிக்க விரும்புவதாகவும் அதனால் இல்லற வாழ்க்கையில் இருந்து விடுபட விரும்புவதாகவும் தனுஷ் இடம் கூறினாராம். தனுஷ் முதலில் ஏற்க மறுத்தாலும் தொடர் வற்புறுத்தல் காரணமாக ஐஸ்வர்யாவின் விருப்பத்திற்கு சம்மதம் கூறியதாகவும் தெரிகிறது.

    முடிவில் உறுதி

    முடிவில் உறுதி

    மகள், மருமகனின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் ரஜினிகாந்தை நிறையவே பாதித்துள்ளது. இருவரையும் அழைத்து பேசினாலும் பிரியவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இதனையடுத்தே இருவரும் பரஸ்பரம் தங்கள் முடிவை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+