Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இபிஎஸ் ஒரு எளியத் தலைவர்! பந்தா இல்லாத மனிதர்! ஓபிஎஸ் ஸை எளிதாக யாரும் பார்க்க முடியாது -ஜெமீலா

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமியை போல் ஒரு எளியத் தலைவரை இதுவரை தாம் பார்த்ததில்லை என அதிமுக பிரமுகர் ஜெமீலா தெரிவித்துள்ளார்.

அமமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளராக இருந்து கடந்த ஆண்டு அதிமுகவில் இணைந்த இவர், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார்.

இதனிடையே அதிமுகவில் செய்தித் தொடர்பாளர் பதவியோ அல்லது வேறு ஏதேனும் ஒரு முக்கியப் பதவியோ விரைவில் இவருக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து ஒன் இந்தியா தமிழிடம் அவர் பேசுகையில்,

பிரச்சனை இல்லை

பிரச்சனை இல்லை

''அதிமுகவில் ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லாம் நல்லபடியாக போய் கொண்டிருக்கிறது. ஜனநாயக முறைப்படி கட்சிக்கு தலைமை தேர்வு செய்யப்படுகிறது. இது வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத ஒன்று. தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர் தான் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக வர வேண்டும். எடப்பாடி பழனிசாமியை தான் 95% தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆதரிக்கிறார்கள். இதனால் அவர் தான் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக வர வேண்டும்.''

எளியத் தலைவர்

எளியத் தலைவர்

''இன்னொன்று உங்களிடம் சொல்ல வேண்டும், எடப்பாடி பழனிசாமியை போல் ஒரு எளிய தலைவரை தற்போதைய காலகட்டத்தில் வேறு எங்குமே பார்க்க முடியாது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவரை அணுகி தங்களின் குறைகள், கோரிக்களை தெரிவிக்கலாம். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை அப்படி எளிதாக யாரும் சந்தித்து விட முடியாது. அய்யா பிஸியாக இருக்கிறார் என்று தான் பதில் வரும். ஆனால் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை தொண்டர்களை சந்திப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்.''

அடுத்த லெவல்

அடுத்த லெவல்

''கட்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என நினைக்கிறார் இபிஎஸ். புதுமுகங்களை வளர்த்துவிட வேண்டும் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என விரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால் தான் இப்போது அவர் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என பெரும்பாலான நிர்வாகிகள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். பெரும்பாலான தொண்டர்களின் உணர்வை புரிந்து ஓபிஎஸ் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்.''

Recommended Video

    தொண்டர்களின் நம்பிக்கையை ஓபிஎஸ் இழந்து விட்டார்.. அதிமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு பேட்டி
    அதிமுக பொதுக்குழு

    அதிமுக பொதுக்குழு

    ''நான் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் இல்லை. சிறப்பு அழைப்பாளர்களுக்கு கடந்த பொதுக்குழுவில் அழைப்பு இல்லை என்பதால் நான் செல்ல முடியவில்லை. ஆனாலும் கட்சியின் சாதாரண தொண்டர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கே எனது ஆதரவு.''

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+