2 ஆண்டுக்கு முன் எடுத்த வீடியோ! இப்போ டிரென்டாக்கும் தமிழக பாஜகவுக்கு நன்றி! என்ஜாய்.. ஜோதிமணி எம்பி
சென்னை: 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் கொடுத்த பேட்டியை வைரலாக்கிய தமிழக பாஜகவுக்கு நன்றி, உங்களின் வெறுப்பு அரசியலை நான் தோலுரித்து காட்டிய முழு வீடியோவை வெளியிட்டுள்ளேன் பார்த்து மகிழுங்கள் என ஜோதிமணி எம்பி கிண்டல் செய்துள்ளார்.
Recommended Video
நான் தமிழகத்தைச் சேர்ந்தவள், எனக்கு ராமரை யாரென்றே தெரியாது என கரூர் எம்பி ஜோதிமணி கூறியது குறித்து வைரலாகி புயலை கிளப்பிய நிலையில் அது பழைய வீடியோ என கூறி ஜோதிமணி முழு வீடியோவையும் வெளியிட்டு விளக்கமளித்திருக்கிறார்.
ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த ஜோதிமணி எம்பி, நான் தமிழகத்தை சேர்ந்தவள், எனக்கு ராமரை யாரென்றே தெரியாது, எங்களுக்கு மூதாதையரை வழிபடும் பழக்கமே இருந்து வந்தது என கூறிய ஒரு பகுதி வீடியோவை மட்டும் பாஜகவினர் சமூகவலைதளங்களில் வைரலாக்கினர்.
ராமேஸ்வரம், மதுராந்தகம் என ராமாயணத்தில் இடம் பெற்ற பல இடங்களில் தமிழகத்தில் உள்ள நிலையில் ஜோதிமணிக்கு ராமரை தெரியாதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு ஜோதிமணி விளக்கமளித்துள்ளார்.

தமிழக பாஜகவுக்கு நன்றி தெரிவித்த ஜோதிமணி
அவர் மிகப் பெரிய தொடர் ட்வீட்டை போட்டுள்ளார். அதில் 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோவை வைரலாக்கியதற்கு தமிழக பாஜகவுக்கு நன்றி. முழு வீடியோ இங்கே இருக்கிறது. இதில் உங்களுடைய (பாஜக) வெறுப்புணர்வு, வன்முறை, மக்கள் விரோத அரசியல் ஆகியவற்றை நான் தோலுரித்துள்ளேன். பார்த்து என்ஜாய் செய்ங்க என கூறியுள்ளார்.

இந்துத்துவா
ஜோதிமணி வெளியிட்ட வீடியோவின் தமிழாக்கம்:
நிருபர்: வணக்கம். டைம்ஸ் நௌ-வுக்கு உங்களை வரவேற்கிறேன். என்னுடன் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இருக்கிறார். ஜோதிமணி, காங்கிரஸ் ஏன் இந்துத்துவத்துக்கு எதிராக இயங்குகிறது? நீங்கள் இந்து மதத்துக்கு எதிரான கட்சி என்ற பிம்பம் உங்களுக்கு பாதிப்பைத் தரவில்லையா?
ஜோதிமணி எம்.பி.: இந்துத்துவத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருக்கிறது. இந்துத்துவம் தற்போது இந்து மத முகமூடியை அணிந்து உலா வருகிறது. இந்து மதம் அன்பை போதிக்கும் மதம். இந்துத்துவம் என்பது வெறுப்பை விதைக்கும் அரசியல்.
சொல்லப் போனால் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல, ஒவ்வொரு இந்துவும், இந்துத்துவ சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டும். காரணம், அன்பும் நல்லிணக்கமும் நிறைந்த இந்து மதத்தை மடை மாற்றி வெறுப்பும் பிரிவினையும் நிறைந்த இயக்கமாக மாற்ற முனைகிறார்கள்.

பாஜகவும் ஆர் எஸ் எஸ்ஸும்
நிருபர்: யார்,யார் அப்படி மாற்ற முனைகிறார்கள்?
ஜோதிமணி எம்.பி.: வேறு யார், பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும்தான்..
நிருபர்: எப்படி?
ஜோதிமணி: அடிப்படையில் ஒவ்வொரு மதமும் அன்பையும் நல்லிணக்கத்தையும்தான் போதிக்க முயல்கிறது.இதுதான் பண்டைய காலத்தில் இருந்து உலகெங்கும் நடைமுறையில் இருக்கிறது.
முக்கியமாக நமது பண்டைய இந்தியாவில் இப்படித்தான் இருந்தது. அப்படி இருக்கும் போது இந்து மதத்தை அதன் தாத்பரியங்களுக்கு முற்றிலும் எதிராக அவர்களது அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துகிறார்கள்.
இந்து மதத்தை ஆன்மீக ரீதியில் அணுகும் ஒவ்வொரு மானுடருக்கும், பகவத் கீதையோ அல்லது பிற இந்து மத நூல்களையோ படித்த அல்லது படிக்கும் ஒவ்வொரு இந்துவுக்கும் தெரியும், இவர்கள் முன்னெடுப்பது இந்து மதமே அல்ல என்பது. அதனால்தான் காங்கிரஸ் கட்சி இந்துத்துவத்தை தீவிரமாக எதிர்க்கிறது.
இவர்கள் இந்து மதத்தை தங்கள் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தி தங்களது அரசியல் தோல்விகளை மறைக்க முயல்கிறார்கள். பார்த்தீர்கள் என்றால் இப்போது இந்தியா பொருளாதார தேக்கத்தை நோக்கி மட்டும் போகவில்லை. பொருளாதார தேக்கம் மற்றும் பண வீக்கம் இரண்டையும் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி மீது குற்றச்சாட்டு
நிருபர்: நீங்கள் இப்படி சொல்கிறீர்கள், ஆனால் உங்கள் காங்கிரஸ் கட்சி மீது கடந்த காலத்தில் சிறுபான்மையினருக்கு செல்லம் கொடுத்துக் கொண்டு இருந்ததாக தொடர் குற்றச்சாட்டுகள் இருக்கின்றனவே? சொல்லப் போனால் காங்கிரஸ் கட்சியை 'முஸ்லிம் கட்சி' என்றே கூட அழைத்தார்களே?
எனவேதான் நீங்கள் இந்து மதத்துக்கு எதிராக இயங்குகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதா?
ஜோதிமணி: இதெல்லாம் ஒவ்வொருவர் பார்வையைப் பொருத்தது. நான் ஏற்கனவே சொன்னேன்: இந்து மதத்தையும் இந்துத்துவத்தையும் குழப்பி மக்களுக்கு தவறான பிம்பங்களை பாஜக காட்டுகிறது.
ஒரு அரசியல்வாதியாக நான் மக்களை மத-, மொழி-, இன-, பாலின-ரீதியாக பிரித்துப் பார்க்க விரும்பவே மாட்டேன். இருந்தாலும் யோசித்துப் பாருங்கள்: யாரெல்லாம் இந்துக்கள்? விவசாயிகள் பெரும்பாலும் இந்துக்கள்தானே? சிறு, குறு தொழில்கள் செய்பவர்கள் யார்? இந்துக்கள்?
நிலவுடைமை யாரிடம் இருக்கிறது? பெரும்பாலும் இந்துக்களிடம்தானே? யாருக்கு இட ஒதுக்கீடுகள் கிடைக்கின்றன? இந்துக்களுக்குத்தானே? முஸ்லிம்களுக்கு கல்விப், பொருளாதார அரசியல்-ரீதிகளில் எந்த இட ஒதுக்கீடும் கிடைப்பதில்லை.
இந்த மூன்று அம்சங்கள்: வேளாண், சிறு-குறு தொழில் மற்றும் இட ஒதுக்கீடு இது மூன்றும் இந்தியாவின் முதுக்கெலும்பாக இருந்தவை. இவற்றை பாஜக முற்றிலும் அழித்து விட்டார்கள். விவசாயிகள் தற்கொலை குறித்து அரசு எதுவுமே செய்வதில்லை. சிறு, குறு தொழில்கள் அழியும் நிலைக்குப் போய் விட்டன...

மதங்களை மதித்துக் கொண்டு
நிருபர்: ஆனால் மதங்களை மதித்துக் கொண்டு கூடவே இவற்றையும் கவனிக்கலாமே?
ஜோதிமணி: அதைத்தான் காங்கிரஸ் செய்தது. யோசித்துப் பாருங்கள். ஒரு அரசியல்வாதிக்கும் ஊடகங்களுக்கும் இடையில் மதங்கள் குறித்த உரையாடல் ஏன் நிகழ வேண்டும்? இதெல்லாம் 2012க்குப் பின் துவங்கியது.
நான் கடந்த 23 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். நான் கலந்து கொண்ட விவாத மேடைகள் எல்லாம் பாலின சமத்துவம்,பொருளாதாரம்,வேளாண் துறை முன்னேற்றம் போன்றவை குறித்துதான் இருந்திருக்கின்றன.ஒன்று பொருளாதார வளர்ச்சி பற்றியோ அல்லது பொருளாதார தேக்கம் பற்றியோ மட்டும்தான் பேசிக் கொண்டு இருந்தோம். மதங்கள் பற்றியோ மதங்களை வைத்து மக்களை அடையாளப்படுத்துவது பற்றியோ பேசியதாக நினைவில்லை.

ராமர் கோயில் குறித்த பேச்சு
நிருபர்:நீங்கள் மதங்களை வைத்து அரசியல் செய்ததில்லை என்று சொல்கிறீர்கள்.ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 'இந்திய வளங்கள் மீது முஸ்லிம்களுக்குதான் முன்னுரிமை இருக்கிறது,'என்று பேசி இருக்கிறார்.
Congress ராமர் பாலத்துக்கு எதிராக affidavitதாக்கல் செய்தது.ராமர் என்று ஒருவர் இருப்பை கேள்வி கேட்டது.உங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்'ராமர் யார்?அவர் எங்கே படித்தார்?'என்று கேட்டார்.போன வருடம் கூட கபில் சிபல்'அயோத்தி தீர்ப்பை தேர்தல் முடியும் வரை ஒத்தி வைக்க வேண்டும்,' என கேட்டார்.
ஜோதிமணி: நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். எனக்கு ராமரைத் தெரியாதுதான். நாங்கள் இந்த மண்ணின் பூர்வ குடிகள். நாங்கள் எங்கள் மூதாதையாரை வணங்கும் வழக்கம் கொண்டவர்கள். நீங்கள் தமிழ்நாட்டில் யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்.
எங்கள் ஊரில் ராமர் கோயில்கள் கிடையாது. நான் வாரா வாரம் வழிபடப் போகும் கோயில் எங்கள் குலசாமி, மூதாதையாருடையது. இதே போல வடகிழக்கு மாநில மக்கள், ஆதி குடிகள், பட்டியலினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லாருமே தத்தமது இனத்து வழிபாட்டு முறைகளைத்தான் பின்பற்றுகிறார்கள்.
நான் ராமாயணம்,மகாபாரதம் எல்லாம் படித்திருக்கிறேன்.ஆனால் ராமரை வழிபடும் வழக்கம் எங்களிடம் இல்லை. தேசிய அரசியலுக்கு வரும் வரை இது குறித்து யோசிக்க வேண்டிய அவசியமே கூட எங்களுக்கு இருக்கவில்லை.

கடவுளின் இருப்பு
நிருபர்: அதெல்லாம் சரிதான். ஆனால் அதற்காக அடுத்தவர் வழிபடும் ஒரு கடவுளின் இருப்பையே கேள்விக்குள்ளாக்க முடியுமா?
ஜோதிமணி: அப்படியெல்லாம் செய்யவில்லை. சொல்லப் போனால் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை என்று மன்மோகன் சிங் சொல்லவே இல்லை. அவர் சொன்னதெல்லாம் இதுதான்:
யாருக்கெல்லாம் பொருளாதார வளர்ச்சியில் பங்கு கிடைக்கவில்லையோ, அவர்கள் முஸ்லிமோ, தலித்தோ, ஆதிகுடியோ அவர்களுக்கு தேச வளங்களில் முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்றுதான் பேசி இருக்கிறார். முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரமும் இதையே வேறு வகையில் குறிப்பிட்டுப் பேசி இருக்கிறார். இவ்வாறு ஜோதிமணி விளக்கமளித்துள்ளார்.
-
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
திமுகவை திணறடிக்க திட்டம் போடும் சிபிஐ.. பாஜக மெகா பிளான்.. மிகப்பெரிய அரசியல் ட்விஸ்ட் வருது -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்?












Click it and Unblock the Notifications