Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீக்ரெட் "பைல்ஸ்".. எடப்பாடி திறந்துவிட்ட பூதம்! "உடனே இங்கே வாங்க".. ஆளுநர் ரவிக்கு டெல்லி "மெசேஜ்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுவிட்டு வந்த நிலையில் தற்போது ஆளுநர் ஆர். என் ரவி டெல்லி செல்ல இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக உட்கட்சி மோதலுக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களுக்கு முன் டெல்லிக்கு சென்றார். பிரதமர் மோடி கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை வந்த போது அவரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்றார். ஆனால் தனியாக எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பிரதமர் மோடி அனுமதி கொடுக்கவில்லை.

கூட்டத்தோடு கூட்டமாக விமான நிலையத்தில் மட்டுமே எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி சந்தித்தார். அதற்கு முன் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். ஆனால் இந்த பயணத்திலும் எடப்பாடி பழனிசாமியால் பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை.

எடப்பாடி

எடப்பாடி

இப்படி இரண்டு முறை எடப்பாடியை தனியாக மோடி சந்திக்க நிலையில்தான் அவருக்கு டெல்லியில் இருந்து திடீரென அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் டெல்லி சென்ற எடப்பாடி அமித் ஷாவுடன் 20 நிமிடம் சந்திப்பு நடத்தினார். டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி கையில் பெரிய "ரெட்" லிஸ்ட் ஒன்றுடன் சென்றுள்ளதாக கூறப்பட்டது. அதாவது ஆக்சன் எடுக்கப்பட வேண்டியவர்களுக்கான லிஸ்ட் என்கிறார்கள்.

டெல்லி பயணம்

டெல்லி பயணம்

திமுகவில் உள்ளவர்கள் மீது இருக்கும் புகார்கள். அவர்கள் எடுத்த டெண்டர் குறித்த விவரங்கள் அடங்கிய லிஸ்டுடன் எடப்பாடி டெல்லிக்கு சென்றதாக கூறப்படுகிறது. திமுகவில் இவர்கள் எல்லாம் தவறு செய்துள்ளனர். இவர்கள் மீது ஆக்சன் எடுங்கள் என்று எடப்பாடி கோரிக்கை விடுத்துள்ளாராம். அதோடு சிபிஐ, அமலாக்கத்துறையை அனுப்பி வையுங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக திமுக புள்ளிகள் அடங்கிய லிஸ்டைதான் அவர் கொடுத்துள்ளார்.

ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

இந்த நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ரவியும் 26-ந்தேதி டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். 5 நாள் பயணமாக அவரது டெல்லி ப்ரோக்கிராம் அமைய உள்ளது. இதில், மோடி, அமித் ஷா உள்பட, சில முக்கிய அமைச்சர்களை சந்திக்கிறார். அரசியல் பயணமாக மட்டுமில்லாமல் இது பர்சனல் பயணமாகவும் இருக்க போகிறது. இந்த பயணத்தோடு தனிப்பட்ட நிகழ்வுகளையும் முடித்து விட்டு மாதத்தின் இறுதியில் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார் கவர்னர்.

5 நாட்கள்

5 நாட்கள்

இந்த 5 நாட்கள் அவர் முக்கிய தலைவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவுக்கு எதிராக எடப்பாடி கொடுத்துவிட்டு வந்த கோப்புகளைத் தொடர்ந்து டெல்லிக்கு கவர்னரை அழைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. எடப்பாடி கொடுத்த பைல்களில் சில "பூதங்கள்" இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி தந்த கோப்புகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொண்ட நிலையில், கவர்னர் அழைக்கப்பட்டுள்ளார் என்றும், அந்த கோப்புகள் கவர்னரிடம் ஒப்படைக்கப்பாட்டு அது குறித்து விவாதிப்படலாம் என்றும் அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+