Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்..மறு பிரேத பரிசோதனை.. டாக்டர்கள் குழுவை அமைத்த ஹைகோர்ட்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மறுபிரேத பரிசோதனைக்குப் பிறகு எந்த பிரச்சினையும் செய்யாமல் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Recommended Video

    Sylendra Babu பேட்டி | Kallakurichi School Girl வழக்கு CBCID-க்கு மாற்றம் | TamilNadu

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் தாக்கல் செய்துள்ள மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

    அப்போது நீதிபதி பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். வன்முறையின் பின்னணியில் இருப்பது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறை சம்பவம் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் எனவும் பெற்றோர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். வன்முறையாளர்களை கண்டறிய தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

     மாணவி மரணம்

    மாணவி மரணம்

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

     கள்ளக்குறிச்சி கலவரம்

    கள்ளக்குறிச்சி கலவரம்

    4வது நாளான நேற்றைய தினம் அவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி அவர்கள் தாக்க தொடங்கினர். பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசி தாக்கியும் தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயன்றனர். இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

    பேருந்துகளுக்கு தீ வைப்பு

    பேருந்துகளுக்கு தீ வைப்பு

    பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஹைகோர்ட்டில் மனு தாக்கல்

    ஹைகோர்ட்டில் மனு தாக்கல்

    இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

     நீதிபதி கேள்வி

    நீதிபதி கேள்வி

    இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு 49 வது வழக்காக பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா கோரிக்கை விடுத்தார். மனுவை விசாரித்த நீதிபதி அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.
    இதையடுத்து நீதிபதி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் எனவும், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லையா? போராட்டம் நடத்த அனுமதியளித்தது யார்? சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டால் நீதிமன்றம் எதற்கு? மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினர்

     திட்டமிட்ட வன்முறை

    திட்டமிட்ட வன்முறை

    வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும். பள்ளியில் படிக்கும் 4,500 மாணவர்களின் நிலை என்ன? அவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளன. இது கோபத்தில் நடந்த வன்முறையாக தெரியவில்லை. திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவே தெரிகிறது என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார். மேலும், அமைதிப்பூங்கா என்ற பெயர் எடுத்த தமிழகத்தில் அந்த நம்பிக்கையை குலைத்து விட்டதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.

     வாட்ஸ் அப் குழு வன்முறை

    வாட்ஸ் அப் குழு வன்முறை

    அதற்கு விளக்கமளித்த மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, மாணவியின் பெற்றோர் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை எனவும், முன்னாள் மாணவர்கள் வாட்ஸ் ஆப் குழு மூலம் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர் என விளக்கமளித்தார். அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதிடுகையில், ஏற்கனவே வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு விட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

     மறுபிரேத பரிசோதனை

    மறுபிரேத பரிசோதனை


    இதையடுத்து, மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்ட நீதிபதி, விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜீலியான ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் கோகுலநாதன் மற்றும் தடயவியல் துறை ஓய்வுபெற்ற இயக்குனர் சாந்தகுமாரி அடங்கிய மருத்துவர் குழுவையும் நியமித்து உத்தரவிட்டார்.

     இறுதிச்சடங்கு

    இறுதிச்சடங்கு

    இந்த மறு பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி, மாணவிதின் தந்தை வழக்கறிஞருடன் கலந்து கொள்ளவும் அனுமதித்தார். மறு பிரேத பரிசோதனைக்கு பின், வேறு எந்த பிரச்னையும் செய்யாமல் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு, அமைதியான முறையில் இறுதிச்சடங்கு நடத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

     கடுமையான நடவடிக்கை

    கடுமையான நடவடிக்கை

    மேலும் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், அதுகுறித்து விசாரிக்க சிறப்பு படையை உருவாக்க டிஜிபி க்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை குறித்து ஜூலை 29ம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக பேட்டிகள் கொடுக்க கூடாது எனவும், ஊடக விசாரணை மேற்கொள்ள கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது. அதைக் கேட்ட நீதிபதிகள், மனுத்தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+