கமல் சொன்ன நல்ல செய்தி இதுதான்! கூட்டணி குறித்து வெளிவந்த புது தகவல்! ஆச்சரியத்தில் திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்த நல்ல செய்தியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெறுவதால் இந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 Will Kamal announces his stand about with whom MNM make alliance?

கடந்த 2018ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் மாநாடு அமைத்து மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடிகர் கமல்ஹாசன தொடங்கினார். இதைத் தொடர்ந்து அப்போது நடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் 0.40 சதவீதம் வாக்குகளை பெற்றது.

2021 ஆம் ஆண்டு கூட்டணி: இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் ஐஜேகே, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 180 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 2.62 சதவீதம் வாக்கு சதவீதத்தை பெற்றது. கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதியை எதிர்த்து போட்டியிட்ட கமல்ஹாசன், வெற்றி படிகளின் நுனிகளை தொட்டுவிட்டு தோல்வி அடைந்தார். அது போல் புதுவையில் சட்டசபை தேர்தலில் 22 இடங்களில் போட்டியிட்டு 1.89 சதவீதம் வாக்குகளை பெற்றது.

காங்கிரஸுடன் இணக்கம்: இப்படி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸுடன் இணக்கம் காட்டி வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கூட கமல்ஹாசன் பங்கேற்றார். மேலும் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத் தேர்தலில் கூட காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருந்தார்.

கமல் யாருடன் கூட்டணி: எனவே கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் இணைய வாய்ப்பிருப்பதாகவும் அந்த அணியில் ஒரு தொகுதி கமலுக்கு ஒதுக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் இதுவரை திமுக தரப்புடன் கமல் கட்சி எந்த பேச்சுவார்த்தையையும் அதிகாரப்பூர்வமாக நடத்தவில்லை.

எத்தனை தொகுதி: இந்த நிலையில் திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி நேரடியாக கூட்டணி வைக்காமல் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது திமுக தலைமை தனது கூட்டணியான காங்கிரஸுக்கு ஒதுக்கும் இடங்களில் ஓரிரு தொகுதிகளை மக்கள் நீதி மய்யத்திற்கு காங்கிரஸ் உள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

இன்று அறிவிப்பா: இப்படி யூகங்கள் பறந்து வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், கூட்டணி குறித்த கேள்விக்கு இரு நாட்கள் பொறுத்திருங்கள் என்றார். அந்த வகையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சிக் கொடியேற்றி செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் நல்ல செய்தி வரும் என்றார். அப்போது செய்தியாளர்கள் அந்த நல்ல செய்தி எப்போது சார் என கேட்டதற்கு கெட்ட செய்திதான் திடீர்னு வரும், நல்ல செய்தி தாமதமாகவே வரும். அந்த நல்ல செய்தி வந்ததும் உங்களிடம் சொல்வேன் என்றார்.

அதிமுக, திமுகவுக்கு மாற்றாகவே மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய கமல்ஹாசன் தற்போது அக்கட்சிகளுடன் நேரடியாக கூட்டணி வைக்க மாட்டார் என்றே தெரிகிறது. இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் ஒரு தொகுதியில் கமல் போட்டியிட வாய்ப்பிருக்கிறது. அந்த தொகுதி தென் சென்னையா கோவையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+