சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செந்தில் பாலாஜியே திமுகவுக்கு வரும்போது.. அழகிரியை ஏன் சேர்க்க கூடாது?

அழகிரி கட்சிக்குள் இணைவது குறித்து கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விஸ்வரூபம் காட்டி காணாமல் போன மு.க.அழகிரி- வீடியோ

    சென்னை: திமுகவில் அழகிரி திரும்பவும் சேர்த்து கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு கனிமொழி பதிலளித்துள்ளார்.

    எப்படியோ கேட்டு பார்த்தும், கெஞ்சி பார்த்தும் கடைசிவரை அழகிரி கட்சிக்குள் சேர்த்து கொள்ளப்படவில்லை. திமுகவின் சில மூத்த தலைகள் கட்சிக்குள் அழகிரியை சேர்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டதாக தகவல்கள் கசிந்தன.

    எப்படி பார்த்தாலும் ஸ்டாலின் நினைத்திருந்தால் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் இணைத்திருக்கலாம், தென் மாவட்டங்களை பற்றி கவலைப்படாமல் அழகிரியை முழுசா நம்பி இருந்திருக்கலாம்.

    அழகிரி நிலை

    அழகிரி நிலை

    ஆனால் இதுவரை அழகிரி ஒதுக்கப்பட்டுத்தான் உள்ளார். இதே நிலைமைதான் கனிமொழிக்கும் உள்ளது. ஒதுக்கப்பட்டுள்ளது அழகிரிக்கு பகிரங்கமாக தெரிகிறது என்றால் கனிமொழிக்கு மறைமுகமாக தெரிகிறது. அவ்வளவுதான்.

    மாற்று கட்சி

    மாற்று கட்சி

    ஒருவேளை கனிமொழி கட்சிக்குள் செல்வாக்குடன் ஈடுபட்டிருந்தால் அழகிரியை இப்படி தனித்து விட்டிருக்க மாட்டார் என்றும் ஒரு பக்கம் கருத்து உள்ளது. தன் கட்சியில் இருந்த, தன் அண்ணனையே சேர்த்து கொள்ளாத ஸ்டாலின், மாற்று கட்சியிலிருந்த விவரமும், விவகாரமுமான செந்தில் பாலாஜியை தன்னுடன் இணைத்து கொண்டுள்ளார்.

    அழகிரியை சேர்க்கலாமே?

    அழகிரியை சேர்க்கலாமே?

    இது ஒருபக்கம் பலமாகவும், பலவீனமாகவும் பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜியை கட்சிக்குள் சேர்க்கும்போது ஏன் அழகிரியை சேர்க்க கூடாது என்றும் திமுகவினர் சிலரே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    ஏன் சேர்க்கவில்லை?

    ஏன் சேர்க்கவில்லை?

    நேற்றைக்கு தன் ஆதரவாளர்கள் 30 ஆயிரம் பேரை திரட்டி கொண்டு திமுகவில் இணைத்து விட்டார் செந்தில் பாலாஜி. இந்த நேரம் பார்த்து, கனிமொழியிடம், யார் யாருக்கோ பொறுப்பு தரும்போது, திமுகவில் இணைய வேண்டும் என்று நீண்ட காலமாக முயற்சி செய்து வரும் அழகிரியை ஏன் இன்னும் கட்சியில் சேர்த்து கொள்ளப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

    ஒதுங்கிய கனிமொழி

    ஒதுங்கிய கனிமொழி

    அதற்கு பதிலளித்த கனிமொழி, அதை மூத்த தலைவர்கள்தான் சொல்ல வேண்டும் என்று பட்டும் படாமலும் கூறி ஒதுங்கிக் கொண்டார். இந்த பதிலில், கனிமொழியின் நிலையும்தான் அடங்கி உள்ளது என்பதே உண்மை.

    English summary
    Kanimozhi talks about MK Azhagiri and She answered on rejoining Azhagiri in the Party
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X