வீடு தேடி வந்த கடவுள்..ராஜ ராஜ சோழனின் மறுபிறவியா கருணாநிதி..புட்டபர்த்தி சாய்பாபா சொன்னது இதுதான்!
சென்னை: ராஜ ராஜ சோழனின் மறுபிறவி அவர் அதனால் தான் அந்த மாமன்னனை நான் போய்ப் பார்த்தேன் என்று கருணாநிதியை நேரில் சந்தித்தது பற்றி சத்ய சாய்பாபா கூறியதாக பதிவு ஒன்று முகநூல் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. ராஜ ராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் தஞ்சை பெரிய கோவிலுக்கு 1000மாவது ஆண்டு விழா எடுத்த கருணாநிதி பற்றிய சுவாரஸ்ய பதிவு ஒன்றையும் பார்க்கலாம்.
சத்ய சாய் பாபா கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அன்று மாலை 4.25 மணிக்கு சாய்பாபா கருணாநிதி வீட்டுக்கு சென்றார். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சாய் பாபா கருணாநிதி வீட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் வீட்டுக்குள் இருந்த லிப்ட் மூலம் முதல் தளத்திற்கு சாய் பாபா சென்றார். அங்கு அவரை முதல்வர் கருணாநிதி வரவேற்றார்.
அவருடன் மனைவி தயாளு அம்மாள், அப்போதைய மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கருணாநிதியின் சகோதரி ஆகியோர் சாய்பாபாவை வரவேற்றனர். பின்னர் கருணாநிதியுடன் சுமார் முக்கால் மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார் சாய்பாபா. அவரிடம் தான் எழுதிய குறளோவியம், தாய் காவியம் ஆகியவற்றின்ஆங்கிலப் பதிப்புகளை கருணாநிதி வழங்கினார். முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் சாய்பாபாவிடம் ஆசிபெற்றார். பின்னர் விடைபெற்றுச் சென்ற சாய்பாபாவை வாசல்வரை வந்து கருணநிதி வழியனுப்பி வைத்தார். இந்த சம்பவம் இந்திய அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. நாத்திகமும், ஆத்திகமும் சந்தித்துக் கொண்ட அபூர்வ தருணம் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

பாபாவிடம் பேசிய கருணாநிதி
சாய் பாபா சென்ற பின் செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, "பாபாவிடம் தமிழ் பேசினேன். அவர் நன்றாகவே தமிழ் பேசுகிறார். நான் ஆன்மீகம் பேசவில்லை, அவரும் அரசியல் பேசவில்லை. சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் கிருஷ்ணா நதி நீர்த் திட்டத்தை நிறைவேற்ற உதவிய சாய்பாபாவுக்கு நன்றி தெரிவித்தேன். தமிழகத்தின் மேலும் பல நல்ல திட்டங்களுக்கும் உதவ வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்தேன் என்று கூறினார் கருணாநிதி.

வீடு தேடி வந்த கடவுள்
கருணாநிதி மற்றும் சாய்பாபா சந்திப்பு குறித்து அப்போது பேசிய நடிகை சௌகார் ஜானகி, 2007ம் ஆண்டு சத்ய சாய்பாபா சென்னைக்கு வந்திருந்தார். அவரது கார் போய்க்கொண்டே இருக்கும்போது, 'கலைஞர் வீட்டுக்குப் போங்க' என்று கார் ஓட்டுபவரிடம் சொன்னாராம், பாபா. அருகில் இருந்தவர், அவர் நாத்திகராச்சே.. அவர் வீட்டுக்கு எப்படி?' என இழுத்தாராம். நான் சொல்வதைச் செய்யுங்கள்' எனச் சொல்ல, கலைஞர் வீட்டின் முன்பு கார் நின்றிருக்கிறது. சத்ய சாய்பாபா கலைஞரிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். அந்தச் செய்தி வெளியானபோது, நடிகர் ரஜினி கடவுளைத் தேடி இவர் போகவில்லை என்றாலும், கடவுள் இவரைத் தேடி வந்துவிடுவார்' எனச் சொன்னதாக ஞாபகம் என்று சௌகார் ஜானகி கூறியிருக்கிறார்.

சத்ய சாய் பாபா
ரெபெல் ரவி என்பவர் எழுதியதாக முகநூல் ஒரு பதிவு ஒன்று உலா வருகிறது. அதில்,
கடந்த 2007ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியின் இல்லமான கோபாலபுரம் தேடி சத்ய சாய்பாபா வந்தார்.. உலகமே அசந்தது.. பாபாவை பார்க்க மைக்கேல் ஜாக்சன் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு கிடைக்காமலே இறந்து போனார்... சச்சின் பல நாள் காத்திருந்து நேரில் சந்தித்தார்.. எவர் வீட்டிற்கும் பாபா பிற்காலத்தில் போனது கிடையாது..

கோபாலபுரம் வந்தது ஏன்
பிரதமரோ, ஜனாதிபதியோ, தேடி வந்துதான் பாபாவைப் பார்க்க வேண்டும்..அப்படிப்பட்ட சத்ய சாய் பாபா, கலைஞரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, அவரது இல்லத்திற்கே போய், மாடி ஏறி கலைஞரைச் சந்தித்தது கண்டு ஆத்திகர்கள் ஆடிப்போனார்கள்.... சில நாத்திகர்கள் ஆத்திரப்பட்டார்கள்...பின்னாளில் பாபாவிடம் நெருக்கமாக இருந்த ஓர் ஆத்திகர் என்னிடம் இது குறித்த உண்மையைச் சொன்னார்...அவர்,ஒரு சத் சங்கத்தின் போது பாபாவைச் சந்தித்தாராம். நிறைய தமிழ் பக்தர்களும் அங்கு இருந்தனராம்.. அப்போது,அவர், கோபமாக, பாபாவிடம்.. "அந்த நாத்திகரை (கலைஞரை) நீங்கள் வீடு தேடிப்போகலாமா எனக்கேட்டாராம்...

ராஜ ராஜ சோழனின் மறுபிறவி
அதற்கு பாபா சொன்ன பதில் கேட்டு அனைவரும் வாயடைத்துப் போயினராம்..பாபா சொன்னாராம்..உங்களுக்கெலாம் அவர் கருணாநிதி..எனக்கு அவர் ராஜராஜ சோழன்..."ஆம்..ராஜ ராஜ சோழனின் மறுபிறவி அவர் அதனால் தான் அந்த மாமன்னனை நான் போய்ப் பார்த்தேன் என்றாராம்..இதே விஷயத்தை கணபதி ஸ்தபதியும் என்னிடம் கூறியுள்ளார்..தமிழகத்தின் அத்தனை கட்டட அதிசயங்களையும் கலைஞரே நிர்மானித்தார்...
எனக்கு மறுபிறவியில் நம்பிக்கையில்லை.. ஆனால், கலைஞர் நவீன ராஜராஜ சோழன் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை... என்று ரெபெல் ரவி எழுதியுள்ளார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications